நிர்ஜலா ஏகாதசி, கோபத்ம விரதம்: பெருமாளை வழிபட துன்பங்கள் அனைத்தும் நீங்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2023 10:06
ஆனி வளர்பிறை ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர். பீமன் அனுஷ்டித்த விரதம் என்பதால் பீம ஏகாதசி என்றும் கூறப்படுகிறது. நிர்ஜலா ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள். அவர்களின் மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைவார்கள். ஆனி அமாவாசையை அடுத்து வரும் சுக்ல பக்ஷ ஏகாதசி கோபத்ம விரத நாளாகும். இந்நாளில் அன்னதானம் செய்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்பது ஐதீகம். நமது நாட்டில் ‘கோ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசு பூஜை செய்து அகத்திக்கீரையை அளித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.