பதிவு செய்த நாள்
24
ஜூலை
2023
10:07
கோவை : கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ஆடி மாதம் இரண்டாவது சோமவார திங்கள் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தில் சிவன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சோமவாரத்தில் சிவனை தரிசனம் செய்தால் அவரவர் வேண்டும் பலனை ஈசன் நிச்சயம் தருவார் என்பது உறுதி.
சிவப்பெருமானுக்கு திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் சோமவார விரதம் என்று பெயர். சோமவார நாளில் இறைவனை வழிபடுவதால் பாவங்கள் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய் நீக்கும், எல்லா நற்பலன்களையும் சோமவார விரதம் தரும். ஆடி சோமவாரமான இன்று ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து வாழ்வில் உயர்வடைவோம்.