ஓணம் பண்டிகையில் பூக்கோலம் முக்கிய இடம் பெறுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2023 01:08
ஓணம் பண்டிகையில் இடம் பெறும் பூக்கோலம் பிரசித்தம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகிய பூக்களால் கோலத்தை அலங்கரிப்பர். மகாபலி மன்னரை வரவேற்கும் விதத்தில் வாசலில் பூக்கோலம் இடம் பெறுகிறது. நறுமணம் கமழும் பூக்களைப் போல உள்ளத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதே இக்கோலத்தின் நோக்கம். மனதைக் கவரும் இக்கோலங்கள் கேரளத்தின் கலைநயத்தை பறைசாற்றுகிறது.