பதிவு செய்த நாள்
29
ஆக
2023
11:08
ஓண சத்ய..: ஓணத்தன்று கேரள மக்கள் சாப்பிடும் உணவை ஓண சத்ய என்பர். இதற்கு ஓண விருந்து என்று பொருள். கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு தான் நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். புத்தம் புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக் காய் குழம்பு என உணவுகள் தயார் செய்யப்பட்டு அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு படைக்கப்படும். பின், குடும்பத்துடன், சாப்பிடுவர்.
மகாபலி மன்னர் மலைநாடாக விளங்கிய கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். அவரது ஆட்சி செழிப்பாக இருந்தது. தானம், தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கினார். அவரது ஆட்சி போல், இன்றும் தங்கள் மண் செழிப்புடன் திகழ வேண்டும் என்ற கருத்தில், மகாபலியை நினைவு கூர்ந்து, அவரை மீண்டும் வரவேற்கும் வகையில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது.