சந்திரன் வழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். உள்ளம் ஆற்றலுடன் விளங்க சந்திரனின் அனுக்கிரகம் முக்கியம். பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும். பவுர்ணமியன்று சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம் குறையும். நோய் நீங்கும்.
சிவசக்தியால் ஒளிரும் சந்திரன்; சிவபெருமானுக்கு சந்திரசேகர் என்று பெயர் உள்ளது. அதற்கு காரணமே அவர் தலையில் இருக்கும் பிறைதான். சந்திரன் என்றால் நிலா என்று பொருள் சேகர் என்பதற்கு உச்சம் என்பது பொருள். உச்சத்தில் நிலவை கொண்டவனே என்பதன் அர்ததம்தான் சந்திரசேகர் என்பதாகும். இதற்கு பிரம்மாவின் மகனான தக்ச பிரஜாபதி 27 நட்சத்திரங்களை தன் மகள்களாக கொண்டிருந்தார். அவரின் அனைத்து மகள்களும் சந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டனர். திருமணத்தின் போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான். பிரஜாபதியின் சாபத்தால் சந்திரன் கடலுக்குள் தஞ்சம் புகுந்தார். நிலவு இல்லாததால் இயற்கையின் சமநிலை சீர்குலைந்தது, இயற்கையை சார்ந்திருந்த அனைத்து உயிரினங்களும் இதனால் பாதிப்படைந்தனர். எனவே தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுமப்டி வேண்டினர். தன்னிடம் இருந்த பாதி ஒளியை வைத்துக்கொண்டு நிலா சிவபெருமானின் தலையில் தஞ்சமடைந்தார். சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரனுக்கு சிவபெருமான் அடைக்கலம் கொடுத்தார். சிவபெருமான் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரனின் சாபம் நீங்கியது. அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். சிவபெருமான் நிலவை தலையில் அணிந்துகொண்ட பிறகு தன் சக்தி மூலம் அடுத்த 15 நாட்களுக்கு நிலவின் ஒளியை அதிகரித்தது. இன்று சிவசக்தியால் ஒளிரும் சந்திரனை கிரிவலம் வந்து வணங்க சிறப்புடன் வாழலாம்.