பதிவு செய்த நாள்
11
செப்
2023
10:09
நவீன தமிழ் கவிதைகளுக்கு முன்னோடி மகாகவி பாரதி தான். அவரது கவிதைகளில் இனிமை, எளிமை நிறைந்திருக்கும். தமிழின்பெருமை, தமிழர் நலன், தேசப்பற்று, பெண் தேச விடுதலைக்கு ஆதரவாக ஓங்கி ஒலித்த, தனித்துவம் மிகுந்தகுரல் அவருடையது. அவர் கவிஞர் மட்டுமல்ல... சிறந்தஎழுத்தாளர், பத்திரிகையாசிரியராகவும் விளங்கியவர். 7 வயதில் கவிதைபாடத்துவங்கியவர் பாரதி. இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், வங்கம் பயின்றவர் அவர். இத்தனை மொழிகளில் புலமைபெற்றதால் தான், ‘யாம் அறிந்தமொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம்’ என மனம் திறந்து சொன்னார் மகாகவி. நாட்டின் விடுதலையில் தீவிர தாகம் கொண்டபாரதி 1905ம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார். வ.உ.சி.,யுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இந்தியாவார இதழை நாட்டின் விடுதலைப்போராட்டத்திற்கு பயன்படுத்தினார். அவரது இதழ்களில் வெளியான பாடல்கள், கேலிச்சித்திரங்கள் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திற்கு கைகொடுத்தன. அக்கால இளைஞர்களுக்கு சுதந்திர வேட்கையை ஏற்படுத்தின. தேசிய உணர்வு ததும்பும் கவிதைகளைப்படைத்து மக்களை ஒருங்கிணைத்தகாரணத்தால் தேசியக்கவிஞர் என போற்றப்பட்டவர் பாரதி. அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். நூறாண்டானாலும் நெகிழாத புகழ் படைத்த பாரதியை இன்று நினைவு கூறுவோம்.