பிரதோஷம்: சிவனை நினைத்தாலும் போதும்.. நிம்மதி வந்து சேரும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2023 10:09
இறைவன் நமது பாவத்தை எல்லாம் மன்னித்து அருள்தரும் காலமே பிரதோஷம். பிரதோஷம் சிவ வழிபாடுகளில் மிக முக்கியமானதாகும்.பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபடுட வேண்டியது உடனே கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது. சிவன், நந்தியை வழிபட துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது நல்லது. அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் என்றும் அந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே நடைபெற ஆசீர்வதிக்கும் என்பது நம்பிக்கை. அதிலும் இவ்வேளையில் சிவபெருமானை தரிசனம் செய்தாலே நமக்கு நற்பலன்கள் உண்டாகும்.