சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும். கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்யலாம். இன்று பக்தியுடன் வழிபட்டால் பரமனே நேரில் வருவார். விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். இன்று ஈசனை வழிபட நல்லதே நடக்கும். துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
சிவன் படம் வைத்து வீட்டிலேயே பூஜை செய்யலாம். வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாயநம நமசிவாய என மந்திரம் சொல்லலாம்