சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
561. காணாத தூர நீணாத வாரிகாதார வாரம தன்பினாலேகாலாளும் வேளும் ஆலால நாதர்காலால் நிலாவுமு னிந்துபூமேல்நாணான தோகை நூலாடை சோரநாடோர்க ளேசஅ ழிந்துதானேநானாப வாத மேலாக ஆகநாடோறும் வாடிம யங்கலாமோசோணாச லேச பூணார நீடுதோளாறு மாறும்வி ளங்குநாதாதோலாத வீர வேலால டாதசூராளன் மாளவெ குண்டகோவேசேணாடர் லோகம் வாழ்மாதி யானைதீராத காதல்சி றந்தமார்பாதேவாதி கூடு மூவாதி மூவர்தேவாதி தேவர்கள் தம்பிரானே.562. காரா டக்குழ லாலா லக்கணைகண்கள் சுழன்றிட வேமு கங்களினாலா பச்சிலை யாலே மெற்புசிமஞ்சள் கலந்தணி வாளி கொந்தளகாதா டக்கலன் மேலா டக்குடியின்ப ரசங்குட மார்ப ளிங்கொளி கொங்கைமாதர்காசா சைச்செய லாலே சொக்கிடுவிஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்போலே நற்றெரு வூடா டித்துயல்தொங்கல் நெகிழ்ந்திடை யேது வண்டிடகால்தா விச்சதி யோடே சித்திரமென்ப நடம்புரி வாரு டன்செயல் மிஞ்சலாகிச்சீரா டிச்சல நாள்போய் மெய்த்திரைவந்து கலந்துபி ரோட வங்கமொடூடா டிப்பல நோயோ டுத்தடிகொண்டு குரங்கென வேந டந்துசொல்சீயோ டிக்கிடை பாயோ டுக்கியடங்கி யழிந்துயி ரோடு ளைஞ்சொளி யுங்கண்மாறிச்சேரா மற்பொறி கேளா மற்செவிதுன்பமொ டின்பமு மேம றந்துபின்ஊரார் சுற்றமு மாதோர் மக்களுமண்டியு மண்டையு டேகு விந்திதுசீசீ சிச்சிசி போகா நற்சனியன்கட வென்றிட வேகி டந்துடல் மங்குவேனோமாரோன் முப்புர நீறா யுற்றிடஅங்கி யுமிழ்ந்திடு வோரி பம்புலிதோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடைகங்கை யிளம்பிறை யார ணிந்தவர்மாடே றிக்கட லாலா லத்தையுமுண்டவரெந்தை சிவாநு பங்குறை யென்றன்மாதாமாலோ னுக்கிளை யாள்மா பத்தினியம்பிகை சங்கரி மோக சுந்தரிவேதா மக்கலை ரூபாள் முக்கணிரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்மாஞா னக்கும ராதோ கைப்பரியின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் தொண்டுபாடச்சூரார் மக்கிட மாமே ருக்கிடஅங்கட லெண்கிரி யோடி பங்கொடுதீபே ழற்றிட பாதா ளத்துறைநஞ்சர வின்பண மாயி ரங்கெடசூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடிவிண்கணி றைந்திட வேந டம்புரி கின்றவேலாசோர்வே தத்தலை மேலா டிச்சுகபங்கய செங்கர மோட கம்பெறவாகா னக்குற மாதோ டற்புதமங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்தூணோ டிச்சுட ராகா சத்தையணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் தம்பிரானே563. காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடியகாகளம டங்கவுமு ழங்கு மதனாலேகாலடர வம்பமளி மேலடர வந்துபொருகாமன்விடு விஞ்சுகணை அஞ்சு மலராலேஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததெனஓரிரவு வந்தெனது சிந்தை யழியாதேஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமுலாவிய டம்பமலர் தந்த ருளுவாயேஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடையராதிபர வும்படிநி னைந்த குருநாதாஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவியாளுமுர முந்திருவும் அன்பு முடையோனேமேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரியவேலையலை யும்பகையும் அஞ்ச விடும்வேலாமேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிருவீதியிலெ ழுந்தருளி நின்ற பெருமாளே.564. கீத விநோத மெச்சு குரலாலேகீறு மையார் முடித்த குழலாலேநீதி யிலாத ழித்து முழலாதேநீமயி லேறி யுற்று வரவேணும்சூதமர் சூர ருட்க பொருசூராசோண கிரீயி லுற்ற குமரேசாஆதியர் காதொ ருச்சொ லருள்வோனேஆனை முகார்க னிட்ட பெருமாளே.565. குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெகுலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெகுமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ குழையாதகுணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெகுலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெகுடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ கொடியேன்யான்பொருளிளமை கலைமனமு மேகப் போக்கியபுலையனிவ னெனவுலக மேசப் போக்கெனபொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் பெருகாதேபுதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெபொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாத்தெனபுகழடிமை தனையுனது பார்வைக் காத்திட நினையாதோஅரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமுமணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெஅறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய அறிவோனேஅழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்தருமமுது சரவணையில் வாவித் தேக்கியெஅறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய இளையோனேசுரருலவ அசுரர்கள் மாளத் தூட்படதுயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரமசுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட முனிவோனேதுடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்துணைமலரி னணுகிதினை காவற் காத்தனைகரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை பெருமாளே.566. குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலிகுலவனு மாய்நாடு காடொடு தடுமாறிக்குனிகொடு கூனீடு மாகிடு கிழவனுமாயாவிபோய்விடவிறகுடனே தூளி யாவது மறியாதாய்ப்பழயச டாதார மேனிகழ் கழியுடல் காணா நிராதரபரிவிலி வானாலை நாடொறு மடைமாறிப்பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாதபோதகபதியழி யாவீடு போயினி யடைவேனோஎழுகடல் தீமுள மேருவு மிடிபட வேதாவும் வேதமுமிரவியும் வாய்பாறி யோடிட முதுசேடன்இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரியிருபிள வாய்வீழ மாதிர மலைசாயஅழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்அவுணர்த மாசேனை தூளெழ விளையாடிஅமரினை மேவாதசூரரை அமர்செயும் வேலாயுதாவுயர்அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே.567. கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்றுகேவலம தான அற்ப நினைவாலேகேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்தகேடுறுக வேநினைக்கும் வினையாலேவேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்மேதினியெ லாமுழற்று மடியேனைவிடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்துவீறுமயில் மீதிலுற்று வருவாயேநீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்துநீடுபுகழ் தேவரிற்கள் குடியேறநீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்தநீலநிற மால்தனக்கு மருகோனேசோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்சோபைவட கோபுரத்தி லுறைவோனேசோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றிதோளின்மிசை வாளெடுத்த பெருமாளே.568. கோடான மடவார்கள் முலைமீதேகூர்வேலை யிணையான விழியூடேஊடாடி யவரோடு முழலாதேஊராக திகழ்பாத மருள்வாயேநீடாழி சுழல்தேசம் வலமாகநீடோடி மயில்மீது வருவோனேசூடான தொருசோதி மலைமேவுசோணாடு புகழ்தேவர் பெருமாளே.569. கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்திகூறுசெய்த ழித்து ரித்து நடைமாணார்கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்டகோபநுத லத்த ரத்தர் குருநாதாநீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்புநீறெழமி தித்த நித்த மனதாலேநீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்தநீலமயில் தத்த விட்டு வரவேணும்ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்திஆரமது மெத்து சித்ர முலைமீதேஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றிஆறிருதி ருப்பு யத்தில் அணைவீராதேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்திசீருறவு ளத்தெ ரித்த சிவவேளேதேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்ததேவர்சிறை வெட்டி விட்ட பெருமாளே.570. சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்குமதிலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கயதிருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் தனிலேறிச்செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழைதனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணிசெயலினை யொத்துத் தயங்கு வஞ்சக விழிசீறிப்புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்பதமல ருக்குட் பணிந்த ணிந்தணிபுரிவளை கைக்குட் கலின்க லென்றிட அநுராகம்புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையிலுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடுபுணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் மறவேனேகலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடைமலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திடகணகண கட்கட் கணின்க ணென்றிட நடமாடும்கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தருமுருகபு னத்திற் றிரிந்த மென்கொடிகனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் புயவீராஅலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படையவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட வருவோனேஅடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் பெருமாளே.571. சிவமா துடனே அநுபோ கமதாய்சிவஞா னமுதே பசியாறித்திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்திகைலோ கமெலா மநுபோகிஇவனே யெனமா லயனோ டமரோரிளையோ னெனவே மறையோதஇறையோ னிடமாய் விளையா டுகவேயியல்வே லுடன்மா அருள்வாயேதவலோ கமெலா முறையோ வெனவேதழல்வேல் கொடுபோ யசுராரைத்தலைதூள் படஏழ் கடல்தூள் படமாதவம்வாழ் வுறவே விடுவோனேகவர்பூ வடிவாள் குறமா துடன்மால்கடனா மெனவே அணைமார்பாகடையேன் மிடிதூள் படநோய் விடவேகனல்மால் வரைசேர் பெருமாளே.572. சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் துன்பமேவுசெனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந் தொன்றுநாயேன்கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் டன்பரோடேகலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன் சிந்தியாதோதனனதன தனனதன தந்தனந் தந்தனந்தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் தண்டர்பேரிதடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்டிமிடிமிட டிகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் சிந்திமாளச்சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண் டஞ்சல்பாடத்திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்கவுரிமுன முருகவொரு கங்கைகண் டன்புறுந்திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந் தம்பிரானே.573. சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றுநளினத்தி லப்புவென ரத்த முற்றிசுகசுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை வந்துகோலத்தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிகவட்ட மிட்டுடல் வெப்ப முற்றுமதிசொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினடை விஞ்சையாலேகக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலையைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை அந்தமேவிக்கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயிலொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறிகட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல் மங்குவேனோதெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிடணற்கு நத்தரச ளித்து முத்திகொடுசித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் மருகோனேசெக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரியிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகுசித்தனைத்தையும்வி ழித்தசத்தியுமை தந்தபாலாதர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலையுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்டதிசைதட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் மண்டும்வேலாதத்தை வித்ருமநி றத்தி முத்தணிகுறத்தி கற்பகவ னத்தி சித்தமவைதக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ் தம்பிரானே.574. செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலைகும்பத் தந்திக் குவடென வாலியதெந்தப் பந்தித் தரளம தாமென விடராவிசிந்திக் கந்தித் திடுகளை யாமுனதங்கத் தம்பொற் பெதுவென வோதுவதிண்டுப் புந்தித் திடுகனி தானுமு னிதழாமோமஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடைகஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிளவஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென முறையேயவந்தித் திந்தப் படிமட வாரொடுகொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழுமந்தப் புந்திக் கசடனெ நாளுன தடிசேர்வேன்நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடுதிங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை யுகிராலேநந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வரநந்திக் கம்பத் தெழுநர கேசரிநஞ்சக் குண்டைக் கொருவழி யேதென மிகநாடிவெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகிவிந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் புனமீதேவெண்டித் தங்கித் திரிகிழ வாவதிதுங்கத் துங்கத் கிரியரு ணாபுரிவெங்கட் சிங்கத் தடிமயி லேறிய பெருமாளே.575. செயசெய அருணாத் திரிவிச யநமச்செயசெய அருணாத் திரிமசி வயநச்செயசெய அருணாத் திரிநம சிவயத் திருமூலாசெயசெய அருணாத் திரியந மசிவச்செயசெய அருணாத் திரிவய நமசிச்செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் தெனமாறிசெயசெய அருணாத் திரிதனில் விழிவைத்தரகர சரணாத் திரியென உருகிச்செயசெய குருபாக் கியமென மருவிச் சுடர்தாளைச்சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்திருவடி சிவவாக் கியகட லமுதைக் குடியேனோசெயசெய சரணாத் திரியென முநிவர்க்கணமிது வினைகாத் திடுமென மருவச்செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் சுடும்வேலாதிருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்கடிதலை தெரியாப் படிநிண அருணச்சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் புகல்வோனேசெயசெய சரணாத் திரியெனு மடியெற்கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் குருநாதாதிகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்குறமகள் முலைமேற் புதுமண மருவிச்சிவகிரி யருணாத் திரிதல மகிழ்பொற் பெருமாளே.576. தமரகு ரங்களுங் காரி ருட்பி ழம்புமெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்துதழலுமிழ் கண்களுங் காள மொத் கொம்பு முளகதக் கடமாமேல்தனிவரு மந்தகன் பாசம் விட்டெறிந்துஅடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்துதமரழ மைந்தருஞ் சோக முற்றிரங்க மரணபக் குவமாநாள்கமலமு கங்களுங் கோம ளத்தி லங்குநகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்குகனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க தமுமடற் சுடர்வேலுங்கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்தமயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கைகழலொலி தண்டையங் காலு மொக்க வந்து வரமெனக் கருள்கூர்வாய்இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சிஅகில தலம்பெறும் பூவை சத்தி யம்பையிளமுலை யின்செழும் பால்கு டித்தி லங்கு மியல்நிமிர்த் திடுவோனேஇறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்கமுரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்றரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த அயிலுடைக் கதிர்வேலாஅமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டுகழுவி லுதைந் துதைந் தேற விட்டு நின்றஅபிநவ துங்ககச் காந திக்கு மைந்த அடியவர்க கெளியோனேஅமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கைதனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொலருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த அறுமுகப் பெருமாளே.577. தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் சுவைசேருந்தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்சரிரர்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் சுடர்பாயக்குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் கொடிமாதர்குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்சரணூபுர குரலோசையு மோந்திடு மாண்டலையின்கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுன் தகையேனேதிமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் றியல்பேரிதிசைமுடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்கரிதேர்பரி யசுரர்கள் மாண்டிட நீண்டரவின்சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் கதிர்வேலாகமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவன்கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் குரவோனேகடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண் பெருமாளே.578. தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்துசடையை வளர்த்துப் புரிந்து புலியாடைசதிரொ டுவப்பப் புனைந்து விரகொ டுகற்கப் புகுந்துதவமொ ருசத்தத் தறிந்து திருநீறுகலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்துகதறு நிலைக்கைக் கமர்ந்த எழிலோடேகனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்துகவலை யொழித்தற் கிரங்கி யருள்வாயேஅலைக டலிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்துமமரு லகத்திற் புகுந்து முயரானைஅருளொ டுகைப்பற றிவந்து மருண கிரிப்புக் கிருந்துமறிவு ளபத்தர்க் கிரங்கு மிளையோனேமலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்துவறிது நகைத்திட் டிருந்த சிவனார்தாம்மதலை புனத்திற் புகுந்து டிவுற்றுத் திரிந்துமறம யிலைச்சுற் றிவந்த பெருமாளே.579. திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் மிகநாணார்சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிகளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்சிரித்து மானடர் சித்தமு ருக்கிகள் விழியாலேவெருட்டி மேல்விழு பப்பற மட்டைகள்மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினைமினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி மிகநீறால்விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனைவிடுத்துநானொரு மித்திரு பொற்கழல் பணிவேனோதரித்த தோகண தக்கண செக்கணகுகுக்கு கூகுகு குக்குகு குக்குகுதகுத்த தீதிகு தக்குகு திக்குகு எனதாளந்தடக்கை தாளமு மிட்டியல் மத்தளமிடக்கை தாளமு மொக்க டித்தொளிதரித்த கூளிகள் தத்திமி தித்தென கணபூதம்அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடுமிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழலடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண அறவேதான்அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறிதிருக்கை வேல்தனை விடடரு ளிப்பொரும்அருட்டு காவரு ணைப்பதி யுற்றருள் பெருமாளே.580. தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சுதேனளி சூழ மொய்த்த மலராலேசீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்டசீத நிலாவெ றிக்கு மனலாலேபோதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்டபோர்மத ராஜ னுக்கு மழியாதேபோகமெ லாநி றைத்து மோக விடாய்மி குத்தபூவையை நீய ணைக்க வரவேணும்மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சைமாயனு மாத ரிக்கு மயில்வீராவானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்வாரண மான தத்தை மணவாளாமேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்துவீதியின் மேவி நிற்கு முருகோனேமேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்வேலடை யாள மிட்ட பெருமாளே.581. தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்குதோகை யர்க்கு நெஞ்ச மழியாதேசூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்றுசூழ்பி ணிக்க ணங்க ளணுகாதேபாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்துபாசம் விட்டெறிந்து பிடியாதேபாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்தபாடல் மிக்க செஞ்சொல் தரவேணும்வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்பவீர பத்ர கந்த முருகோனேமேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்துவேலை யிற்றொ ளைந்த கதிர்வேலாகோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்தகோம ளக்கு ரும்பை புணர்வோனேகோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்தகோபு ரத்த மர்ந்த பெருமாளே.582. பாண மலரது தைக்கும் படியாலேபாவி யிளமதி கக்குங் கனலாலேநாண மழிய வுரைக்குங் குயிலாலேநானு மயிலி லிளைக்குந் தரமோதான்சேணி லரிவை யணைக்குந் திருமார்பாதேவர் மகுட மணக்குங் கழல்வீராகாண அருணையில் நிற்குங் கதிர்வேலாகாலன் முதுகை விரிக்கும் பெருமாளே.583. பாலாய் நூலாய் தேனாய் நீளாய்பாகாய் வாய்சொற் கொடியார்தாம்பாடா வாடா வேடா வாலேபாடா யீட்ற் றிடைபீறுந்தோலா லேகா லாலே யூனாலேசூழ் பாசக் குடில்மாசுதோயா மாயா வோயா நோயால்சோர்வாய் மாளக் கடவேனோஞாலா மேலா வேதா போதாநாதா சோதிக் கிரியோனேஞானா சாரா வானாள் கோனேநானா வேதப் பொருளோனேவேலா பாலா சீலா காராவேளே வேடக் கொடிகோவேவீரா தாரா ஆறா தாராவீரா வீரப் பெருமாளே.584. புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேகபொறியுட லிறந்து போன தளவேதுன்புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவிபொருளென நினைந்து நாயெ னிடர்தீரமணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறுமணிகிரி யிடங்கொள் பாநு வெயிலாசைவரிபர வநந்த கோடி முனிவர்கள் புகழ்ந்து போதமயில்மிசை மகிழ்ந்து நாடி வரவேணும்பணைமுலை யரம்பைமார்கள் குயில்கிளி யினங்கள்போலபரிவுகொ டுகந்து வேத மதுகூறப்பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்படை கட லிறந்து போக விடும்வேலாஅணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போலஅமளியில் களங்க ளோசை வளர்மாதுஅரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போகஅருணையின் விலங்கல் மேவு பெருமாளே.585. புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்பொறையி லாத கோபீகன் முழுமூடன்புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதிபொறிக ளோடு போய்வீழு மதிசூதன்நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரிநெறியி லாத வேமாளி குலபாதன்நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்நினையு மாறு நீமேவி யருள்வாயேசிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்சிதையு மாறு போராடி யொருசீதைசிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறுதிறமி யான மாமாயன் மருகோனேஅலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவிஅமர தாடி யேதோகை மயிலேறிஅதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்அருணை மீதி லேமேவு பெருமாளே.586. போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்பாரியைப் பொற்குவையுச் சிப்பொழுதிலீயும்போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்தோரைமெச் சிப்பிரியப் பட்டுமிடிபோகத்த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்தாரமுட் பட்டதிருட் டுக்கவிகள்பாடித்தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்சேல்வளைப் பட்டடிமைப் பட்டுவிடலாமோஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்றாதரிக் கைக்கருணைத் துப்புமதில்சூழும்ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்காகவெற் றிக்கலபக் கற்கியமர்வோனேதோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்தூணிமுட் டச்சுவறத் திக்கிலெழுபாரச்சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்சூரனைப் பட்டுருவத் தொட்டபெருமாளே.587. மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்மீனை நிரப்பிக் குனித்து விட்டணைவாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை வடிவேலைவாளை வனத்துற் பலத்தி னைச்செலமீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்மாய வலைப்பட் டிலைத் துடக்குழல் மணநாறும்ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழுவூறு முபத்தக் கருத்த டத்தினையூது பிணத்தைக் குணத்ர யத்தொடு தடுமாறும்ஊசலை நித்தத் த்வமற்ற செத்தையுபாதியை யொப்பித் துனிப்ப வத்தறவோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை தெளியாதோசானகி கற்புத் தனைச்சு டத்தனசோக வனத்திற் சிறைப் படுத்தியதானை யரக்கற் குலத்த ரத்தனை வருமாளச்சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்வாலி யுரத்திற் சரத்தை விட்டொருதாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் மருகோனேசோனை மிகுத்துத் திரட்பு னத்தினிலானை மதத்துக் கிடக்கு மற்புதசோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ மணிநீபத்தோள்கொடு சக்ரப் பொருப்பி னைப்பொடியாகநெ ருக்கிச் செருக்க ளத்தெதிர்சூரனை வெட்டித் துணித்த டக்கிய பெருமாளே.588. முகத்து லக்கிக ளாசா ரவினிகள்விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் முந்துசூதுமொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலைபலர்க்கும் விற்பவர் நானா வநுபவமுயற்று பொட்டிகள் மோகா வலமுறு கின்றமூடர்செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை சிந்தைமாயத்திரட்பொ றிச்சிகள் மாபா விகளபகடத்த சட்டைகள் மூதே விகளொடுதிளைத்த லற்றிரு சீர்பா தமுமினி யென்றுசேர்வேன்தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகுசெகுச்செ குச்செகு சேசே செககணதொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோதுடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடுதிகுத்தி குத்திகு தீதோ எனவொருதுவக்க நிர்த்தன மாடா வுறைபவர் தொண்டர்பேணும்அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்வளர்த்த கற்பக மாஞா லியுமகிழவுற்ற நித்தபி ரானே அருணையில் நின்றகோவேஅமர்க்க ளத்தொரு சூரே சனைவிழமுறித்து ழக்கிய வானோர் குடிபுகஅமர்த்தி விட்டசு வாமீ அடியவர் தம்பிரானே.589. மேக மொத்தகுழ லார்சி லைப்புருவவாளி யொத்தவிழி யார்மு கக்கமலமீது பொட்டிடழ கார்க ளத்திலணி வடமாடமேரு வொத்தமுலை யார்ப ளப்பளெனமார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்வீறிடத்துவளு நூலொ டொத்தஇடை யுடைமாதர்தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடுநூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்சோர நற்றெருவு டேந டித்துமுலை விலைகூறிச்சூத கச்சரச மோடெ யெத்திவருவோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல்தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ளுறவாமோசேக ணச்செகண தோதி மித்திகுடடாடு டுட்டமட டீகு தத்தொகுர்திதீத கத்திமித தோவு டுக்கைமணி முரசோதைதேச முட்கவர ஆயி ரச்சிரமுமூளி பட்டுமக மேரு வுக்கவுணர்தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற விடும்வேலாஆக மத்திபல கார ணத்தியெனையீண சத்தியரி ஆச னத்திசிவனாக முற்றசிவ காமி பத்தினியின் முருகோனேஆர ணற்குமறை தேடி யிட்டதிருமால்ம கட்சிறுமி மோக சித்ரவளிஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் பெருமாளே.590. மொழிய நிறங்கறுத்து மகர வினங்கலக்கிமுடிய வளைந்தரற்று கடலாலும்முதிர விடம்பரப்பி வடவை முகந்தழற்குள்முழுகி யெழுந்திருக்கு நிலவாலும்மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்றமயல்தணி யும்படிக்கு நினைவாயேமரகத துங்கவெற்றி விகட நடங்கொள்சித்ரமயிலினில் வந்துமுத்தி தரவேணும்அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தினமுத தனம்படைத்த திருமார்பாஅமரர் புரந்தனக்கு மழகிய செந்திலுக்குமருணை வளம்பதிக்கு மிறையோனேஎழுபுவ னம்பிழைக்க அசுரர் சிரந்தெறிக்கஎழுசயி லந்தொளைத்த சுடர்வேலாஇரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்தரிவர்கள் பயந்தவிர்த்த பெருமாளே.591. வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதிவறள்சூலை குட்டமொடு குளிர்தாகம்மலிநீ ரிழிச்சல்பெரு வயிறீளை கக்குகளைவருநீ ரடைப்பினுடன் வெகுகோடிசிலைநோ யடைத்தவுடல் புவிமீ தெடுத்துழல்கைதெளியா வெனக்குமினி முடியாதேசிவமார் திருப்புகழை எனுநா வினிற்புகழசிவஞான சித்திதனை யருள்வாயேதொலையாத பத்தியுள திருமால் களிக்கவொருசுடர்வீசு சக்ரமதை யருள்ஞானதுவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகுசுகவாரி சித்தனருள் முருகோனேஅலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொடசுரா ரிறக்கவிடு மழல்வேலாஅமுதா சனத்திகுற மடவாள் கரிப்பெணொடும்அருணா சலத்திலுறை பெருமாளே.592. விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகலவிழிகொடு வாபோவென வுரையாடும்விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்ம்ருகமத கோலாகல முலைதோயஅடையவு மாசாபர வசமுறு கோமாளியைஅவனியு மாகாசமும் வசைபேசும்அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனைஅடியவ ரோடாள்வது மொருநாளேவடகுல போபாலர்த மொருபதி னாறாயிரம்வனிதையர் தோள்தோய்தறா மபிராமமரகத நாராயணன் மருமக சோணாசலமகிபச தாகாலமு மிளையோனேஉடுபதி சாயாபதி சுரபதி மாயாதுறஉலகுய வாரார்கலி வறிதாகஉயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழஒருதனி வேலேவிய பெருமாளே.593. விதிய தாகவே பருவ மாதரார்விரகி லேமனந் தடுமாறிவிவர மானதொ ரறிவு மாறியேவினைவி லேஅலைந் திடுமூடன்முதிய மாதமி ழிசைய தாகவேமொழிசெய் தேநினைந் திடுமாறுமுறைமை யாகநி னடிகள் மேவவேமுனிவு தீரவந் தருள்வாயேசதிய தாகிய அசுரர் மாமுடீதரணி மீதுகுஞ் சமராடிச்சகல லோகமும் வலம தாகியேதழைய வேவருங் குமரேசாஅதிக வானவர் கவரி வீசவேஅரிய கோபுரந் தனில்மேவிஅருணை மீதிலெ மயிலி லேறியேஅழக தாய்வரும் பெருமாளே.594. விந்துப் புளகித இன்புற் றுருகிடசிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளிவிரித்த கமலமெல் தரித்து ளொருசுழியிரத்த குளிகையொ டுதித்து வளர்மதிவிண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடுமிண்டிச் செயலினி ரம்பித் துருவொடுமெழுக்கி லுருவென வலித்து எழுமதிகழித்து வயிர்குட முகுப்ப வொருபதில்விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழிவந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடுவிழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடுகவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு மருள்கூரமென்பற் றுருகிமு கந்திட் டனைமுலையுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடைதுடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகுவெண்டைப் பரிபுர தண்டைச் சரவடமுங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடுவிதித்த முறைபடி படித்து மயல்கொளதெருக்க ளினில்வறா கொஞ்சக் குயில்மொழிவிந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதிதுண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழிவிடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலெனநடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு வழியேபோய்ச்சந்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசைகொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொடணைத்து மலரிதழ் கடித்து இருகரமடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர்சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிடசரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல்வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமதசம்பத் திதுசெய லின்பத் திருள்கொடுவம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினைசலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணிபிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் நரைமேவித்தன்கைத் தடிகொடு குந்திக் கவியெனஉந்திக் கசனம றந்திட் டுளமிகசலித்து வுடல்சல மிகுத்து மதிசெவிவிழிப்பு மறைபட கிடத்தி மனையவள்சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்சண்டக் கருநம னண்டிக் கொளுகயிறெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனைபதைப்ப தனிவழி யடித்து கொடுசெலசந்தித் தவரவர் பங்குக் கழுதுஇரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறைதடிப்ப சுடலையி லிறக்கி விறகொடுகொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு முடலாமோதிந்தித் திமிதிமி திந்தித் திமிதிமிதிந்தித் திமிதிமி திந்தித் திமிதிமிதிமித்தி திமிதிமி திமித்தி திமிதிமிதிமித்தி திமிதிமி திமித்தி திமிதிமிஎன்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடிபம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளைதிகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடுடிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடுசெம்பொற் குடகுழ வுந்தப் புடன்மணிபொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசைசெழித்த மறைசிலர் துதிப்ப முனிவர்கள்களித்து வகைமணி முழக்க அசுரர்கள் களமீதேசிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெசிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடுசெம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்ததும்பக் கருடன டங்கொட் டிடகொடிமறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள்நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல்செம்பொற் பவளமு டங்கிக் கமர்விடவெந்திட் டிகமலை விண்டுத் துகள்படசிமக்கு முரகனு முழக்கி விடபடமடைத்த சதமுடி நடுக்கி யலைபட விடும்வேலாதொந்தத் தொகுகுட என்பக் கழலொலிபொங்கப் பரிபுர செம்பொற் பதமணிசுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடிகரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய்தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணிகங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்மிகுத்த புரமதை யெரித்த நகையினர்தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்தொந்திக் கடவுளை தந்திட் டவரிடசுகத்தி மழுவுழை கரத்தி மரகதநிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனேதுண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடைரம்பைக் கரசியெ னும்பற் றருமகள்சுகிப்ப மணவறை களிக்க அணையறுமுகத்தொ டுறமயல் செழித்த திருபுயசெம்பொற் கரகம லம்பத் திருதலமம்பொற் சசியெழ சந்தப் பலபடைசெறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடைசிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள்தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனிடைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசைநடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய பெருமாளே.595. வீறுபுழு கானபனி நீர்கள்பல தோயல்விடுமேருகிரி யானகொடு தனபாரமீதுபுர ளாபரண சோதிவித மானநகைமேகமனு காடுகட லிருள்மேவிநாறுமலர் வாசமயில் நூலிடைய தேதுவளநாணமழி வார்களுட னுறவாடிநாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்ஞானசிவ மானபத மருள்வாயேகூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரியகோலமயி லானபத மருள்வோனேகூடஅர னோடுநட மாடரிய காளியருள்கூருசிவ காமியுமை யருள்பாலாஆறுமுக மானநதி பாலகுற மாதுதனமாரவிளை யாடிமண மருள்வோனேஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரியஆதியரு ணாபுரியில் பெருமாளே.