சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
531. வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்குமதுரமொழி சைக்கு மிருநாலுவரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்குமடியருவ வேள்க ணைக்கு மறவாடிநெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்குநிறையுமிகு காத லுற்ற மயல்தீரநினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ரநிலவுமயி லேறி யுற்று வரவேணும்மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்துமவுலியற வாளி தொட்ட அரிராமன்மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்கமவுனமறை யோது வித்த குருநாதாஇடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்குளினியகுண கோபுரத்தி லுறைவோனேஎழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டுமிடையுருவ வேலை விட்ட பெருமாளே.532. ஆலவிழி நீலத் தாலதர பானத்தாலளக பாரக் கொண்டலாலேஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்தாரநடை யால்நற் கொங்கையாலேசாலமய லாகிக் காலதிரி சூலத்தாலிறுகு பாசத் துன்பமூழ்கித்தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்சாவதன்மு னேவற் கொண்டிடாயோசோலைதரு கானிற் கோலமற மானைத்தோளிலுற வாகக் கொண்டவாழ்வேசோதிமுரு காநித் தாபழய ஞானச்சோணகிரி வீதிக் கந்தவேளேபாலகக லாபக் கோமளம யூரப்பாகவுமை பாகத் தன்குமாராபாதமலர் மீதிற் போதமலர் தூவிப்பாடுமவர் தோழத் தம்பிரானே.533. பேதகவி ரோதத் தோதகவி நோதப்பேதையர்கு லாவைக் கண்டுமாலின்பேதைமையு றாமற் றேதமக லாமற்பேதவுடல் பேணித் தென்படாதேசாதகவி காரச் சாதலவை போகத்தாழ்விலுயி ராகச் சிந்தையாலுன்தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்சாரல்மற் மானைச் சிந்தியேனோபோதகம யூரப் போதகக டாமற்போதருணை வீதிக் கந்தவேளேபோதகக லாபக் கோதைமுது வானிற்போனசிறை மீளச் சென்றவேலாபாதகப தாதிச் சூரன்முதல் வீழப்பாருலகு வாழக் கண்டகோவேபாதமலர் மீதிற் போதமலர் தூவிப்பாடுமவர் தோழத் தம்பிரானே.534. அமுது மூறுசொ லாகிய தோகையர்பொருளு ளாரையெ னாணையு னாணையெனருகு வீடிது தானதில் வாருமெ னுரைகூறும்அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்தெருவின் மீதுகு லாவியு லாவிகள்அவர்கள் மாயைப டாமல்கெடாமல் நினருள்தாராய்குமரி காளிவ ராகிம கேஸ்வரிகவுரி மோடிசு ராரிநி ராபரிகொடிய சூலிசு டாரணி யாமளி மகமாயிகுறளு ரூபமு ராரிச கோதரியுலக தாரிஉ தாரி பராபரிகுருப ராரிவி காரி நமோகரி அபிராமிசமர நீலிபு ராரித னாயகிமலைகு மாரிக பாலிந னாரணிசலில மாரிசி வாயம னோகரி பரையோகிசவுரி வீரிமு நீர்விட போஜனிதிகிரி மேவுகை யாளிசெ யாளொருசகல வேதமு மாயின தாயுமை யருள்பாலாதிமித மாடுசு ராரிநி சாசரர்முடிக டோறுக டாவியி டேயொருசிலப சாசுகு ணாலிநி ணாமுண விடும்வேலாதிருவு லாவுசொ ணேசர ணாமலைமுகிலு லாவுலி மானந வோநிலைசிகர மீதுகு லாவியு லாவிய பெருமாளே.535. உருகு மாமெழு காகவு மேமயல்பெருகு மாசையு ளாகிய பேர்வரிலுரிய மேடையில் வார்குழல் நீவிய வொளிமானார்உடைகொள் மேகலை யால்முலை மூடியும்நெகிழ நாடிய தோதக மாடியுமுவமை மாமயில் போல்நிற மேனிய ருரையாடும்கரவ தாமன மாதர்கள் நீள்வலைகலக வாரியில் வீழடி யேனெறிகருதொ ணாவதி பாதக னேசம தறியாதகசட மூடனை யாளவு மேயருள்கருணை வாரிதி யேயிரு நாயகிகணவ னேயுன தாளிணை மாமலர் தருவாயேசுருதி மாமொழி வேதியன் வானவர்பரவு கேசனை யாயுத பாணிநல்துளப மாலையை மார்பணி மாயவன் மருகோனேதொலைவி லாவசு ரேசர்க ளானவர்துகள தாகவு மேயெதி ராடிடுசுடரின் வேலவ னேயுல கேழ்வலம் வருவோனேஅருணர் கோடியி னாரொளி வீசியதருண வாண்முக மேனிய னேயரனணையு நாயகி பாலக னேநிறை கலையோனேஅணிபொன் மேருயர் கோபுர மாமதிளதிரு மாரண வாரண வீதியுளருணை மாநகர் மேவியு லாவிய பெருமாளே.536. கரியுரி அரவ மணிந்த மேனியாகலைமதி சலமு நிறைந்த வேணியர்கனல்மழு வுழையு மமர்ந்த பாணியர் கஞ்சமாதின்கனமுலை பருகி வளர்ந்த காமனைமுனிபவர் கயிலை யமர்ந்த காரணர்கதிர்விரி மணிபொ னிறைந்ததோளினர் கண்டகாளவிரிவென வுனது ளுகந்த வேலெனமிகவிரு குழையு மடர்ந்து வேளினையணையவ ருயிரை விழுங்கி மேலும்வெ குண்டுநாடும்வினைவிழி மகளிர் தனங்கள் மார்புறவிதமிகு கலவிபொருந்தி மேனியுமெழில்கெட நினைவு மழிந்து மாய்வதொ ழிந்திடாதோஎரிசொரி விழியு மிரண்டு வாளெயிறிருபிறை சயில மிரண்டு தோள்முகிலெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ டிந்துவீழ்வதெனவிழ முதுகு பிளந்து காளிகளிடுபலி யெனவு நடந்து தாள்தொழஎதிர்பொரு துதிர முகந்த வேகமு கைந்தவேலாஅரிகரி யுழுவை யடர்ந்த வாண்மலைஅருணையி லறவு முயர்ந்த கோபுரமதினுறை குமர அநந்த வேதமொ ழிந்துவாழும்அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள்அடவியி லரிவை குயங்கள் தோய்புபஅரியர பிரம புரந்த ராதியர் தம்பிரானே.537. கனைகடல் வயிறுகு ழம்பி வாய்விடவடதம னியகிரி கம்ப மாய்நடகணபண விபரித கந்த காளபு யங்கராஜன்கயிறென அமரர நந்த கோடியுமுறைமுறை யமுதுக டைந்த நாளொருகதியற வுலகைவி ழுங்கு மேகவொ ழுங்குபோலவினைமத கரிகளு மெண்டி சாமுககிரிகளு முறுகிட அண்ட கோளகைவெடிபட எவரையும் விஞ்சி வேலிடு நஞ்சுபோலவிடுகுழை யளவும ளந்து காமுகருயிர்பலி கவர்வுறு பஞ்ச பாதகவிழிவலை மகளிரொ டன்பு கூர்வதொ ழிந்திடாதோமுனைபெற வளையஅ ணைந்த மோகரநிசிசரர் கடகமு றிந்து தூளெழமுகிலென வுருவமி ருண்ட தாருக னஞ்சமீனமுழுகிய திமிரத ரங்க சாகரமுறையிட இமையவர் தங்க ளூர்புகமுதுகிரி யுருவமு னிந்த சேவக செம்பொன்மேருஅனையன கனவித சண்ட கோபுரஅருணையி லுறையும ருந்து ணாமுலைஅபிநவ வனிதைத ருங்கு மாரநெ ருங்குமால்கொண்டடவியல் வடிவுக ரந்து போயொருகுறமகள் பிறகுதி ரிந்த காமுகஅரியர பிரமபு ரந்த ராதியர் தம்பிரானே.538. இரவியு மதியுந் தெரிவுற எழுமம்புவிதனி லினமொன் றிடுமாதும்எழில்புதல் வருநின் றழுதுள முருகும்மிடர்கொடு நடலம் பலகூறக்கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண்டுயிரினை நமனுங் கருதாமுன்கலைகொடு பலதுன் பமுமக லிடநின்கழலிணை கருதும் படிபாராய்திருமரு வியதிண் புயனயன் விரியெண்டிசைகிடு கிடவந் திடுசூரன்திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ்சிடவலி யொடுகன் றிடும்வேலாஅருமறை யவரந் தரமுறை பவரன்புடையவ ருயஅன் றறமேவும்அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்கருணையி லுறையும் பெருமாளே.539. விரகொடு வளைசங் கடமது தருவெம்பிணிகொடு விழிவெங் கனல்போலவெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்றெனவிதி வழிவந் திடுபோதில்கரவட மதுபொங் கிடுமன மொடுமங்கையருற வினர்கண் புனல்பாயும்கலகமும் வருமுன் குலவினை களையுங்கழல்தொழு மியல்தந் தருள்வாயேபரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்படவர வணைகண் டுயில்மாலம்பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்பயமற விடமுண் டெருதேறிஅரவொடு மதியம் பொதிசடை மிசைகங்கையுமுற அனலங் கையில்மேவஅரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்கருணையில் மருவும் பெருமாளே.540. இடமடு சுறவை முடுகிய மகரமெறிகட லிடையொழு திங்களாலேஇருவினை மகளிர் மருவிய தெருவிலெரியென வருசிறு தென்றலாலேதடநடு வுடைய கடிபடு கொடியசரம்விடு தறுகண நங்கனாலேசரிவளை கழல மயல்கொளு மரிவைதனிமல ரணையின லங்கலாமோவடகுல சயில நெடுவுட லசுரர்மணிமுடி சிதறஎ றிந்தவேலாமறமக ளமுத புளகித களபவளரிள முலையம ணந்தமார்பாஅடலணி விகட மரகத மயிலிலழகுட னருணையி னின்றகோவேஅருமறை விததி முறைமுறை பகருமரியர பிரமர்கள் தம்பிரானே.541. கெஜநடை மடவார் வசமதி லுருகாகிலெசம துறுபாழ் வினையாலேகெதிபெற நினையா துதிதனை யறியாகெடுசுக மதிலாழ் மதியாலேதசையது மருவீ வசையுட லுடனேதரணியில் மிகவே யுலைவேனோசததள மலர்வார் புணைநின கழலார்தருநிழல் புகவே தருவாயேதிசைமுக வனைநீள் சிறையுற விடுவாய்திருநெடு கருமால் மருகோனேதிரிபுர தகனா ரிடமதில் மகிழ்வார்திரிபுரை யருள்சீர் முருகோனேநிசிசர ருறைமா கிரியிரு பிளவாநிறையயில் முடுகா விடுவோனேநிலமிசை புகழார் தலமெனு மருணாநெடுமதில் வடசார் பெருமாளே.542. அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்கடுத்தாசை பற்றித் தளராதேஅடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்டறப்பே தகப்பட் டழியாதேகருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்கலிச்சா கரத்திற் பிறவாதேகருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்கலைப்போ தகத்தைப் புகல்வாயேஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட்டுரைப்பார்கள் சித்தத் துறைவோனேஉரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்டொளித்தோடும் வெற்றிக் குமரேசாசெருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்செருச்சூர் மரிக்கப் பொரும்வேலாதிறப்பூ தலத்திற் றிரட்சோண வெற்பிற்றிருக்கோ புரத்திற் பெருமாளே.543. அருமா மதனைப் பிரியா தசரக்கயலார் நயனக் கொடியார்தம்அழகார் புளகப் புழுகார் சயிலத்தணையா வலிகெட் டுடல்தாழஇருமா நடைபுக் குரைபோ யுணர்வற்றிளையா வுளமுக் குயிர்சோரஎரிவாய் நரகிற் புகுதா தபடிக்கிருபா தமெனக் கருள்வாயேஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்டுரமோ டெறிபொற் கதிர்வேலாஉறைமா னடவிக் குறமா மகளுக்குருகா றிருபொற் புயவீராதிருமால் கமலப் பிரமா விழியிற்றெரியா வரனுக் கரியோனேசெழுநீர் வயல்சுற் றருணா புரியிற்றிருவி தியினிற் பெருமாளே.544. அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக்கவசமா யாதரக் கடலூடுற்றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்கறியொணா மோனமுத் திரைநாடிப்பிழைபடா ஞானமொய்ப் பொருள்பெறா தேவினைப்பெரிய ஆதேசபுற் புதமாயபிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்பெறுவதோ நானினிப் புகல்வாயேபழைய பாகீரதிப் படுகைமேல் வாழ்வெனப்படியுமா றாயினத் தனசாரம்பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்பரமமா யூரவித் தகவேளேபொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்பொடிபடா வோடமுத் தெறிமீனப்புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்பொருதவே லாயுதப் பெருமாளே.545. ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்டாடைமறைத் தாடுமலர்க் குழலார்கள்ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்டாரையுமெத் தாகமயக் கிடுமோகர்சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்தூதுவிடுத் தேபொருளைப் பறிமாதர்தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்சோதியொளிப் பாதமளித் தருள்வாயேதானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்சாயகடற் சூரைவதைத் திடுவோனேதாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்தாபரம்வைத் தாடுபவர்க் கொருசேயேதேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்தேயுருகிச் சேருமணிக் கதிர்வேலாசீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்தேவமகட் கோர்கருணைப் பெருமாளே.546. இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வருமிறுதிச் சிறுகால்வரு மதனாலேஇயலைத் தருகானக முயலைத் தருமேனியிலெரியைத் தருமாமதி நிலவாலேதொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலைதொலையத் தனிவீசிய கடலாலேதுணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்துவளத் தகுமோதுயர் தொலையாதோவடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனைமடியச் சுடஏவிய வடிவேலாமறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்மகிழப் புனமேவிய மயில்வீராஅடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வயலருணைத் திருவீதியி லுறைவோனேஅவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழிஅமரர்க் கரசாகிய பெருமாளே.547. இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலேஇளவாடையு மூருகொ றுக்கும் படியாலேசமராகிய மாரனெ டுக்குங் கணையாலேதனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயேகுமராமுரு காசடி லத்தன் குருநாதாகுறமாமக ளாசைத ணிக்குந் திருமார்பாஅமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனேஅருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே.548. இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்பஅமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்கஇசலி யிசலியுப ரிதலிலை யுற்று இடைநூல் நுடங்க வுளமகிழ்ச் சியினோடேஇருவ ருடலுமொரு வுருவாய் நயக்க முகமே லழுந்தஅளக மவிழவனை களுமே கலிக்க நயனார விந்தலகரி பெருகஅத ரமுமே யருத்தி முறையே யருந்த உரையெழப் பரிவாலேபுருவ நிமிரஇரு கணவாள் நிமைக்க வுபசார மிஞ்சஅவச கவசமள வியலே தரிக்க அதிலே யநந்தபுதுமை விளையஅது பரமா பரிக்க இணைதோளு மொன்றி அதிசுகக் கலையாலேபுளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்கமனமு மனமுமுரு கியெயாதரிக்க வுயிர்போலுகந்துபொருளதளவுமரு வுறுமாய வித்தை விலைமாதர் சிங்கி விடஅருட் புரிவாயேபரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்ததமர திமிரபிர பலமோக ரத்ன சலராசி கொண்டபடியை முழுதுமொரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத் தமர்சேயேபழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவாவினன்குடியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த ணிகையூடு மண்டர்பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவாகி நின்று கவிதையைப் புனைவோனேஅரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபால னன்பரடையு மிடரைமுடு கியெநூற் துட்ட கொலைகார ரென்றஅசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிராம செந்தி லுரகவெற் புடையோனேஅருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்தஇரண கரணமுர ணுறுசூர னுட்க மயிலேறு கந்தஅருணை யிறையவர்பெ ரியகோ புரத்தில் வடபா லமர்ந்த அறுமுகப் பெருமாளே.549. இரவுபற் பலகாலும் ; இயலிசைமுத் தமிழ்கூறித்திரமதனைத் தெளிவாகத் ; திருவருளைத் தருவாயேபரகருணைப் பெருவாழ்வே ; பரசிவதத் துவஞானாஅரனருள்சற் புதல்வோனே - அருணகிரிப் பெருமாளே.550. இருவர் மயலோ அமளி விதமோஎனென செயலோ அணுகாதஇருடி அயன்மா லமர ரடியாரிரையு மொலிதா னிவைகேளாதொருவ னடியே னலறு மொழிதானொருவர் பரிவாய் மொழிவாரோஉனது பததூள் புவன கிரிதானுனது கிருபா கரமேதோபரம குருவா யணுவி லசைவாய்பவன முதலா கியபூதப்படையு முடையாய் சகல வடிவாய்பழைய வடிவா கியவேலாஅரியு மயனோ டபய மெனவேஅயிலை யிருள்மேல் விடுவோனேஅடிமை கொடுநோய் பொடிகள் படவேஅருண கிரிவாழ் பெருமாளே.551. இருவினை யஞ்ச மலவகை மங்கஇருள்பிணி மங்க மயிலேறிஇனவரு ளன்பு மொழியக டம்புவினதக முங்கொ டளிபாடக்கரிமுக னெம்பி முருகனெ னண்டர்களிமலர் சிந்த அடியேன்முன்கருணைபொ ழிந்து முகமும லர்ந்துகடுகிந டங்கொ டருள்வாயேதிரிபுர மங்க மதனுடல் மங்கதிகழ்நகை கொண்ட விடையேறிச்சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டுதிகழந டஞ்செய் தெமையீணஅரசியி டங்கொள் மழுவுடை யெந்தைஅமலன்ம கிழ்ந்த குருநாதாஅருணைவி லங்கல் மகிழ்குற மங்கைஅமளிந லங்கொள் பெருமாளே.552. இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பையிடரடை பாழ்ம்பெ தும்ப கிதவாரிஇடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்பமிரவிடை தூங்கு கின்ற பிணநோவுக்குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொடுயிர்குடி போங்கு ரம்பை யழியாதென்றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்துனுபயய தாம்பு யங்க ளடைவேனோஅருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்களமரர் குழாங்கு விந்து தொழவாழும்அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்டஅபிநவ சார்ங்க கண்டன் மருகோனேகருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்டகடவுள்ந டேந்த்ரா மைந்த வரைசாடும்கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்தகரகுலி சேந்த்ரர் தங்கள் பெருமாளே.553. இருளளக மவிழமதி போத முத்த ரும்பஇலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க எவராலும்எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தியினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்தஇதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து முனிவாறிமுருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்துமுகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்துமொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து விடுபோதும்முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்தபழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்றுமுனிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று மறவேனேஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்துகிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்துஉலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து சபையூடேஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்றுஉரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்றுஉதறிமுறை யிடுபழைய வேத வித்தர்தந்த சிறியோனேஅரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொடழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்தஅமரரொடுபலர் முடுகி ஆழியைக்கடைந்து அமுதாகஅருளுமரி திருமருக வார ணத்தை யன்றுஅறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்தஅருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த பெருமாளே.554. இறுகு மணிமுலை மருவு தரளமுமெரியு முமிழ்மதி நிலவாலேஇரவி யெனதுயிர் கவர வருகுழலிசையி லுறுகட லலையாலேதறுகண் ரதிபதி மதனன் விடுகொடுசரமி லெளியெனு மழியாதேதருண மணிபொழி லருணை நகருறைசயில மிசையினில் வரவேணும்முறுகு திரிபுர மறுகு கனலெழமுறுவ லுடையவர் குருநாதாமுடிய கொடிமுடி யசுரர் பொடிபடமுடுகு மரகத மயில்வீராகுறவர் மடமக ளமுத கனதனகுவடு படுமொரு திருமார்பாகொடிய சுடரிலை தனையு மெழுகடல்குறுக விடவல பெருமாளே.555. உலையிக லொத்த வுடலினனல் பற்றியுடுபதியை முட்டி யமுதூறலுருகிவர விட்ட பரமசுக முற்றுவுனதடியை நத்தி நினையாமற்சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டுதிகழ்முகவர் முத்து நகையாலேசிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுதிருடனென வெட்கி யலைவேனோகலைகனக வட்ட திமிலைபறை கொட்டகனகமயில் விட்ட கதிர்வேலாகருதலரின் முட்டி கருகிவரு துட்டகதவமண ருற்ற குலகாலாஅலைகடலு டுத்த தலமதனில் வெற்றிஅருணைவளர் வெற்பி லுறைவோனேஅசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டுஅரசுநிலை யிட்ட பெருமாளே.556. கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலேகருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலேவடவனலை முனிந்து வீசிய தென்றலாலேவயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோஇடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீராஎழுகிரிகள் பிளந்து வீழஎ றிந்தவேலாஅடலசுரர் கலங்கி யோடமு னிந்தகோவேஅரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே.557. கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்கயலெனபொற் சுழலும்விழிக் குழல்கார்போல்கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்கரகமலத் துகிர்விரலிற் கிளிசேருங்குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்குவிமுலைசற் றசையமணிக் கலனாடக்கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்குனகிபொருட் பறிபவருக் குறவாமோதிமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமித் திமிதிமெனட்டிமிடிமிடிட் டிகுர்திமிதித் தொலிதாளம்செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்டிகைசிலைபட் டுவரிபடச் சிலைகோடித்துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்தொகுதசைதொட் டலகையுணத் தொடும்வேலாதுவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்சுகமொடணைத் தருணகிரிப் பெருமாளே.558. கமலமொட்டைக் கட்ட ழித்துக் குமிழியைநிலைகு லைத்துப் பொற்க டத்தைத் தமனியகலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற இளநீரைக்கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதபசயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவியகரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத னபிஷேகம்அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்துஅதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையினடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ டிருதாளம்அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவியசிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடுமபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக ளுறவாமோதமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறைதொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகுதரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட எனவோதிச்சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழவிழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்தசைகள் பட்சித் துக்களித்துக் கழுதொடு கழுகாடஅமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகளஅசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியெனஅடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு மயிலோனேஅழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியினுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபரஅருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் பெருமாளே.559. கரிமுகக் கடகளிற் றிதிககற் பகமதக்கஜமுகத் தவுணனைக் கடியானைகடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்கனிவயிற் றினிலடக் கியவேழம்அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்தமர்புரிக் கணபதிக் கிளையோனேஅயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்றியைமிகுத் தறுமுகக் குமரேசாநரிமிகுக் கிளைகளைப் பரியெனக்க டிவளக்கையில்பிடித் தெதிர்நடத் திடுமீசன்நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்கரியுரித் தணிபவற் கொருசேயேதுரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்துரியமெய்த் தரளமொய்த் திடவீறிச்சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்சுடரயிற் சரவணப் பெருமாளே.560. கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வனமதன தந்திரங் கடியன கொடியனகனக குண்டலம் பொருவன வருவன பரிதாவும்கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வனவிளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வனகணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன இளையோர்முன்செருவை முண்டகஞ் சிறுவன் வுறுவனகளவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வனதெனன தெந்தனந் தெனதென தெனதென எனநாதம்தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவனமருள்செய் கண்கள்கொண் டணைவர்ந்த முயிரதுதிருகு கின்றமங் கையர்வச மழிதலை யொழிவேனோமருவு தண்டைகிண் கிணிபரி புரமிலைகலக லன்கலின் கலினென இருசரண்மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு மிகவேறாய்வலிய சிங்கமுங் கரடியு முழுவையுமுறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசைமறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு வுளநாடிஅருகு சென்றடைந் தவள்சிறு பதயுகசதத ளம்பணிந் ததிவித கலவியுளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட னணைவோனேஅமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்துஅருணை வந்துதென் திசைதனி லுறைதரு பெருமாளே.