பதிவு செய்த நாள்
11
மார்
2014
10:03
திருப்பதி: திருமலை ஏழுமலையானை, தர்ம தரிசனத்தில் தரிசிக்க செல்லும் அனைவரும், இனி, அருகில் சென்று தரிசிக்கலாம் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேர்தல் காரணமாக, திருமலையில், வி.ஐ.பி., டிக்கெட்டுகளில், எம்.பி., - எம்.எல்.ஏ., கோட்டாக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால், திருமலைக்கு வரும், வி.ஐ.பி.,க்களின் பரிந்துரை கடிதங்கள் குறைந்தன. தினமும் ஆயிரக்கணக்கில் ஏழுமலையானை தரிசித்து வந்த வி.ஐ.பி.,க்கள், தற்போது 300 பேராகக் குறைந்துள்ளனர். இதனால், காலை, 6:00 மணிக்கே, தர்ம தரிசனத்தை தேவஸ்தானம் துவங்குகிறது. இந்நிலையில், தினமும் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. அதனால், தேர்தல் முடியும் வரை, அனைத்து பக்தர்களுக்கும், அருகில் சென்று தரிசிக்கும், லகு தரிசனத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.