பதிவு செய்த நாள்
23
ஜூலை
2015
05:07
டேய் பசங்களா, என்னடா இப்படித் தூங்க விட மாட்டேங்கிறீங்க! பிராமணப் பசங்களாயிருந்துட்டு வேத அத்யயனம் பண்ணுங்கடா தூக்கம் கலைந்த எரிச்சலோடு பேசினார் பராசரர். இது நாங்க தினம் விளையாடுற இடம் நீங்க வேற இடம் தேடிப் படுத்துக்குங்க. காலையிலேயே வேத அத்யயனம் பண்ணிட்டுத்தான் வந்திருக்கோம் துடுக்காகப் பதில் சொன்னான் ஒரு சிறுவன். ஓ, அப்ப வேதத்துல எதைக் கேட்டாலும் சொல்லுவியா? என பராசரர் கேட்க, நீங்க ஆரம்பியுங்க. நான் இணைஞ்சுக்கிறேன் என்று சவாலாகச் சொன்னான் சிறுவன். சரி, உன் பெயர், உன் தகப்பனார் பெயரென்ன? என்ன உத்யோகம் பண்றார்? என்றார் பராசரர். என் பெயர் தக்ஷிணாமூர்த்தி, எங்கப்பா பேர் வார்த்திகன். உஞ்ச விருத்தி எடுத்துதான் எங்களைக் காப்பாற்றுகிறார். என்றான் சிறுவன். சிறுவனின் பேச்சு பராசரரின் மனதை உருக்கியதோடு, அவனது சொற்திருத்தமும், சாதுர்யமும் மனதை வசீகரித்தது.
ஆற்றலையும் சோதித்து விடுவோமென்று, வேத மந்திரத்தின் ஒரு பகுதியை ராகத்தோடு பாட, சில விநாடிகளில் இனம் கண்டு அவரோடு இணைந்து பாடினான் சிறுவன், அதோடு, அவர் கேட்ட கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொன்னான். மகிழந்த பராசரர் தக்ஷிணா! இந்த பொற்கிழி சேர மன்னன் அவையில் நான் வாதிட்டு வென்றது. இந்த மகர குண்டலங்களை உனக்களிக்கிறேன். இந்தப் பட்டுப் பீதாம்பரம் உன் மேனியை தழுவுவதே பொருத்தம் என தாம் பெற்ற பரிசுப் பொருட்கள் அனைத்தையும் சிறுவனுக்களித்துச் சென்றார். மற்ற சிறுவர்கள் இச்சம்பவத்தை அவரவர் வீடுகளில் போய் தெரிவித்தார்கள். தக்ஷிணாமூர்த்தி பொற்கிழியைப் பெற்றோரிடம் அளித்தான். ஒழுகும் ஓட்டு வீட்டை இடித்து மாளிகை கட்டினார் வார்த்திகன், அவரது மனைவி கிருத்திகா பொன் ஆபரணங்களும் பட்டாடையுமாக ஜொலித்தாள், குழந்தைகள் வளமாக வேளை தவறாமல் உண்டனர்.
பொறாமையாளர்கள் வார்த்திகன் புதையலெடுத்ததாகவும், அதை அரசுக்குத் தெரிவிக்கவில்லையென்றும் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். வார்த்திகன் சிறையிலடைக்கப்பட்டான். கிருத்திகா திருத்தங்காலிலுள்ள துர்கை கோயிலுக்குச் சென்று, புத்திசாலியாய் ஒரு பிள்ளை பேசியது குற்றமா? அதை மெச்சி பராசரர் பரிசளித்தது பிழையா? பாண்டிய நாட்டில் நீதி செத்து விட்டதா? உனக்கெதற்கு ஆராதனை நிவேதனமெல்லாம்? வெகுமதியை உபயோகித்தது தவறென்றால் ஏன் அதைக் கிடைக்கச் செய்தாய்? என்று அழ, கோயில் கதவு படாரென்று தானாகவே மூடிக்கொண்டது. மூடிய கதவை எவராலும் திறக்க முடியவில்லை. பூஜைகள் நின்றதைப் பாண்டியனிடம் சொன்னார்கள். அறமுரைப்போர் இது தெய்வ குற்றம் ராஜநீதி தவறினாலொழிய இப்படி நேராது. என்று கூற, சமீபத்தில் நடந்த தண்டனைகளை ஆராய்ந்தான் பாண்டியன், வார்த்திகனை விடுதலை செய்து பாண்டியன் முன் நிறுத்தினர். துர்கை கோயில் கதவுகள் தாமாகத் திறந்து கொண்டன. பாண்டியன் வார்த்திகனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு, திருத்தங்கால் ஊரையே வார்த்திகனுக்கு சாசனம் செய்து கொடுத்தான். அதோடு அருகிலுள்ள வயலூரையும் அளித்தான். புதையல் எடுப்பவருக்கு, என் ஆட்சி நடக்கும் வரை, அது அவருக்கே சொந்தம் என்றும் அறிவித்தான். நன்னடத்தையோடிருந்த பலரையும் சிறையிலிருந்து விடுதலை செய்தான், தக்ஷிணாவை ஈன்ற பொழுதிலும் பெரிதும் மகிந்தனர் பெற்றோ