பதிவு செய்த நாள்
11
ஆக
2015
05:08
ஒரு காலத்தில் நாரதருடைய உள்ளத்தில் அகங்காரம் புகுந்து விளையாட ஆரம்பித்ததாம் தன்னைப் போன்ற பக்தன் யாரும் இல்லையென்று எண்ணினார் இவ்வாறு நாரதருடைய உள்ளத்தில் தன்மதிப்பு மிஞ்சிப் போனது பகவானுக்குத் தெரிந்துவிட்டது. நாரதரே! கொஞ்சம் பூவுலகத்துக்குப் போய் அங்கே என் சிறந்த பக்தனொருவன் இருக்கிறான். அவனைக் கண்டு அவன் குணாதிசயங்களைப் பார்த்து வாரும் உமக்கு நன்மை உண்டாகும் என்று மகாவிஷ்ணு சொன்னார். சரி பகவான் ஆக்ஞைப்படியே போய் அந்தப் பக்தனிடமுள்ள விசேஷத்தை அறிந்து வருகிறேன். என்னைவிடப் பெரிய பக்தன் ஒருவன் உலகத்தில் இருக்கிறானா? அந்த அதிசயத்தையும் பார்க்கலாம்! என்று நாரதர் எண்ணி, அவன் எவன், எங்கே இருக்கிறான். என்று எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டு வர, பூலோகம் சென்றார். அங்கே போனவர் குறிப்பிட்ட வீட்டில் ஒரு குடியானவனைக் கண்டார். அவன் காலையில் எழுந் ததும் ஹரி! என்று ஒரு தடவை சொல்லிவிட்டு ஏரைத் தூக்கிகொண்டு தன் வயலுக்குப் போனான். நாள் முழுதும் வயலில் உழுது வேலை செய் துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தான். படுக்குமுன் ஹரி! என்று ஒருமுறை மறுபடியும் சொல்லிவிட்டுப் படுத்துத் தூங்கப் போனான்.
இதைப் பார்த்த நாரதர் இவன் பெரும் பக்தனாமே! என்று மனத்திற்குள் நகைத்தார். மறுநாளும் அவன் என்ன செய்கிறானோ என்று பார்த்தார். குடிய õனவன் எழுந்ததும் ஹரி என்று ஒரு தடவை சொல்லி விட்டு தன் வயலுக்குப் போய் நான் முழுவதும் தன் தொழிலில் கழித்துவிட்டு இரவில் ஒரு தடவை, ஹரி என்று சொல்லிவிட்டுத் தூங்கினான். இவ்வளவுதானா என்று எண்ணி நாரதர் விஷ்ணு லோகத்துக்குத் திரும்பிப் போனார். உங்கள் பக்தனைப் பார்த்தேன், அவனிடத்தில் அதிக பக்தி யிருப்பதாக எனக்கு காணப்படவில்லை. வயலில் வேலை செய்வதிலேயே முழுநேரம் செலுத்தி வருகிறான். என்னை வேடிக்கை செய்யவே, அவனிடம் அனுப்பினீர். போலிருக்கிறது! என்றார் நாரதர். மகாவிஷ்ணு நாரதரே! இந்தாரும், இந்தக் கிண்ணத்தை வாங்கிக் கொள்ளும் என்றார், பகவான் கொடுத்த எண்ணெய்க் கிண்ணத்தை முனிவர் வா ங்கிக் கொண்டார். இதில் எண்ணெய் வழியவழிய இருக்கிறது. ஜாக்கிரதை! இதை எடுத்துக்கொண்டு போய், பூலோகத்தை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வாரும். ஒரு துளி எண்ணெயும் கீழே சிந்தாமல் பார்த்துக்கொண்டு சுற்றி விட்டுவாரும் என்றார் திருமால்.
பகவான் சொல்லியபடியே நாரதர் செய்தார். ஒரு சொட்டு எண்ணெயும் கீழே சிந்தாமல் ஜாக்கிரதையாகப் பிடித்துக்கொண்டு வெற்றிகரமாகத் திரு ம்பி வந்தார். திரும்பி வந்தீரா? சந்தோஷம் தயவு செய்து சொல்லும். உம்முடைய பிரதக்ஷிணத்தில் எத்தனை தடவை என்னை ஸ்மரித்தீர்? என்று கேட்டார். பகவான். சுவாமி! நான் எப்படி உம்மை ஸ்மரிக்க முடியும், கொஞ்சமும் சிந்திப்போகாமல் இந்த எண்ணெய்க் கிண்ணத்தை ஏந்திக் கொண்டல்லவா சுற்றிவரு ம்படி! சொன்னீர்? அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது! என்றார் நாரதர். முனிவரே! இந்த எண்ணெய்க் கிண்ணம் உம்முடைய சிந்தனை முழுவதையும் கவர்ந்து விட்டதால் நீர் என்னை ஸ்மரிக்க முடியாத நிலையில் இருந் தீரல்லவா? உம்மைப் போன்ற ஞானிக்கே இப்படியானால் அந்த ஏழைக் குடியானவன் கஷ்டத்தை யோசித்துப் பாரும். தாங்கமுடியாத குடும்ப பாரத்தைச் சுமந்து கொண்டு அவன் தினமும் இரண்டு முறை என் பெயரைச் சொல்கிறான். அல்லவா? அவன் பக்தியின் சிறப்பு உமக்கு இப்போது தெரியவில்லையா? என்று பகவான் கேட்க நாரதர்! வெட்கமடைந்தார். ஆண் பெண் கவர்ச்சி வேகத்தில் மனம் சிக்கித் கொண்டலைந்தால் அல்லது வேறு காமப் பொருள்களின் பேரில் ஆசை யுண்டானால் அதைத் தடுத்துக் கொண்டு வேறு நல்ல கருத்துக்களில் மனதைச் செலுத்த முடியும். இந்த முயற்சி பயன்படாமல் போனாலும் போகும். அப்போது பகவானை ÷ வண்டிக்கொண்டு அவனை ஒரு நண்பனாகவோ, அல்லது அப்பனாகவே, அல்லது தாயாகவோ பாவித்து அவன் நாமங்களைச் சொல்லிப் பாவத்தினின்று காப்பாற்றும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். தேவியை மனத்தின் முன்னால் நிறுத்திக்கொண்டு தாயை வணங்குவது போல் வணங்குவாயாக ராமா, வாசுதேவா அப்பனே, கோவிந்தா என்று ஜபிப்பது மிகவும் உதவியாயிருக்கும்.
சித்த மலத்தைக் கழுவுவதற்கு, ஹரி நாமங்கள் சஞ்சீவி மருந்தைப்போல் உதவும். ஆண்டவனுடைய நாமங்களைச் சொல்வதில் நான் சந்தோஷம் காணவில்லையே! என்று ஒருவர் கேட்க பரமஹம்ஸர் சொன்னதாவது. அப்பனே! பகவானே வேண்டிக்கொள்! உன் நாமங்களை ஜபிப்பதில் எனக்கு ஆனந்தம் தரவேண்டும் என்று அழுது அழுது கேட்பாயாக உன் பி ரார்த்தனையை ஆண்டவன் பூர்த்தி செய்வான். அம்மனே, அப்பனே, கிருஷ்ணா, ராமா, சீதா, கோபாலா, கோவிந்தா, மகாதேவா, ஈசுவரா, சிவனே - இவற்றில் கோவிந்தா, மகாதேவா, ஈசுவரா, சிவனே - இவற்றில் எந்தப் பெயரும் போதும், தினமும் அந்த நாமத்தைச் சொல்லிப்பார்! வரவர அதில் ருசி காண்பாய். நோயாளிக்கு முதலில் அன்னத்தில் ருசியிருக்காது. வரவர ருசி உண்டாகும். அதுவே நோய் தீருவதற்கு அடையாளம். பகவான் வேறு, அவன் பெயர் வேறு என்று அல்ல. ருக்மணி தராசில் ஒரு துளசி இலையையும் அவன் பெயரையும் வைத்துக் கண்ணனுக்குச் சரி எடை போட்டு விட்டாள் அல்லவா? சைதன்ய தேவர் சொன்னபடி பகவானுடைய நாமம் சத்துள்ள ஒரு விதையைப் போலாகும். மாளிகையின் கம்பத்தின் மேலுள்ள விதை அங்கே பல ஆண்டுகள் சும்மா கிடைக்கும். கட்டிடம் இடிந்து விழுந்து குட்டிச் சுவராகப் போய்விடும். அப்போது இந்த விதை கீழே மண்ணில் புதைந்து மழைத்தண்ணீர் விழுந்ததும் முளைத்துச் செடியாகி, செழித்து வளர்ந்து காயும் கனியும் கொடுக்கும், பகவானுடைய நாமம் வீண் போகாது.