வழிபாடு முடிந்ததும், கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து எழுகிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துாதர்கள் உள்ளனர். அவர்கள் பக்தர்களுக்கு வழிகாட்டுவதாக ஐதீகம். வழிபாடு முடிந்ததும் அவர்களிடம் விடை பெறும் விதமாக சிறிது நேரம் கோவிலில் உட்கார வேண்டும். அப்போது, “தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்” என்று பிரார்த்திக்க வேண்டும். சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்ப வேண்டும்.