Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமகிருஷ்ணருக்கு காட்சிதந்த ... பஞ்ச பூதங்களை வென்ற பராக்கிரமசாலி ஆஞ்சநேயர் பஞ்ச பூதங்களை வென்ற பராக்கிரமசாலி ...
முதல் பக்கம் » துளிகள்
பாண்டவர்கள் வழிபட்ட பாதாள புவனேஸ்வர்!
எழுத்தின் அளவு:
பாண்டவர்கள் வழிபட்ட பாதாள புவனேஸ்வர்!

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2017
06:06

இந்த நில மட்டத்தில் பல அற்புதங்கள் உள்ளன. ஆனாலும், நிலத்தடியிலும் பல அதிசயங்கள உண்டு. அவற்றில் ஒன்றுதான் பாதாள புவனேஸ்வர். அமைந்துள்ள இடம் குமாஊன். உத்திரகாண்ட் மாநிலத்தின் எழில் கொஞ்சம் பகுதி இது.  இங்கு மலைகள் புடை சூழ, இரு நதிகளிடையே தவழும் அழகிய கிராமத்தில் உள்ளதுதான் இந்த அதிசயமான குகைக் கோயில். 160 அடி நீளம். 100 அடி ஆழம். சுண்ணாம்புக்கல் குகை. இதன் வயது பூமியின் வயது. புராணங்களின்படி முதன் முதலாக இதில் நுழைந்த மனிதன் திரேதா யுகத்தில் ரிதுபர்னன் என்ற மன்னன்.

அதன் பின் பாண்டவர்கள் கடைசியில் இங்கு வந்து ஈஸ்வரனை வணங்கி பின் வானுலகம் சென்றனராம். இந்த யுகத்தில் ஆதிசங்கரர் இங்கு வந்து பூஜை செய்து லிங்கத்துக்கு செப்பிலான காப்பு வைத்து விட்டு சென்றார். அதற்குப் பிறகு பண்டாரிகள் எனப்படும் குருமார்கள்தான் பூஜை செய்கிறார்கள் இன்று வரை. அறிவியல் பிரகாரம் பல நூற்றாண்டுகளாக வழிந்தோடும் நீர் கனிமங்கள் கலந்து படிகங்களாக மாறுகின்றன. அவை கற்களை பல்வேறு உருவங்களாக ஒரு கைதேர்ந்த சிற்பியின் லாவகத்துடன் வடித்திருப்பதுதான் அற்புதம். இவை கசிதுளிவீழ் மற்றும் கசிதுளிப்படிவு கற்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த குகைக்கு  நான்கு கதவுகள் உண்டு எனவும் அதில் இரண்டு போன யுகத்திலேயே மூடப்பட்டு விட்டதாம். இதை பற்றி ஸ்கந்த புராணத்தில் கூட குறிப்பு உள்ளது என்கிறார்கள். இன்னமும் இதில் ஆராய்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தூரத்திலிருந்தே கோயில் தெரிகிறது. கோயில் வளாகத்தில் சிவன், பார்வதி போன்றவர்களுக்கு பல சன்னிதிகள் உள்ளன. அதையும் தாண்டிச் சென்றால் குகையின் முகத்துவாரம் தெரிகிறது. நுழையும் வழி மிகக் குறுகலாக உள்ளது. தவழ்ந்தும், நெளிந்தும், சுருக்கிக்கொண்டும் புழுவை போல்தான் உள்ளே செல்ல வேண்டும். பழைய படங்களில் பார்த்த குகை செட்டுகள் நிதர்சனமாகத் தெரிகின்றன. உள்ளே விளக்குகள் போடப்பட்டுள்ளன. கூடவே கைடு, சுவாரஸ்யமான கதைகள் சொல்கிறார். பக்கவாட்டு சுவரில் சங்கிலிகள் பிடிமானத்துக்காக. கால்களை பார்த்துதான் படிகளில் வைக்க வேண்டும். இல்லாவிடில் வாரி விடும். சுமார் 80 படிகள் இறங்கினால்தான் இந்த நிலத்தடி சுரங்களைக் காண முடியும். படிகளின் நடுவே நரசிம்மரின் உருவம். கிழே இறங்கியவுடன் முதலில் தெரிவது ஆதிசேஷன் தலையில் பூமியை தாங்கியபடி.

அதற்கு முன்னால் ஒரு யாக குண்டம். இங்குதான் ஜனமேஜயன் தன் தந்தை பரிக்ஷித்தின் மரணத்துக்கு பழி வாங்குவதற்காக உல்லங்க முனிவரின் கூற்றுப்படி சர்ப்ப யாகம் செய்தான்.  தலை மீது தக்ஷகன் பாம்பு தீண்டுவதற்காக தொங்குகிறது. இது ஒரு குகை அல்ல; ஒன்றுக்குள் ஓன்றான குகைநகரம் என்றே அழைக்கலாம். இங்கிருந்து தொடங்கி நாம் ஆதிசேஷனின் முதுகின் மேல்தான் நடக்க ஆரம்பிக்கிறோம். சிறிது தூரத்தில் எட்டு இதழ் தாமரையிலிருந்து தண்ணீர் கணேசரின் மீது சொட்டு சொட்டாக விழுகிறது. சிவனார் கணேசரின்  தலையை கொய்த பிறகு பார்வதியின் கோரிக்கையின் பேரில் யானை தலையை எட்டு இதழ் கொண்ட தாமரை மூலம் தண்ணீர் தெளிக்கச் செய்து உயிர் பெறச் செய்தாராம். (ஒவ்வொரு வளைவிலும் ஒரு சிலிர்ப்பு; ஒரு இன்பமான த்ரில். அதைத் தாண்டியவுடன் பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத் விக்ரகங்கள் - லிங்கங்களின் வடிவில், கல்லென்று ஒதுக்க முடியவில்லை. இப்படியும் அமையுமா என்று வியப்பு.)

அருகில் காலபைரவர். பயங்கரமாக உக்கிரத்தடன் துருத்திக் கொண்ட நாக்குடன் நம்மை கொஞ்சம் அச்சுறுத்தத்தான் செய்கிறார். கல் என்பதை ஒரு நொடி மறக்க வைக்கிறது. உமிழ் நீர் வெளியே  வருகிறது. உள்ளே வழி இருக்கிறது. அதன் வழியாக உள்ளே செல்ல முடியமானால் மோட்சத்தை அடைய முடியுமாம். அதன் முன் சிவன் பாதாள சண்டியுடன் சிம்மத்தின் மேல் மண்டை ஓடுகளுடன் காட்சி தருகிறார். அதன் பின் நான்கு யுகங்களை குறிக்கும் நான்கு கதவுகள். பின் கிருஷ்ண பகவான் கொண்டு வந்த பாரிஜாத மரம். பின் பரந்த இடம். அனுமனும் அயிராவணனும் போரிட்ட இடம். பின் பால் சுரக்கும் காமதேனு, மார்க்கண்டேயரின் குகை, தலையை திருப்பிக்கொண்டிருக்கும் அன்ன பட்சி, சிவனின் தலையிலிருந்து வழியும் கங்கை, முன்னால் முப்பத்து முக்கோடி தேவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள். சற்று தள்ளி சப்தரிஷி மண்டலம், பால் வீதி

அடுத்து  கருவறை. செப்பு கவசங்கள் பொருத்தப்பட்ட மூன்று இயற்கை சக்திகளை குறிக்கும் மூன்று  சிறிய லிங்கங்கள் இவற்றை பொருத்தியவர் ஆதிசங்கரர். இவற்றுக்குதான் பூஜை. இந்த லிங்கங்களின் மீது மாறி மாறி நீர் அபிஷேகம் போல சொட்டிக் கொண்டிருக்கிறது. இங்கு சனிபிரதோஷம் அன்று வழிபடுபவர்கள் தம் மூதாதையர்களுக்கு  சாந்தி அளிக்கிறார்கள். அடுத்தது கழுத்தில் நாகங்களுடனும், ஜடாமுடியுடனும் சிவன். பின் சுவர்கத்துக்கான வழியும், பாண்டவர்களின் பிரதிமைகளும், சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் காட்சியும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. இது இயற்கையா அல்லது செயற்கையா என்று சந்தேகிக்க வைக்கிறது. அடுத்து வேறு வழியில் திரும்ப வேண்டும்.. இந்த பாதையில் நான்கு யுகங்களைக் குறிக்கும் சிவலிங்கங்கள். சற்றே பெரிதாக இருக்கும் கலியுகத்தை குறிக்கும் லிங்கம் எப்போது மேலிருந்து வரும் கூம்பை தொடுகிறதோ அதுவே கலியுகம் முடியும் தருணம். மறுபடியும் பழைய பாதையை அடைய வேண்டும். மேலே செல்லும் வழியில் ஆயிரம் கால்களுடன் ஐராவத யானை. வலது பக்கத்தில் சிவனுடைய கமண்டலம். சிவபெருமானுடன் இங்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் குடி கொண்டுள்ளார்கள் என்பது ஐதீகம். இங்கு புதியதொரு உலகை நாம் காண்பது நிதர்சனம். நிச்சயம் இது கண்களுக்கு ஒரு விருந்து.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar