ராம நாம மகிமையால் அனுமன் கடலைத் (நீர்) தாண்டி வென்றார். பூமாதேவி அம்சமான சீதையின் அருளுக்குப் பாத்திரமானதால் நிலத்தை வென்றார். வாயு புத்திரனானதால் காற்றை வென்றார். ராவணனால் இவரது வாலில் வைக்கப்பட்ட நெருப்பைக் கொண்டே இலங்கையை எரித்து வெற்றி கொண்டார். ஆகாய மார்க்கத்தில் பறக்கும் ஆற்றல் உடையவர் என்பதால் ஆகாயத்தை வென்றார், இவ்வாறு, பஞ்ச பூதங்களை வென்ற பராக்கிரமசாலியாக ஆஞ்சநேயர் திகழ்ந்தார்.