சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு என்னும் வரிசையில் ஒவ்வொரு கிரகமும் ஒரு மணி நேரம் ஆதிக்கம் செலுத்துவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு ‘ஹோரை’ என்று பெயர். உதாரணமாக ஞாயிறன்று காலை 6:00 – 7:00 வரை சூரிய ஹோரை. தொடர்ந்து மற்ற கிரகங்களின் ஆதிக்கம் தொடரும். இதில் சுக்கிரன், புதன், குரு ஆகிய ஹோரைகளில் சுபநிகழ்ச்சி நடத்துவது சிறப்பு.