குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் பெற்றோருக்கு எச்சரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2018 05:08
குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் எச்சரிக்கை தேவை என்கிறார் ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார். பாசுரம் ஒன்றில் “பெற்றோர் குழந்தைகளுக்கு நாகரிகம் என்ற பெயரில் ஏதோ பெயர்களை வைக்கிறார்கள். காக்கும் கடவுளான திருமாலின் பெயர்களான நாராயணன், மாதவன், கோவிந்தன் என்றே வைக்க வேண்டும் இதற்கான பயனை “நாரணன் தம் அன்னை நரகம் புகாள்’ என்கிறார். வாழ்ந்து முடித்த பின் அவர்கள் ஒருபோதும் நரகம் போக மாட்டார்கள் என்றும் தெளிவுபடுத்துகிறார். “நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால் நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம் செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால் நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்” என்பதே ஆழ்வாரின் பாசுரம்.