திருப்பதியில் கோயில் கட்டிய மன்னர் தொண்டைமான். இவர் தினமும் ஏழுமலையானை தங்கத்தாமரை மலர்களால் வழிபட்டார். ஒருநாள் பெருமாள் முன், மண்ணால் ஆன மலர்கள் கிடப்பதை கண்டார். பீமன் என்னும் குயவனே இதற்கு காரணம் என தெரியவந்தது. ""புரட்டாசி சனி விரதமிருக்கும் அவன், தன் பணியைத் தொடங்கும் முன் மண் மலர்களால் அர்ச்சனை செய்வான். அவனை பெருமைப்படுத்தவே மண்மலர்களை ஏற்றேன் என அசரீரி கேட்டது. பணத்தை விட பக்தி சிறந்தது என்பதை இதன் மூலம் ஏழுமலையான் உணர்த்தினார். பீமன் போல விரதமிருந்து வழிபடுவோருக்கு ராஜயோக வாழ்வு அமையும்.