இக்கலியில் ஸன்யாஸம் வாங்கிக் கொள்ளாமல் க்ருஹஸ்தனாகவே இருந்து பகவானை பூஜித்து இந்த ஜன்மாவையே கடைசியாக செய்துக் கொள்ள முயற்சிப்பது தான் நல்லது என்று ஸ்வாமிகள் அபிப்ராயப் பட்டு வந்த போதிலும் குருவாயூரப்பன் சித்தப்படி 14/7/1992 வ்யாஸ பவுர்ணமியன்று காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ஸிம்ஹ லக்னத்தில் உடல் நிலை காரணமாக (ச்ஞிதtஞு டஞுச்ணூt ணீணூணிஞடூஞுட்) மஹாபெரியவாளின் பாதுகைகளிலிருந்து ஆபத்ஸன்யாஸம் வாங்கிக் கொண்டார்.
‘தன்னை ஆனந்தா என்று கூறிக்கொள்ளாதவர் துறவி’ என்ற சிவன்ஸார் வாக்கை அனுசரித்து ‘ராமசந்த்ராச்ரய ’ (ராமசந்த்ரனுக்குத் தான் அடைக்கலம்) என்று தீக்ஷா நாமம் வைத்துக் கொண்டார். எனினும், இவருக்கு கோவிந்த தாமோதர ஸ்தோத்திரத்தில் ஈடுபாடு அதிகமாக இருந்ததால் தான் ‘கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்’ என்று குறிப்பிடப்படுவதையே விரும்பியிருக்கிறார்.
ஸ்ரீமத் பாகவதம் 11வது ஸ்கந்தம் 18 வது அத்யாயம் 28 வது ச்லோகத்தை அனுசரித்து தான் ஸன்யாசம் வாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லுவார்.