பதிவு செய்த நாள்
30
அக்
2018
02:10
ஸ்ரீஸ்வாமிகள் ஸ்ரீமத் பாகவதத்தில் 11வது ஸ்கந்தத்தில் 5 வது அத்யாயம் 33வது ஸ்லோகத்தில் வரும் ‘ப்’ ருத்யார்திஹம் என்று ராமரைப் பற்றி சொல்வதை வைத்துக் கொண்டு ராமாயணத்தில் ராமசந்திரமூர்த்தி பக்தர்களின் குறைகளை எப்படி போக்கியிருக்கிறார் என்பதை கீழ்க்கண்டவாறு வர்ணித்து நம் போன்றவர்களுக்கு ராமரிடம் பக்தி ஏற்படும்படியும், ஸ்ரீமத் ராமாயணத்தை பாராயணம் செய்யும்படியும் ஊக்கம் கொடுப்பது வழக்கம்:-
1. தேவர்களுக்கு ராவணனிடம் இருந்த பயம் விஷ்ணு பகவான் அவர்களுக்கு அபயம் கொடுத்த உடனே நீங்கியது.
2. தசரதருக்கு பிள்ளை இல்லையே என்ற குறை ராமாவதாரத்தால் நீங்கியது.
3. விஸ்வாமித்ரருக்கு யாகம் முடிக்கவில்லையே என்ற குறை ராமர் யக்ஞரக்ஷணம் செய்ததால் நீங்கியது.
4. தாடகாவதம் செய்து வனத்தை ரக்ஷித்தார்.
5. அஹல்யா சாப விமோசனம் மூலம் சதானந்தருக்கு தன் அம்மா அப்பா (அஹல்யை, கவுதமர்) பிரிந்து இருக்கிறார்களே என்ற குறை நீங்கியது.
6. சிவ தனுசை முறித்து சீதாவிவாஹத்தினால் ஜனக மஹாராஜனின் குறை நீங்கியது.
7. பாதுகைகளை அனுக்ரஹித்து அளித்ததால் பரதனின் அபவாதம் நீங்கியது.
8. தண்டகா பிரவேசத்தால் மஹரிஷிகளை காப்பாற்றுதல் - கரதூஷணாதி 14,000 ராக்ஷஸர்களை வதம் செய்தது.
9. விராதனுக்கும் கபந்தனுக்கும் சாப விமோசனம் அளித்தார் - கழுகான ஜடாயுஸுக்கு மோக்ஷம் கொடுத்தார்.
10. சரபங்கர், ஸுதீக்ஷணர், சபரி போன்றவர்களுடைய தபஸ் ராம தரிசனத்தால் முழுமை ஆனது.
11. ரிஷ்யமூக மலையில் ஒளிந்து கொண்டிருந்த ஸுக்ரீவனுக்கு வாலிவதம் செய்து கிஷ்கிந்தா ராஜ்யமும், பத்னிலாபமும் கிடைத்தது.
12. வானரர்களுக்கு ஸீதாதேவி இருக்கும் இடத்தை சொன்னவுடன் சம்பாதிக்கு ரொம்ப வருஷங்களுக்கு முன் பொசுங்கிப் போன இறக்கைகள் முளைத்து குறை தீர்ந்தது.
13. ராமர் கைங்கர்யத்திற்கு வந்த ஹனுமாரை ஸமுத்திர நடுவில் சத்கரித்ததினால் மைனாக மலைக்கு இந்திர சாபம் நீங்கி ஸ்வஸ்தானம் போனது.
14. ஆஞ்ஜனேயரால் லங்கிணிக்கு சாபம் நீங்குதல்.
15. ஹனுமாருடைய ராமபக்தியால் (ராம நாம மஹிமையால்) முத்ரத்தை தாண்டி ஸீதாதேவியை தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்ததால் ராமருக்கும் ஸீதாதேவிக்குமே நிம்மதி ஏற்பட்டது.
16. விபீஷணனுக்கு சரணாகதி கொடுத்ததால் ராவணனால் ஏற்பட்ட அவமானம் நீங்கியது.
17. இந்த்ரஜித், கும்பகர்ணன் வதத்தால் தேவர்கள் பயம் நீங்கியது. ராவண வதத்தால் 14 உலகமும் நிம்மதி அடைந்தது.
18. ராமர் திரும்பி வந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டதால் பரதனுக்கும், அயோத்தி ஜனங்களுக்கும் ராமரை பிரிந்து 14 வருஷங்கள் இருந்த குறை நீங்கியது.
19. யுத்தம் முடிந்த பிறகு தசரதர் கைகேயிருக்கும், பரதனுக்கும் கொடுத்த சாபத்தை திரும்ப வாங்க வைத்தது.
20. ராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்டு லோகத்தை ரக்ஷித்தார். அயோத்தி ஜனங்கள் ‘ராம, ராம, ராம ’ என்று எப்போதும் சொல்லிக்கொண்டு பொறாமை முதலிய துர்குணங்கள் இல்லாமல் நிம்மதியுடன் சந்தோஷத்துடனும் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.
21. ராமசரிதம் ம்ருத சஞ்ஜீவினி ஆகும். எவ்வளவோ சிரமங்கள் நீங்கியிருக்கிறது. உதாரணம்:-
1. ஸ்வயம்ப்ரபை குகையிலிருந்து வானரர்கள் வெளிவர முடிந்தது.
2. சமுத்திரத்தின் நடுவில் சுரஸையிடம் ராமர் கதையை ஹனுமார் சொல்லி மீண்டு வருதல்.
3. ஸீதாதேவிக்கு அசோகவனத்தில் ராமகதையை சொல்லி நிம்மதியை கொடுத்தார் ஆஞ்ஜனேயர்.
3. யுத்த காண்டத்தில் யுத்தத்தின் நடுவில் நிறைய இடங்களில் ராமகதையை சொல்லுகிறார்கள். ஜயம் அடைகிறார்கள்.
ஸ்ரீமத் ராமாயண பாராயணத்தாலும், ச்ரவணத்தாலும் பக்த ஜனங்கள் இந்த கலியுகத்திலும் ஐஸ்வர்யம், புத்ரலாபம், நீண்ட ஆயுள் எல்லாம் அடைந்து மனம் சாந்தியுடன் விளங்கலாம். ராமாயணம் கேட்டால் மனதில் ஈரம் ஏற்படும். பிறருக்கு உதவி முடிந்தவரையில் செய்வார்கள்.
பட்டாபிராமனையும், ஸீதாதேவியையும் பட்டாபிஷேக கோலத்தில் மனதில் கீழ்கண்டவாறு த்யானம் செய்து கொண்டு நாம் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம்.
யாதவாப்யுதயத்தில் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகர் கீழ்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீவத்ஸ ஸம்ஸ்தானஜுஷா ப்ரக்ருத்யா ஸ்தானேன ஜிஹ்னேன ச
லக்ஷணீயௌ
த்ருஷ்ட்வாபீஷ்டம் பஜதாம் ததாதே ஜகத்பதி தாவிஹ தம்பதி த்வௌ ’
கிருஷ்ணனும் ருக்மிணி தேவியும் கல்யாண கோலத்தில் இருக்கும் போது த்யானம் செய்கிறவர்களுக்கு அபீஷ்டத்தை கொடுத்தார் (ணீஞுணூஞூஞுஞிt tஞுணண்ஞு) ததாதே (ணீணூஞுண்ஞுணt tஞுணண்ஞு)லும் வரும். ஆதலால் இப்போது ருக்மினி கல்யாண சரித்திரம் கேட்கிறவர்கள் அந்த தம்பதியை த்யானம் செய்தால் எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பார்.
இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யத்தை வைத்துக் கொண்டு ராம பட்டாபிஷேக கோலத்தில் (ராமரையும் ஸீதாதேவியையும்) த்யானம் செய்கிறவர்களுக்கும் (மனக் கண்களால் பார்க்கிறவர்கள்) எல்லா அபீஷ்டங்களையும் கொடுப்பார் என்று ஸ்வாமிகள் சொல்லுவது வழக்கம். நாம் எல்லோரும் ராம பக்திஸாம்ராஜ்யத்தில் நிம்மதியாக இருக்கலாம்.
அயோத்தியா நகரம்
ஆயிரங்கால் மண்டபம்
ஸ்வர்ணமயமான ஸிம்ஹாஸனம்
ரத்ன மயமான பீடம்
பட்டாபிராமர்
ஸிரஸில் ரத்தின கிரீடம்
திலக ஸோபிதமான நெற்றி
வளைந்த புருவங்கள்
தாமரஸ நேத்ரங்கள்
கருணா கர்பித கடாக்ஷம்
காதுகளில் மகரகுண்டலங்கள்
பருத்த கன்னங்கள்
உன்னத நாஸிகை
திவ்ய அதரபிம்பம்
ஸுந்தர மந்த ஹாஸம்
சங்கம் போன்ற கண்டம்
திருமார்பில் சந்தனம், முத்துமாலை மற்றும்
புஷ்ப மாலை
தோள்களில் தோள்வளைகள்
திருக்கரங்களில் ரத்தின கங்கணங்கள், கோதண்டம்
விரல்களில் ரத்தினமயமான மோதிரங்கள்
சின்முத்திரை, இடுப்பில் பீதாம்பரம், தங்க ஒட்டியாணம்
பாதங்களின் ரத்தினநூபுரம்
இவ்வாறு கோடி மன்மதப் பொலிவோடு பட்டாபிராமர் ஜொலிக்கிறார்.
ஸ்ரீஸீதாதேவி ஸ்ரீஇராமருடன்
ஸிரஸில் சூடாமணி
நெற்றியில் குங்குமம்
கண்களில் மை
காதுகளில் தாடங்கம்
மூக்கில் புல்லாக்கு
கழுத்தில் வைர அட்டிகை
திருமார்பில் முத்துமாலை
தோள்களில் தோள்வளைகள்
திருக்கரங்களில் வைர வளையல்கள், தாமரை புஷ்பம்
இடுப்பில் பட்டாடை
தங்க ஒட்டியாணம்
பாதங்களில் லக்ஷ்மண ஸ்வாமி அன்றாடம் ஸேவிக்கும்
ரத்தின நூபுரம், பாத ஸரம்
இவற்றுடன் கூடிய தங்க விக்ரஹம் போன்றும் மின்னல் கொடி போன்றும் விளங்கும் மஹாலக்ஷ்மி நித்ய கல்யாணியான ஸீதாதேவியோடு சேர்ந்திருக்கும் ராமரை பார்க்கும் போது-
மின்னல்கொடி, மேக மண்டலம்
கற்பகக் கொடி, கற்பவ்ருக்ஷம்
பத்மராக ரத்னம் - இந்த்ர நீல ரத்னம்
இவைகள் ஒன்று சேர்ந்தாற் போல் திவ்ய தம்பதிகள் ப்ரகாசிக்கிறார்கள்.
அவதார காலத்தில் அயோத்யா நகரவாசிகள் ராமசந்திர மூர்த்தியையும் ஸீதாதேவியையும் தரிசனம் செய்து என்ன ஆனந்தத்தை அனுபவித்தார்களோ, அதே ஆனந்தத்தை மேற்கண்டவாறு பட்டாபிஷேக கோலத்தில் மனக்கண்களால் பார்க்கிறவர்களும் இந்த கலியுகத்தில் அனுபவிக்கலாம்.