பதிவு செய்த நாள்
30
அக்
2018
02:10
ஸ்ரீமத் பாகவதம் ஸ்ரீமத் ராமாயணம் உபந்யாசம் சொல்ல ஆரம்பிக்கும் முன், ‘உபோத்காதம் ’ முன்னுரையாக ஸ்வாமிகள் கீழ்கண்டவாறு சொல்லுவது வழக்கம்.
பிரம்மா முதலில் ஸ்தாவரஸ்ருஷ்டி - மரம் செடி கொடிகளை ஸ்ருஷ்டித்து விட்டு, மிருகங்கள் பக்ஷிகள், பூச்சி வகைகளையும் ஸ்ருஷ்டித்தார். இவைகளில் திருப்தி அடையாலம் மனித ஸ்ருஷ்டி செய்தவுடன் தான் சந்தோஷப்பட்டார். ஏனென்றால் மனிதனைத் தவிர மற்ற ஸ்ருஷ்டிகளுக்கு ஆறாவது அறிவாகிய (பகுத்தறிவு, கூர்மபுத்தி) இல்லாததினால் பகவத் பஜனம் செய்து ஞானத்தை அடைந்து புனர்ஜன்மா (திரும்பி, திரும்பி அம்மாகர்பத்தில் பிறப்பு எடுக்காமல் இருப்பது) வராமல் தடுத்துக் கொள்ள முடியாது. மாட்டு வண்டியில் நிறைய பாரத்தை ஏற்றி மாட்டை அடித்து ஓட்டிக் கொண்டு போவார்கள் அவைகள் அந்த மாதிரி கஷ்டங்களை தவிர்த்துக் கொள்ளவும் முடியாது. தொழிற் சங்கங்கள் ஏற்படுத்திக் கொண்டு தங்கள் குறைகளை சொல்ல வேலை நிறுத்தம். கொடிபிடித்தல், பொதுக்கூட்டங்களில் பேசுதல் போல காரியங்களை செய்ய முடியாது.
மனிதர்கள் தங்களுக்கு நேரும் கஷ்டங்களை போக்கிக் கொள்ள நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள முடியும். பகவத் பஜனம் செய்வது பகவானுடைய நாம ஸங்கீர்த்தனம், பூஜை செய்வது அவதார ரகசியங்களை சிந்திப்பது போல காரியங்களை செய்து ஜன்மாவை கடைசியாக செய்து கொள்ள முடியும்.
மனிதர்கள் ப்ரம்மா ஏன் நம்மை படைத்தார். படைக்காமல் இருந்தால் கஷ்டமே இருக்காதே என்று நினைக்கிறார்கள். நம் பூர்வஜென்ம கர்மாவை அனுசரித்து கஷ்டங்கள் (சுக, துக்கங்கள்) ஏற்படுகிறது. பகவான் நம்மை ஸ்ருஷ்டிக்கு முன் வேதம் தர்ம சாஸ்திரங்களை ஏற்படுத்தியிருக்கிறார். எப்படி ஒருவன் புதிதாக வீட்டை நகரத்திற்கு தூரத்தில் உள்ள, சரியான பாதைகள், நிறைய வீடுகள் இல்லாத இடங்களில் கட்டி கிரஹப்ரவேச பத்திரிகை அனுப்பும் போது அத்துடன் எப்படி புது வீட்டிற்கு வருவது என்று ஒரு (ஞீடிச்ஞ்ணூச்ட்) வைத்து அனுப்புவது போல் நாம் கஷ்டப்படாமல் இருப்பதற்கு வேதம், தர்மசாஸ்திரம் என்கிற (ஞீடிச்ஞ்ணூச்ட்) கொடுத்தனுப்புகிறார். கிரஹப்ரவேச பத்திரிகையுடன் இருக்கிற (ஞீடிச்ஞ்ணூச்ட்)யை நாம் போகும் போது எடுத்துக் கொண்டு போகாமல் வீட்டை கண்டுபிடித்து விடலாம் என்று போய் அந்த பேட்டையில் ஒரு ரோடு, வழி காட்டுவதற்கு ஜனங்கள் இல்லாமல் இருப்பதால் வீட்டை கண்டு பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு அலைந்து விட்டு திரும்பி வரும்படி நேரும், கிரஹபிரவேசத்திற்கு கூப்பிட்டவனின் மேல் தப்பு சொல்ல முடியாது. அதே போல் வேதம், தர்ம சாஸ்திரப்படி வாழ்க்கையை நடத்தாவிட்டால் கஷ்டங்கள் தான் நிறைய ஏற்படும். நாம் செய்த தவறுக்கு பகவான் காரணம் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
பூமி வேண்டுமா - பூமிகாந்தன், பணம் வேண்டுமா - வக்ஷஸ்தலத்தில் (மார்பில்) மஹாலக்ஷ்மி, அழகு வேண்டுமா - மன்மதனுக்கு பிதா, ஆரோக்யம் வேண்டுமா - தன்வந்த்ரி, வித்தை வேண்டுமா - வேதாந்த ப்ரவர்த்தகன், ஆகையால் நாம் பகவானையே பஜிக்க வேண்டும்.
நாம் இப்போது செய்யப் போகும் (கதாச்வரணம்) காரியத்தின் பெருமையை தெரிந்து கொள்ளுவது நல்லது. வைகுண்டத்திலிருந்து அவதாரம் என்றால் கீழே இறங்கி வருதல் என்று அர்த்தம். துஷ்ட சம்ஹாரம், சிஷ்ட பரிபாலணம் மட்டும் அவதாரத்தின் லக்ஷ்யம் இல்லை. கலியுகத்தில் பூலோகத்தில் பிறக்கும் ஜனங்கள் தன்னுடைய அவதார கதைகளை படித்து, கேட்டு, சிந்தனம் செய்து உய்ய வேண்டும் என்ற முக்கிய நோக்கத்தில் தான் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் மற்றும் பல அவதாரங்கள் எடுத்து கதைகளை விஸ்தாரப்படுத்தினார்.
ஸ்ரீமத் ராமாயணத்தை கேட்கும் போது கதை சொல்லுபவர் கீழ்க்கண்டவாறு வர்ணிப்பார்:
சிரஸ்ஸில் ஜடை, மார்பில் மாந்தோல், இடுப்பில் மரவுரி, இடது கையில் கோதண்டம், வலது கையில் அர்த்த சந்திரபாணம், ஸ்யாமளமான காந்தி, முதுகில் அம்பராத்துணி, ஸாந்தமான வர்ச்சஸுடன், ஸீதாஸமேதனாய், லக்ஷ்மண ஸேவிதனாய், தண்டகாரண்ய பூமியில், நடமாடும் கல்பகவ்ருக்ஷமாய் கோதண்டராமன் ப்ரகாசிக்கிறார். தண்டகாரண்ய பூமியில் மஹரிஷிகள் தரிசனம் செய்து நமஸ்கரிக்கிறார்கள்.
இது கேட்பவர்களின் காது வழியாக மனிதற்குப் போய் அவர்களுடைய மனதில் உள்ள ஜன்மஜன்மாவாக படிந்திருக்கிற பாபங்களாகிற அழுக்குகள் துடைக்கப்பட்டு மனதாகிற கண்ணாடியில் பகவான் ப்ரகாசிப்பார்.
க்ருஷ்ண பகவான் கீதையில் - 18வது அத்யாயம் - 61 வது ஸ்லோகம்
ஈஸ்வர : ஸர்வ பூதாநாம்
ஹ்ருத்தே ஸேர்ஜுந திஷ்டதி
ப்ராமயந் ஸர்வபூ தாநி
யந்த்ராரூடாநி மாயயா
பகவான் ஒவ்வொருவரின் ஹ்ருதயத்தில் வாசம் செய்கிறார். ஆனால் நமக்கு அவர் தெரியவில்லை. காரணம் நம் ஹ்ருதயத்தில் அழுக்குகள் ஜன்மஜன்மாவாக நிறைய சேர்ந்திருக்கிறது. அவைகள் துடைக்கப்பட வேண்டும்.
நமக்கு விருப்பு வெறுப்பு இருப்பதினால் காரியங்கள் செய்கிறோம். பாபங்கள் ஏற்படுகிறது. பாப கர்மாவின் பலன் ஜன்மா, திருப்பி திருப்பி ஜன்மா எடுத்து பாபங்களை செய்து கொண்டு இருக்கிறோம். ஜன்ம சக்ரத்தை அறுப்பதற்கு பகவத் கதைகளை கேட்டு பகவானை சிந்திக்க வேண்டும்.
பாகவதம் சொல்லும் போது க்ருஷ்ணனை கீழ்க்கண்டவாறு வர்ணிப்பார்.
ஸ்ரஸிரஸில் மயில் தோகை
குடில குந்தளம்,
அர்த சந்த்ரமான லலாடம்
ஊர்த்வதிலகம்
வளைந்த புருவங்கள்
தாமரஸ நேத்ரங்கள்
கருணா கர்பித கடாக்ஷம்
காதுகளில் மகா குண்டலங்கள்
பருத்த கன்னங்கள்
உன்னத நாஸிகை
திவ்ய அதரபிம்பம
ஸுந்தர மந்தஹாஸம்
சங்கம் போன்ற கண்டம்
கழுத்தில் முத்து மாலை
திருமார்பில் சந்தனம்,
தோள்களில் தோள்வளைகள்
திருக்கரங்களில் ரத்தின கங்கணங்கள்,
விரல்களில் ரத்தின மயமான மோதிரங்கள்
புல்லாங்குழல்
இடுப்பில் பட்டு பீதாம்பரம், தங்க ஒட்டியாணம்
பாதங்களின் ரத்தின நூபுரம்
நீலமேக ச்யாமளன்
இவ்வாறு கோடி மன்மதப் பொலிவோடு திவ்யமான ரூபம்
யோகி த்யேயமாய், பக்த போக்யமாய், முமுக்ஷு ம்ருக்யமாய், முக்தானுபாவ்யமாய், ஸ்ரீநிவகேதனமாய், புருஷார்த்த ரூபமாய் விளங்கும் திருவடிகளில் பத்மரேகை, அங்குச ரேகை, வஜ்ர ரேகை அம்ருத கலசம் ஆதபத்ரம், கல்பகவ்ருக்ஷம், தோரணம் முதலிய ரேகைகளால் அலங்கரிக்கப்பட்ட மங்கள சரணம்.
பக்தியின் பெருமையை வர்ணிக்கும் போது பகவானுக்கு, தான் அனுக்ரஹம் செய்யும் போது பக்தி இருந்தால் போதும் மிருகமாகவோ தேவனாகவோ, அசுரனாகவோ, மனிதனாகவோ, இருந்தாலும் யாருக்கும் அனுக்ரஹம் செய்வார். இதை காட்டுவதற்கு மிருகமான கஜேந்திரன், வானரனான சுக்ரீவன், பக்ஷியான ஜடாயுஸ், கரடியான ஜாம்பவான், அசுபலகனான ப்ரஹ்லாதன், 5 வயது சிறுவனான துருவன் வேடனான குகன், வேடஸ்த்ரீயான சபரி, அசுரனான விபீஷணன் இவர்கள் எல்லோருக்கும் வித்தியாசமில்லாமல் அனுக்ரஹம் செய்திருக்கிறார். கபடமில்லாத பக்தியைத்தான் பகவான் பார்க்கிறார் என்பதை இந்த கதைகளிலிருந்து தெரிந்து கொண்டு நாம் பக்தி செய்தால் பகவானை அடையலாம் என்ற நம்பிக்கை பிறக்கும்.
பகவத் சரித்ரம், லீலைகள், ஸ்தோத்ரங்கள், ரூபவர்ணனம், பகவந்நாமாக்கள் அடங்கியது தான் ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம், போன்ற இதிகாச புராணங்கள், இவைகளின் நோக்கமே, நாம் பகவத்ரூபத்தை த்யானம் செய்து கொண்டும், நாம சங்கீர்த்தனம் செய்தும் உய்ய வேண்டும் என்பது தான். வேறு ஒன்றும் காரணம் இல்லை. கதை சொல்லுபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் ஒரே மாதிரி பலன் பகவத் அனுக்ரஹம்.
இந்த காலத்தில் இந்த மாதிரி உபந்யாசங்களைக் கேட்க வசதி குறைவாக இருப்பதால், பக்தர்கள் பகவத் கதையை அடிக்கடி மனனம் செய்து வருவது நல்லது. தங்கள் க்ருஹத்திலேயே ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் நாராயணம் க்ரந்தங்களை பாராயணம் செய்து வந்தால் பகவத் அனுக்ரஹத்தை அடையலாம்.
---------------------
2. பக்தி மார்க்கம்
பக்தி மார்க்கத்தின் சிறப்பையும், பகவந் நாம மஹிமையைப் பற்றியும் ஸ்வாமிகள் பக்தர்களுக்கு அவ்வப்போது விவரிக்கும் விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
1. பக்தி மார்க்கம் இரண்டு புறமும் தெரியும் விளக்கைப் போல (ரேழியில் ஏற்றி வைத்திருக்கும் தீபம் போல்) கர்ம மார்கத்திலும், ஞான மார்க்கத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
2. க்ருஷ்ண ஸ்ரீமத் பகவத் கீதையில் குணாதீதன், பக்தன், ஞானி இந்த மூன்று நிலையில் இருப்பவர்களை பற்றி வர்ணிக்கும்போது, சொல்லிய ஸ்லோகங்களின் அர்த்தங்கள் ஒரே மாதிரி இருக்கும். (குதூணணிணதூட்ண்)
3. யக்ஞம் பூர்த்தியானவுடன் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்யும்படி சொல்லியிருக்கிறது.
4. யக்ஞத்தின் விராம காலத்தில் (இடைவேளைகளின்) தான் நாரதர் பிரஹ்லாத சரித்திரமும், துருவசரித்திரமும் சொன்னார்.
5. ஸ்ரீசூத பவுராணிகர் சவுணகாதி ரிஷிகளுக்கு ஸ்ரீமந் பாகவதம் சொன்னதும் யக்ஞம் நடக்கும் போது தான்.
6. அச்யுத, அனந்த, கோவிந்த -கேசவாதி 12 நாமங்களும் (மொத்தம் 15 நாமாக்கள்) 3 வேளைகள் சந்தியாவந்தன சமயத்திலும், இதைத்தவிர தினம் ஆசமனம் செய்ய வேண்டிய சமயங்களிலும் (கை கால்கள் அலம்பினவுடனும், ஜலஸ்பர்ஸம், சரீர சவுகரியம் செய்து கொண்டவுடனும்) அனேக தடவைகள் ஒரு நாளில் வருவதால் பகவந் நாமத்தை குறைந்து 300, 400 தடவைகள் சொல்லும்படி நேருகிறது. நம்மை அறியாமல் (ணூணிதtடிணஞு) ஆக இந்த லாபம் கிடைக்கிறது. அச்யுத, அனந்த, கோவிந்த நாமங்கள் அசுரர்கள் விட்ட வியாதி யந்திரத்தை உடைக்க துர்கா தேவி உபயோகித்த அஸ்திரமாக சொல்லியிருக்கிறது.
7. பூஜை, பித்ரு தர்ப்பணம் முதலிய காரியங்கள் செய்யும் போதும், சங்கல்பத்தில் பகவத்ஸ்மரணம் செய்யச் சொல்லிவிட்டு பகவந்நாமாவைத்தான் (ராம, ராம, - கோவிந்த, கோவிந்த, கோவிந்த) சொல்லும்படி வைத்திருக்கிறார்கள்.
ததேவலக்னம் ஸுதினம் ததேவ தாராபலம் சந்த்ரபலம் ததேவ வித்யாபலம்
தைவபலம் ததேவ லக்ஷ்மீபதே: அங்க்ரியுகம் ஸ்மராமி
அபவித்ர : பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் சுதோபிவா
ய:ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி
மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம்
ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய
ஸ்ரீராம ராம ராம
8. ஞான மார்கத்திலும் ப்ரம்மசூத்திர பாஷ்யத்தின் முடிவில் ஆதிசங்கரர் சகுண ப்ரம்மமாகிற பகவானை சரணமடைந்தவர்களுக்கும் ப்ரம்ம சாக்ஷாத்காரம் ஏற்படும் என்று ஒரு ஸ்லோகம் சொல்லி பூர்த்தி செய்திருக்கிறார். (ஸகுண சரணானமபி அனாவ்ருத்தி ஸித்திரிதி)
9. லலிதாஸஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தில் 81 வது ஸ்லோகத்தில் பக்தமானஸ ஹம்ஸிகா ’ என்றும் 154 வது ஸ்லோகத்தில் ‘முனிமானஸ ஹம்ஸிகா ’ என்றும் வருகிறது. இதிலிருந்து பக்தனும் முனியும் (ஞானியும்) ஒரே மாதிரியாக அம்பாளின் அனுக்ரஹத்தை பெறுகிறார்கள் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
10. கோவிந்த தாமோதர ஸ்தோத்திரத்தில் 22, 25, 52 வது ஸ்லோகங்களில் வேத அத்யயனம் செய்து கர்மார்க்கத்தில் இருப்பவர்கள், காய்ந்த இலைகளை உட்கொண்டு வனத்தில் இருக்கும் முனிவர்கள், வியாசர், சுகர், வசிஷ்டர், போன்ற ரிஷிகளும் இந்த பகவன் நாமாவை (கோவிந்த, தாமோதர மாதவ என்று) சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று வில்வமங்கலாசார்யார் நன்றாக பாடியிருக்கிறார்.
கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம்
22. விஹாய நித்ராம் அருணோதயே ச
விதாய க்ருத்யாநி ச விப்ரமுக்யா
வேதா வஸாநே ப்ரபடந்தி நித்யம்
கோவிந்த தாமோதர மாதவேதி
25. ப்ரவாள ஸோபா இவ தீர்க கேஸா;
வாதாம்பு பர்ணாஸந பூதேதே ஹா:
மூலே தரூணாம் முநய: படந்தி
கோவிந்த தாமோதர மாதவேதி
52. பஜஸ்வ மந்த்ரம் பவபந்த முக்த்யை
ஜிஹ்வே ரஸஞே ஸுலபம் மநோஞம்
த்வைபாயநாத்யை: முநிபி: ப்ரஜப்தம்
கோவிந்த தாமோதர மாதவேதி
நாரதர் பக்தி சூத்திரத்தில் யதா வ்ரஜகோபிகானாம்’ அதாவது: கோபிகைகளின் பக்தி தான் உயர்ந்தது என்று சொல்லியிருக்கிறார். நாராயணபட்டத்ரியும் ஸ்ரீமந் நாராயணீயம் 76 வது தசகத்தில் உத்தவர் கோகுலத்திற்கு சென்று கோபிகைகளின் அபார க்ருஷ்ண பக்தியை கண்டு புகழ்ந்ததை ‘கோபிகாப்யோ நமஸ்து ’ - என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து கோபிகைகளுக்கு க்ருஷ்ணனிடம் எப்படி பக்தி வந்து வளர்ந்து முற்றி பகவத் அனுபவம் கிடைத்தது என்பதை தெரிந்து கொண்டு நம் வாழ்க்கையிலும் அந்த மாதிரி பக்தி வளர பகவத் கிருபையால் முயற்சி செய்ய வேண்டும். கோபிகைகளின் பக்தியைப் பார்ப்போம்:-
குழந்தை க்ருஷ்ணனை கோகுலவாசிகள் - கோபிகைகள் முதன் முதலில் யசோதா தேவிக்கு ‘ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தான் பார்க்க வந்தார்கள். ஆனால் க்ருஷ்ணன் ஆத்மஸ்வரூபமானதால் அவர்கள் மனதை கவர்ந்து விட்டான். அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தையைப் பார்க்க யசோதா தேவியின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு (பர்த்தா, குழந்தைகள், மாடு கன்றுகளையும்) க்ருஷ்ணனையும் பார்க்க வந்தார்கள். க்ருஷ்ணனே அவர் வீட்டிற்கு சென்று அனேக லீலைகளை புரிந்து மேலும் அவர்கள் மனதை கொள்ளை கொண்டார். க்ருஷ்ணன் பகலில் மாடுகள் மேய்க்க போய்விட்டு சாயங்காலம் வருவதற்குள் அவன் ஞாபகமாகவே இருந்தார்கள். எப்போது திரும்பி வருவான் என்று காத்துக் கொண்டு இருந்து விட்டு அவன் வந்தவுடன் பார்க்க வந்துவிடுவார்கள். அவனை பார்க்காமல் இருக்கும் 1 நிமிடம் 1 யுகமாக அவர்களுக்கு தோன்றிற்று. பால் கறக்கும் போதும், தயிர் கடையும் போதும் இதர வீட்டு வேலைகளை செய்யும் போதும் க்ருஷ்ணன் ஞாபகமாகவே இருந்து கொண்டும், அவன் லீலைகளைப் பாடிக் கொண்டும் நாட்களை கழித்து வந்தார்கள். (உதிணிடூதtடிணிண ல் ஞ்ணூச்ஞீதச்டூ) ஆக (படிப்படியாக) பக்தி வளர்ந்து கொண்டு வந்து வீட்டு வேலைகளை சரிவர செய்யாமலும், முடிக்காமலும் க்ருஷ்ணனை பார்க்க ஓடி வந்தார்கள். வேணு கானத்தை கேட்டவுடன் மனது அவனிடம் போய்விடும். நாட்கள் ஆக ஆக பக்தி முற்றியவுடன் பார்த்தா, குழந்தைகள், வீட்டு வேலைகளை முதலியவற்றை விட்டு விட்டு பகவானிடம் சென்றார்கள். பகவான் ராசலீலையை அனுபவிக்க வைத்தார். ப்ரம்மானந்தத்தையும் அனுபவிக்கும்படி செய்தார். யக்ஞ பத்னிகள் பகவானைப் பார்க்காமலேயே அவன் செய்த பால லீலைகளைப் பற்றி கேட்டே பக்தி உண்டாகி அவனிடம் சென்றார்கள்.
ஸ்ரீமந் நாராயணீயத்தில் 52 தசகங்களில் (37-83) க்ருஷ்ண சரித்திரத்தை சொல்லியிருக்கிறார். இதில் பால லீலைகளை மட்டும் 34 தசங்களில் பாடியிருக்கிறார். இதிலிருந்து பாலலீலைகளுக்கு எவ்வளவு முக்யத்துவம் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. பாலலீலைகளை கேட்டும், படித்தும், நினைத்தும் வந்தால் பக்தி வளரும், சுகர், சதாசிவ ப்ரமேந்திரர், நாராயண தீர்த்தர் போல் பல மஹான்கள் ஞானிகள் க்ருஷ்ணன் பாலலீலைகளில் மூழ்கி நிறைய பாட்டுக்கள் பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் கோபிகைகள் மாதிரி நாமும் பக்தி செய்ய வேண்டும். நாமும் முதலில் பெரியோர்கள், ஆசார்யர்கள் சொல்வதைக் கேட்டு சிறு வயதிலிருந்தே பகவத் பஜனத்தை (நாம சங்கீர்த்தனம் ஸ்தோத்ரபாராயணம், நாம ஜபம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத்ராமாயணம், ஸ்ரீமத் நாராயணீயம் பாராயணம் செய்வது) செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதில் ருசி ஏற்பட்டு மேலும் மேலும் செய்யத் தூண்டும், வளர்ந்து வரும் போது முதலில் 10, 15 நிமிஷம் நாம் ஜபம், பாராயணங்கள், விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் கொஞ்ச நேரம் செய்து வருவோம். பிறகு நாளாக நாளாக பஜனத்தை அதிக நேரம் செய்ய வேண்டும் என்று தோன்றும். பகவத் கிருபையால் பஜன நேரத்தை அதிகம் செய்து கொண்டு 1 மணி நேர நாம ஜபம், நிறைய ஆவர்த்தி விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் (10, 21, 51 ஆவர்த்திகள்) கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் எந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் பகவந் நாம ஸ்மரணம் மனதில் இருந்து கொண்டு பகவானின் ஞாபகமாகவே இருக்கலாம். இந்த மாதிரி பகவத் பஜனத்தை அதிகமாக்கிக் கொண்டு வந்தால் லௌஹிக காரியங்கள், பத்னி, புத்ரன், புத்ரி, பதவி, பணம் இவைகளில் ஆசை குறைந்து கொண்டு வந்து பக்தி முதிர்ச்சி அடைந்து ஜீவன் முக்தி நிலையை பகவத் கிருபையால் கோபிகைகள் மாதிரி அடையலாம். கோபிகைகளின் பக்தியை ஆதர்சமாக கொள்ள வேண்டும். கோபிகைகளும் முதலில் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு பகவானிடம் ஈடுபட்டார்கள். இது தான் ஸ்ரீமத் பகவதத்தின் தாத்பரியம், வேறு (கர்ம, ஞான) மார்க்கங்களுக்கு நம் உழைப்பு நிறைய தேவைப்படும். 100% <உழைக்க வேண்டும். ஆனால் பக்தி மார்க்கத்தில் பகவத் கிருபை 33 1/3%, பகவானின் மங்கள ஸ்வரூபத்தின் மனதை கவரக்கூடிய தன்மை 33 1/3%, (ஸ்வரூப வர்ணனை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது), மீதி 33 1/3% மட்டும் நம் உழைப்பு இருந்தால் போதும், பக்தி மார்க்கம் ஆரம்பத்திலிருந்தே நமக்கு ஆனந்தத்தை கொடுக்கும். பக்தி மார்க்கத்தின் சிறப்பு இப்படிப்பட்டது. ஸ்வாமிகள் நாம் பகவானிடத்தில் சிறிய குழந்தையாக இருந்து பக்தி செய்வதின் பெருமையை - இச்சா - உபாயம், கிருபா - சாதனம் -சாதனம், பலம் - மதுரம் என்று ஒரு மஹான் வர்ணித்திருப்பதாக சொல்லுவார்.
குழந்தைகள் ஆசைப்படுவதை பெற்றோர்கள் தெரிந்து கொண்டு அன்பினால் (கிருபையால்) எவ்வளவு சிரமமாக இருந்தாலும் நடத்தி வைப்பது போல பகவான் நமக்கு எது ஹிதமோ அதை நாம் கேட்கமாலே கொடுப்பார். அதன் பலன் மதுரமாக இருக்கும். நமக்கு மோக்ஷத்தையே வழங்குவார். நாம் செய்ய வேண்டியது பகவத் பஜனம். நாம ஜபம் ஒன்றே எல்லாவற்றையும் கொடுக்கும்.
ஸ்வாமிகள் அனுக்ரஹிக்கும் பாலக்ருஷ்ணனின் ஸ்வரூப வர்ணனை
“ஸ்ரீபாலக்ருஷ்ணன்:
சிரஸில் மயில் தோகை
குடிலகுந்தலம் நெற்றியை மறைக்கிறது
அழகான நெற்றி - ஊர்த்வ திலகம்
வளைந்த புருவங்கள், தாமரஸ நேத்ரம்
குளிர்ந்த கடாக்ஷம், காதுகளில் குண்டலம்
பருத்த கன்னங்கள், உன்னத நாசிகை
திவ்யாதர பிம்பம், ஸுந்தர மந்தஹாஸம்
கழுத்தில் சங்கிலி புலி நகம் கைகளில் கங்கணங்கள்,
விரல்களின் ரத்தின மோதிரங்கள்,
இடுப்பில் தங்க அரைஞான் பட்டு கவுபீனம் (திகம்பர வேஷம்) பாதங்களில் தண்டை கொலுசு, ஜல் ஜல் என்ற சப்தம் கொடுக்கிறது. நீலமேக ச்யாமளன், மனதை கவரக்கூடிய கோடி மன்மதனுக்கு சமானமான திவ்யரூபம்’