இந்த சந்தர்ப்பத்தில் பழூர் கிராமத்தின் மஹத்வத்தைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இங்குக் காவேரி நதிக்கரையில் விசாலாக்ஷி சமேத விச்வநாதர் கோயில் அமைந்திருப்பதால் காசி க்ஷேத்திரத்திற்கு சமமானது என்று கூறி மஹா மஹநீயர்களான ஸ்ரீஸ்ரீஸ்ரீ ந்ருஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள், சந்திரசேகர பாரதிஸ்வாமிகள், வரகூர் ஸ்வாமிகள், காஞ்சி காமகோடி சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் (ஸ்ரீமஹா பெரியவா) முதலானோர் பல தடவைகள் இந்த கிராமத்திற்கு வந்து பல நாட்கள் தங்கி இருந்திருக்கிறார்கள். இந்த சிவன் கோயிலில் பத்னிகளுடன் கூட நவக்ரஹங்கள் அமைந்திருப்பதால் நவக்ரஹ ஸ்தலமாக ப்ரசித்தி பெற்று விளங்குகிறது. நம் அதிஷ்டானத்திற்கு வெகு அருகில் சுமார் பலநூறு வருஷங்களுக்கு முன் சோழ மன்னனால் கட்டப்பட்ட கல்யாண சுந்தரர் கோயிலும் (கூச்ட்டிடூ ணச்ஞீத ஞ்ணிதிt. ச்ணூஞிடஞுடூணிணிஞ்டிஞிச்டூ ஞீஞுணீt)ஆல் சமீபத்தில் நிறைய செலவில் புதுப்பிக்கப்பட்டு அதன் நிர்வாகத்தில் உள்ளது). புராதன சின்னமாக விளங்கி வருகிறது. காசி க்ஷேத்திரத்தில் டுண்டி விநாயகர் பெருமை பெருகுவது போல் இங்கும் அதிஷ்டானத்திற்கு எதிரில் ஸித்தி புத்தி ஸமேத வலம்புரி வரஸித்தி விநாயகர் கோயிலும் அமைந்திருக்கிறது. அக்ரஹாரத்தின் மேலக் கோடியில் லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயிலும் உள்ளது. 2010ல் புனருத்தாரனம் நடந்து தினசரி பூஜை நடக்கிறது.
அக்ரஹாரத்தின் நடுவில் ஒரு சிறிய பஜனை மடத்தில் 400 வருஷங்களாக பூஜை செய்யப்பட்டு வந்த ஒரு தஞ்சாவூர் ஆர்ட் பெரிய சைஸ் ராம பட்டாபிஷேக படம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு தினம் காலை மாலைகளில் நியமத்துடன் பூஜை நடந்து வருகிறது. ப்ரதி வருஷமும் ராம நவமி சமயத்தில் திவ்ய நாம பஜனை, சீதா கல்யாணம், அன்னதானம் முதலியவைகளுடன் 5 நாட்கள் மஹோத்ஸவம் நடத்தி வருகிறார்கள். ராம சந்திரமூர்த்தி பக்தர்களுக்கு வரப்ரசாதியாக விளங்கிவருகிறார்.