வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் கடல் ஒரு ஆன்மிக முக்கியத்தும் பெற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது. அந்த கடலிலிருந்து மனிதர்கள் உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை வழங்கும் வகையில் பெறபட்ட ஒரு பொருள் தான் உப்பு. விட்டில் பணப்புழக்கம் அதிகம் இருக்கவும், செலவ நிலை உயரவும் நம் வீட்டிற்க்கு வாங்கும் பொருட்களில் மகாலட்சுமியின் அம்சமான கல் உப்பை முதலில் வாங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நாம் அன்றாடம் வெளி இடங்களுக்கு செல்லும்போது அந்த இடங்களின் தீய அதிர்வுகளும், பல வகையான மனிதர்களின் எதிர்மறை அதிர்வுகளை நமது இந்த சக்தி உடல்கள் ஈர்த்துக்கொள்கின்றன.
இந்த அதிர்வுகள் நமது சக்தி உடல்களில் தங்கி, நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். நீரில் சிறிது கல் உப்பை உப்பை ஒரு தேக்கரண்டி அளவு கரைத்து குடிக்கவேண்டும். குளிக்கும்போது நீரில் உப்பை கலந்து குளித்தால் உங்களை அண்டியிருக்கும் கெட்ட சக்திகள் விலகிப் போவதை கூட உங்களால் உணர முடியுமாம். உப்பு, நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்திகொண்டது. கையில் உப்பை த்துக்கொண்டிருக்கும்போது பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். அதுபோல நம் வீட்டில் சேர்ந்திருக்கும் தீய அதிர்வுகள் மற்றும் சக்திகலை போக்குவதற்கு நாம் வாரம் ஒரு முறை வீட்டின் தரை பகுதிகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். அப்போது அந்த நீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து அந்நீரை கொண்டு வீட்டை கழுவி சுத்தம் செய்வதால் வீட்டிலிருந்த தீய அதிர்வுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.