மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கும் விஷ்ணு சகஸ்ரநாமம், பீஷ்மரால் தர்மருக்கு உபதேசிக்கப்பட்டது. 150 ஸ்லோகங்கள் கொண்ட இப்பகுதியில், 16 முதல்107வது ஸ்லோகம் வரை விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இறுதியுள்ள 22ஸ்லோகங்களில் சகஸ்ரநாமம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் உள்ளன. காலை அல்லது மாலையில்,48 நாட்கள் தொடர்ந்து படித்தால், எண்ணியதுநிறைவேறும். இதற்கு ‘காம்ய பாராயணம்’ என்று பெயர். வேண்டுதல் ஏதும் வைக்காமல், தினமும் படிப்பதை ‘நித்ய பாராயணம்’ என்பர். எப்படி படித்தாலும், நன்மை கிடைப்பது உறுதி.