பதிவு செய்த நாள்
12
பிப்
2019
04:02
விநாயகர் திருமணமானவர். அவருக்கு சித்தி, புத்தி என இருமனைவிகள் உண்டு என்று வடமாநிலங்களில் சொல்கிறார்கள்.தமிழகத்திலே, அம்மாவைப் போல பெண் வேண்டும் என ஆற்றங்கரையில் பிரம்மசாரியாக வீற்று இருப்பதாக கூறுகிறோம்.
இதே போல, வால்மீகி, கம்பராமாயணத்தில் பிரம்மச்சாரியாக விளங்கும் அனுமனுக்கு, இரண்டு மனைவிகள் இருப்பதாக தாய்லாந்து ராமாயணம் கூறுகிறது. கிழக்காசிய நாடுகளில்பரவிய ராமாயண வரலாறு, அந்தந்த நாட்டின் கலாச்சார பண்பாட்டின் அடிப்படையில் சில மாறுதல்களைப் பெற்றது.தாய்லாந்து அரசர், நான்காம் ராமரால் எழுதப்பட்டராமாயணத்திற்கு, ‘ராமகியான்’ என்று பெயர். ‘ராமனின் புகழ்’ என்பது இதன் பொருள். இதில் சீதையைத் தேடிச் செல்லும் அனுமன், ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட புஸ்மலி என்பவளின் அழகில் ஈர்க்கப்பட்டு, திருமணம் செய்கிறார்.புஸ்மலியின் வேண்டுகோளுக்கு இணங்க, அவளது சகோதரி சுவன்னமலீயையும் ஏற்கிறார். சுவன்னமலீயின் உதவியோடு, சீதை இருக்குமிடத்தை அனுமன் அடைவதாக ராமகியான் கூறுகிறது.