பதிவு செய்த நாள்
19
பிப்
2019
03:02
சென்னை – திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூருக்கு 2 கி.மீ., தூரத்தில் உள்ள மலைக்கோயில் வஜ்ரகிரி. இங்கு சித்தர்கள் வழிபட்ட வடிவேலன் (முருகன்) கோயிலும், மலையின் உச்சியில் பசுபதீஸ்வரர் கோயிலும் உள்ளது.
மாதந்தோறும் பவுர்ணமியன்று பகல் 3:00 மணிக்கு மலையடிவார விநாயகர் கோயிலில் இருந்து, பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். அச்சிறுபாக்கம், கடமலைபுத்தூர் தத்தாத்ரேயர் கோயில், பெரும்பேர்கண்டிகை, சீதாபுரம், உத்தமநல்லூர், திருமுக்காடு, பள்ளிப்பேட்டை வழியாக (14 கி.மீ.,)சென்று கிரிவலம் நிறைவு செய்வர். மலையில் கண்ணுக்குத் தெரியாமல் சூட்சுமமாக தவம் புரியும் சித்தர்களின் ஜீவசமாதிகள், அரியவகை மூலிகைகள் நிறைந்திருப்பதால் ஆற்றல் பெருகும். கல்வித்தடை, திருமணத்தடை, மகப்பேறின்மை, தொழில் பிரச்னை, கடன்தொல்லை, பணமுடக்கம் அகலும். ஆரோக்கியம் மேம்படும். விருப்பம் நிறைவேறும்.