காசி விஸ்வநாதர் கோயிலில் நின்ற கோலத்தில் இருப்பவள் விசாலாட்சி. ஆனால் நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள தடாகாந்தபுரம் கோயிலில் விசாலாட்சி அமர்ந்த நிலையில் இருக்கிறாள். இதற்கு காரணம் தெரியுமா? காசி யாத்திரை சென்ற பக்தர்கள் சிலர் தங்கள் ஊருக்கு வரும்படி வேண்ட, விஸ்வநாதருடன் இங்கு வந்தாள் விசாலாட்சி. நீண்ட தூரம் நடந்து வந்ததால் கால் வலிக்குமே என வருந்திய மக்கள், அம்பாளை பீடத்தில் உட்காரச் சொல்ல அவளும் சம்மதித்தாள்.