நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்களை இயற்றியவர் வேதவியாசர். மகாபாரத கதையை இவர் சொல்ல, விநாயகர் இதனை தன் தந்தத்தினால் எழுதினார். முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் வியாசருக்கு சன்னதி உள்ளது. இவரது இடக்கையில் ஏடும், வலது கையில் சின்முத்திரையை காட்டியபடியும் இருக்கிறார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இவரை வழிபடுவர்.