ராமபிரான் பூஜை செய்வதற்காக இமயமலையில் இருந்து சிவலிங்கம் எடுத்து வந்தார் அனுமன். அந்த சிவலிங்கமே தர்மபுரிக்கு அருகிலுள்ள தீர்த்தமலை கோயிலில் ’அனுமந்தீஸ்வரர்’ என்னும் பெயரில் உள்ளது. அனுமன் சன்னதியில் செந்தூரம், துளசி தீர்த்தம் பிரசாதமாக கொடுப்பது வழக்கம். ஆனால் திருநீறு, குங்குமத்தை அனுமனின் பிரசாதமாக இங்கு தருகின்றனர்.