குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்தை சுற்றி வந்து வழிபடுவர். இது ஆக்சிஜனை அதிகம் வெளியிடுவதால் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தும். விநாயகருக்குரிய மந்திரம் அல்லது ஸ்லோகங்கள் சொல்லியபடி 12, 24,48,108 என்ற எண்ணிக்கையில் சுற்றலாம். சனிக்கிழமையில் சுற்றுவது இரட்டிப்பு பலன் தரும். நீண்ட நாள் நோய் தீரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். செல்வம் பெருகும். பயம் தீரும். பணி உயர்வு கிடைக்கும். மற்றவருடன் பேசிக் கொண்டும், சூரியன் மறைந்த பிறகும் சுற்றுவது கூடாது.