வீட்டை பூட்டி விட்டு, வெளியூர் கிளம்ப பயப்படுவோர் பலர். அதிலும் வீட்டில் ஆள் இருக்கும் போதே பொருட்களை திருடுபவர்கள் மலிந்து விட்ட காலம் இது. நியாயமான வழியில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், நம்மிடமே நிலைக்கச் செய்வார் காலபைரவர். இவரது வாகனமான நாய் நன்றியுடன் சுற்றி வந்து வீட்டைக் காப்பது போல, இவரும் நம் வீட்டைப் பாதுகாப்பார். தன்னை நம்பி சரணடைந்தவர்களை காப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. தேய்பிறை அஷ்டமியன்று இவரை வழிபடுவது சிறப்பு. எலுமிச்சம்பழத்தை பைரவரின் பாதத்தில் வைத்து பின்னர் வாங்கிக் கொள்ளுங்கள். அபிஷேகத்திற்கு திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பச்சரிசி மாவு வாங்கிக் கொடுங்கள். பக்தர்களுக்கு தயிர் சாதம் பிரசாதமாக கொடுங்கள். தாராளமாக வெளியூர் செல்லுங்கள். உங்கள் வீட்டைக் காப்பது பைரவர் பொறுப்பு.