காலடி கிருஷ்ணர் கோயிலில் மே 5 முதல் 9 வரை கனகதாரா யாகம் நடக்கிறது. ஆதிசங்கரர் சிறுவயதில், ஏழைப்பெண் ஒருவரின் வீட்டில் பிச்சை கேட்க, தன் கணவர் சாப்பிடுவதற்காக வைத்திருந்த நெல்லிக்கனியை கொடுத்தாள். இதைக் கண்ட சங்கரர் மனம் உருகி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி, ஏழைப் பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழிந்தாள்.
இதனடிப்படையில், காலடி கோயிலில் யாகம் நடக்கிறது. இதில் தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகளை வைத்து 10,008 முறை அர்ச்சனை செய்வர். மே 7 அன்று காலை 9:00 மணிக்கு, மகாலட்சுமிக்கு தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகளால் அபிஷேகம் நடக்கிறது. நெல்லிக்கனிகளை வாங்க 093888 62321 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.