முற்பிறப்பில் நாம் செய்த பாவத்தை இப்பிறவியில் அனுபவிக்கிறோம். நல்லவராக வாழ்ந்தாலும், சிலருக்கு துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. இதனால் பக்தியை கைவிட்டு விரக்தியின் உச்சத்தில் இருப்பதுண்டு. இந்த மனப்பான்மையை போக்கும் விரதம் பிரதோஷம். அமாவாசை அல்லது பவுர்ணமியை அடுத்த 13ம் நாள் அன்று வரும் திரயோதசி திதியன்று சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு (மாலை 4:30 – 6:00 மணி) நடக்கும். சிவன், நந்தி அபிஷேகம் காண்பது நல்லது.