பணக்கார கடவுளான குபேரருக்கு வீட்டில் எளிய முறையில் பூஜை நடத்தலாம். வெள்ளிக்கிழமை அல்லது பவுர்ணமியன்று மாலை 6:00 மணிக்கு விளக்கேற்றி குபேரனின் படத்துக்கு மாலை அணிவித்து, தேங்காய், பழங்கள், அப்பம், பாயாசம், கடலை, வெல்லத்தை பிரசாதமாக படைக்க வேண்டும். குழந்தைகளுக்கு முதலில் பிரசாதத்தை கொடுக்க வேண்டும். செல்வம் கொழிக்க இந்த பூஜையை நடத்துவர்.