விருந்துக்குப் போன இடத்தில் நீண்டநாள் தங்கினால், உனக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம் ஆயிற்றே என வேடிக்கையாக சொல்வர். இதன் பொருள் என்ன தெரியுமா? சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் நடக்கும். அதை தரிசித்தால் சிவலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் எனக் குறிப்பிட்டனர்.