ஆகதம், கதம், மதம் என்னும் சொற்களின் சேர்க்கை ஆகமம். ஆகதம் என்றால் சிவனிடமிருந்து உபதேசமாக வந்தது என்பது பொருள். சிவன் உபதேசிக்க பார்வதியின் செவியைச் சென்றடைந்ததால் கதம் எனப்பட்டது. மகாவிஷ்ணுவால் மதிக்கப்படுவதால் மதம் எனப்பட்டது. ஆகமம் என்ற சொல் கோயில் வழிபாடு, பூஜை முறைகளை விளக்குகிறது.