காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கம் இங்கு அமைக்கப்பட்டிருப்பதும், இங்கு முருகன் மயில் மீது இருக்க, வள்ளி தெய்வானை இருவரும் யானை மீது வீற்றிருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்
பள்ளியப்பன் தெரு, யானைக்கவுனி
சென்னை சென்ட்ரல் அருகில், சென்னை.
மணப்பேறு, மகப்பேறு, செல்வம், கல்வி, பணி போன்றவை நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
திருவண்ணாமலை போலவே இங்கும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இது சிவன் கோயிலாக இருந்தாலும் சைவ-வைணவ பேதம் இல்லாமல் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.
தல வரலாறு:
சுமார் 400 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் ஒரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தரான இவர் ஆண்டுதோறும் திருவண்ணாமலைக்கு சென்று திருக்கார்த்திகை தீபம் தரிசனம் செய்வார். வயதான காலத்தில் இவரால் திருவண்ணாமலை செல்ல முடியாமல் போனது. வருந்தி கண்ணீர் விட்டு அழுதபோது சிவபெருமான் ஜோதி சொரூபமாக இவருக்கு காட்சி கொடுத்து அசரீரியாக, உனக்கு கிடைக்கும் லிங்கத்தை வைத்து இங்கு கோயில் கட்டி வழிபாடு செய். திருவண்ணாமலையில் வழிபட்ட பலன் இங்கும் கிடைக்கும், என்று கூறினார். இதனடிப்படையில் அந்த பெரியவர் தனக்கு நண்பர் மூலம் காசியிலிருந்து கிடைத்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அண்ணாமலையாராக நினைத்து வழிபாடு செய்து வந்தார். அப்போது முதல் இக்கோயிலின் மேலேயும் திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. பக்தர்கள் சிவனை ஜோதி சொரூபமாக வழிபாடு செய்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கம் இங்கு அமைக்கப்பட்டிருப்பதும், இங்கு முருகன் மயில் மீது இருக்க, வள்ளி தெய்வானை இருவரும் யானை மீது வீற்றிருப்பது சிறப்பு.
இருப்பிடம் : சென்னை சென்ட்ரலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டரில் உள்ள யானைக்கவுனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, எதிரேயுள்ள அண்ணாபிள்ளை தெரு வழியாகச் சென்றால், வலதுபுறம் உள்ளது கோயில்.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
சென்னை
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
சென்னை
தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060.