சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி.
தல சிறப்பு:
மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
இக்கோயிலிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. தூணில் சிற்பமாக சரபேஸ்வரர் காட்சி தருகிறார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது உற்சவரும் புறப்பாடாகிறார். ஒரு தூணில் விநாயகர் கையில் வீணையுடன் காட்சி தருகிறார். மற்றொரு தூணில் முருகன், யானை மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இடது கையில் சேவல் இருக்கிறது.
சிவனை வணங்கியபடி திருமால் மற்றும் பிரம்மா, கங்கா பார்வதியுடன் சிவன், வாசுகி நாகத்தின் மீதுள்ள தாமரையில் அமர்ந்த சிவன், மனைவியருடன் தெட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதம் தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய சிற்பங்கள் அவசியம் காணவேண்டியவை.
பிரார்த்தனை
இங்கு வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
முருகன், வடுக பைரவர், சரபேஸ்வரர் ஆகியோர் பிரார்த்தனை மூர்த்திகளாக இருக்கின்றனர். கிரக, நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள சரபேஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
ஜாதகரீதியாக வக்கிர தோஷம் உள்ளவர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சிறிய லிங்கத்திற்கு மல்லிகைப்பூ மாலை அணிவித்து, வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவித்தும், வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
சுவாமிகளுக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
சிவலிங்க சிறப்பு: கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாகக் காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. லிங்கத்தைச் சுற்றி மண்டபம் போன்ற அமைப்பில் காப்பும், நாகா பரணமும் அணிவித்து உள்ளனர்.சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்திக்கு மேலுள்ள சுவரில் அஷ்டதிக் பாலகர்கள் வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது விசேஷம். அம்பிகை தேனுகாம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள். முன் மண்டபத்திலுள்ள தூணில் கபிலர், கையில் லிங்க பூஜை செய்த சிற்பம் இருக்கிறது. திராட்சை மாலை: மலர் மாலை, எலுமிச்சை மாலை, வடைமாலை ஆகியவற்றை சுவாமிக்கு அணிவித்து பார்த்திருப்பீர்கள். இங்குள்ள வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவிக்கிறார்கள். இவருக்கு வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றுவதும்
வித்தியாசமான வழிபாடு: சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, ஆலமரம் இல்லாமல் உள்ளார். துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது.
சிற்ப சிறப்பு: ஞாயிறு ராகுகாலத்தில் (மாலை 4.30- 6 மணி) ஒரு தூணிலுள்ள சரபேஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது உற்சவர் புறப்பாடும் உண்டு. கையில் வீணையுடன் விநாயகர், கையில் சேவலுடன் யானை மீது அமர்ந்த முருகன், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதத்தை தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய தூண் சிற்பங்கள் விசேஷமானவை.
தல வரலாறு:
கபில மகரிஷி, சகரன் என்பவனின் மகனை சபித்து விட்டார். இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தது. வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து, சிவபூஜை செய்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான். தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபிலர், பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார். ஒரு லிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்களைத் தூவினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தன்னை கையில் வைத்து வணங்கியதன் காரணம் கேட்க, ""மணலில் லிங்கத்தை வைக்க மனமில்லை,'' என்றார். சிவன் அவரிடம், ""கையில் லிங்கத்தை வைத்து பூஜித்த முறை சரியல்ல,'' எனச் சொல்லி அவரை பசுவாகப் பிறக்கச் செய்துவிட்டார். பசுவாக பிறந்த கபிலர், இங்கு சிவனை வழிபட்டு முக்திபெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் இங்கு கோயில் எழுப்பினார். பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமி, "தேனுபுரீஸ்வரர்' எனப்பட்டார். "தேனு' என்றால் "பசு'. இவருக்கு "உலகுய்ய வந்த சிற்றேரி நாயனார்' என்றும் பெயர் உண்டு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார்.
லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது.
பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது.
இருப்பிடம் : சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் பஸ்களில், 5 கி.மீ.,
தூரத்திலுள்ள ராஜகீழ்பாக்கம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ., சென்றால் மாடம்பாக்கம் கோயிலை அடையலாம். ஆட்டோ
வசதி உண்டு.
தாம்பரத்தில் இருந்து குறித்த நேரத்தில் கோயிலுக்கு நேரடி பஸ்கள் உள்ளன.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
தாம்பரம், வேளச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம் :
மீனம்பாக்கம்
தங்கும் வசதி : சென்னை
தாஜ் கோரமண்டல் +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் +91-44-2811 0101 தி பார்க் +91-44-4214 4000 கன்னிமாரா +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ +91-44-4225 2525 அசோகா +91-44-2855 3413 குரு +91-44-2855 4060 காஞ்சி +91-44-2827 1100 ஷெரிமனி +91-44-2860 4401 அபிராமி +91-44-2819 4547 கிங்ஸ் +91-44-2819 1471