மூலவர் அர்த்தநாரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக வழிபடப்படுகிறார். இந்த லிங்கம் மிகப் பெரியது. மூன்றரை அடி விட்டமுள்ள ஆவுடையார் இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.
சுவாமியின் கருவறைக்கு வெளியே விநாயகரும், சுப்ரமணியரும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். மேலும் லட்சுமி நாராயணப் பெருமாள், கருடாழ்வார் சன்னதிகளும் உள்ளன.
பிரார்த்தனை
கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்க, குடும்பச் சிக்கல்கள் விலக, மணப்பேறு, மகப்பேறு அமைய, நோய் நொடி நீங்க, கேட்டதெல்லாம் கிடைக்க என சகல நற்பேறுகளையும் அருளும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் அர்த்தநாரீஸ்வரர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கிழக்கு நோக்கிய கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்தால் மகா மண்டபம், பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளது. கருவறை வெளியே விநாயகரும் சுப்பிரமணியரும் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக வழிபடப்படுகிறார். சிவ-சக்தியை ஒரு சேர வழிபட்ட பலன் இவரை வணங்குவதால் கிட்டும் என்கின்றனர். இந்த லிங்கம் மிகப் பெரியது. மூன்றரை அடி விட்டமுள்ள ஆவுடையார் இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.
சிவபெருமானுக்குரிய மகேஸ்வர வடிவங்களில் சத்யோ ஜாதம் (மேற்கு திசை) எனும் முகத்துக்கு உரிய மூர்த்தியாக விளங்குபவர் அர்த்தநாரீஸ்வரர். சிவசக்திவடிவமான இந்த லிங்க வடிவை பூஜிப்போர் இம்மை மறுமை இரண்டிலும் விருப்பப்படுகின்ற அனைத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள். இந்த லிங்கம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டது என்றொரு தகவலும் நிலவுகிறது. எனவே இங்கே வழிபாடு செய்வது, பல புண்ணியத்தலங்களை தரிசித்த பலனைத் தரக்கூடியது.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். சுவாமிக்கு இடதுபுறம், தெற்கு நோக்கி தனிச் சன்னதியில் அம்மன் திரிபுர சுந்தரி காட்சி தருகிறாள். அருகே நவகிரக சன்னதியும் உள்ளது. மூலவருக்கு வலதுபுறம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவனும் பெருமாளும் அருகருகே அமைந்து அருள்பாலிப்பது சிறப்பு. லக்ஷ்மிநாராயணப் பெருமாள் சன்னதிக்கு எதிரே தனிச் சன்னதியில் கருடாழ்வார் சேவை செய்கிறார். மேலும் அனுமன், விநாயகர் ஆகியோருக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. உற்சவர்களாக சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் அருள்கின்றனர்.
தல வரலாறு:
சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வசித்த பெரியவர் ஒருவரின் தோட்டத்துக் குளத்தில் நீர் வற்றியபோது தூர் எடுக்கச் செய்தார். அச்சமயம் இக்கோயில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. உடனே சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு, அருகில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து அதில் வைக்கப்பட்டு தினசரி விளக்கேற்றி வழிபாடு செய்து வந்துள்ளனர். சில காலத்திற்குப் பின்னர் கோயில் அமைத்துள்ளனர். நீண்டகாலமாக ஜலத்திலேயே வாசம் செய்ததால் இவருக்கு ஜலகண்டேஸ்வரர் என்றொரு பெயரும் உண்டாம். இவரை வழிபட்டால் சிவனையும், சக்தியையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் இந்த சிவனை அர்த்தநாரீஸ்வரர் என அழைக்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தாஷ்பிரகாஷ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள ஆராவமுதன் கார்டன் முதல் தெருவில் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இருப்பிடம் : சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தாஷ்பிரகாஷ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள ஆராவமுதன் கார்டன் முதல் தெருவில் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
சென்னை
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி :
சென்னை
தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060.