Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சவுந்தரேஸ்வரர்
  தல விருட்சம்: வன்னி, கொன்றை, வில்வம்
  ஊர்: சைதாப்பேட்டை
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம்  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்கள் அமைந்துள்ளது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை.  
   
    
 பொது தகவல்:
     
  இங்கு வரஸித்தி விநாயகர், கொடிமரம், நந்தி தேவர், உபதேவதைகள், சோமாஸ்கந்தர், நிருதி விநாயகர், சைவ நால்வர், சேக்கிழார், அபிராமி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், சூரிய பகவான் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  பெரும்பாலான ஆலயங்களில் தல விருட்சம் என்று ஒரே ஒரு மரம் மட்டும் காணப்பட்டுப் போற்றி வணங்கப்படும். ஆனால், இந்தத் திருக்கோயிலில் மூன்று தல விருட்சங்கள் காணப்படுகின்றன. வன்னி, கொன்றை, வில்வம் ஆகியவையே அந்த மூன்று விருட்சங்கள். இந்த ஆலயப் பிராகாரத்தில் காணப்படுகின்ற வன்னிமரம் சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை கொண்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தனது சென்னை விஜயத்தின்போது சைதாப்பேட்டை சவுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து ஈசனை தரிசித்த மகா பெரியவா மூன்று நாட்கள் இந்த வன்னி மரத்தின் அடியிலேயே தங்கி இருந்தார். வன்னி மரத்தின் அடியில் பைரவர், நாகர் மற்றும் வன்னீஸ்வரர் ஆகிய தெய்வ வடிவங்களைத் தரிசிக்கலாம். வன்னி மரத்தையும், இதன் அடியில் இருக்கின்ற திருமேனிகளை வலம் வருவதும் சிறப்பு. கருத்தொருமித்த தம்பதியாகக் கணவன் - மனைவியர் வாழ்வதற்கு வன்னி மரத்தை வலம் வருதல் நலம். இங்கே விளக்கேற்றி வழிபடுவோர் அதிகம். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பலரும் தங்கள் இல்லத் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடப்பதற்கு முன் இந்த வன்னிமரத்தை வணங்கி விட்டுச் செல்கின்றனர். அவர்கள் வன்னிமரத்துக்கு பூணூல் அணிவிப்பதும், இலை போட்டு விருந்து நைவேத்தியம் செய்வதும் வேறு எங்கும் காணமுடியாத வழக்கம்.  
     
  தல வரலாறு:
     
  பழைமையும், சாந்நித்தியமும் கொண்டு இன்றைக்கும் விளங்கி வருகின்ற திருக்கோயில். கேட்கும் வரத்தை அருளும் இந்தத் திருக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. 12-ஆம் நூற்றாண்டில் சதயன் என்கிற வணிகப் பெருமகனார் ஆலயப் பிராகாரம் அமைத்து, திருக்கோயிலை சீரமைப்பு செய்திருக்கிறார். அதோடு இங்கு நித்ய பூஜைகள் மற்றும் விழாக்கள் தடை இல்லாமல் நடைபெறுவதற்கு நிவந்தங்களை எழுதி வைத்தார் என்றும், அவரை சிறப்பிக்கும் விதமாக இந்தப் பகுதி சதயபுரி என்று அழைக்கப்பட்டதாகவும் பழைய குறிப்புகள் சொல்கின்றன.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்கள் அமைந்துள்ளது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar