இது சிவத்தலமாக இருந்தாலும் இங்குள்ள மகாமண்டபத்தில் கருடாழ்வார் திருமேனி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வெளிகண்ட நாதர் திருக்கோயில்,
பாலக்கரை, திருச்சி மாவட்டம்.
பொது தகவல்:
திருச்சுற்றின் மேற்கில் முத்துக் கருப்பன், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் உள்ளனர். சூரியன், சனீஸ்வரன், நாகர், சண்டிகேசுவரர், பைரவர், நவகிரக நாயகர்கள், தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை சன்னதிகள் உள்ளன. அர்த்த மண்டப நுழைவாயிலில் விநாயகரும், தண்டாயுதபாணியும் அருள்கின்றனர்.
பிரார்த்தனை
கன்னியர்கள் நல்ல கணவனைப் பெறவும், திருமணத் தடை நீங்கவும், தங்களைப் பிடித்துள்ள பில்லி, சூனியம் விலகவும், வியாபாரத்தில் அபிவிருத்தியாகவும், தீவினைகளால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும், மறைமுகமாக வரும் எதிர்ப்புகள் விலகவும், பிற பாதிப்புகள் யாவும் நீங்கவும் இங்குள்ள சுவாமியை வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு கால நேரத்தில் இங்குள்ள துர்க்கைக்கு விளக்கேற்றி, பைரவருக்கு சிறப்பு ஆராதனையும் அபிஷேகங்களும் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கருவறையில் இறைவன் வெளிகண்ட நாதர், லிங்கத் திருமேனியராக கீழ்த் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வெளி என்பதற்கு ஆகாயம், அண்டம் என்றெல்லாம் அர்த்தம் உண்டு. இத்தலத்து ஈசனை வழிபடுவதால், மறைமுகமாக வரும் எதிர்ப்புகள், பிற பாதிப்புகள் யாவும் விலகும் என்பது நிச்சயம்! மகா மண்டபத்தின் இடது புறம் கருடாழ்வார் திருமேனி இருப்பது வித்தியாசமானது. சமயக் குரவர்கள் நால்வரின் திருமேனிகளும் உள்ளன. அன்னை சுந்தரவல்லி நான்கு கரங்களுடன் மேல் கரங்களில் தாமரை மலர்களையும் கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடனும் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். சுந்தரவல்லி என்ற பெயருக்கு ஏற்ற அழகிய திருவடிவம் அன்னையுடையது. இவளை வணங்குவோர் வாழ்வில் மங்களங்கள் யாவும் நிறையும் என்பது நம்பிக்கை. அன்னையை அடுத்து ஸ்ரீனிவாசப் பெருமாள் தாயார் ஸ்ரீதேவி பூதேவியுடன் தனி மண்டபத்தில் சேவை சாதிக்கிறார். அம்பிகையின் தமையன் பெருமாள் என்பதால், கல்யாண உற்சவ காலங்களில் இவருக்கு தனிச்சிறப்பு. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிறப்பு ஆராதனையும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. இந்த ஆராதனையில் கலந்துகொள்வதால் தங்களைப் பீடித்துள்ள பில்லி, சூன்யம் விலகும் என்றும்; வியாபாரம் அபிவிருத்தி ஆகும் என்றும் நம்புகின்றனர் பக்தர்கள்.
தல வரலாறு:
உய்யக் கொண்டான் ஆற்றின் கரையில் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெளிகண்ட நாதர் கோயில் அமைந்துள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இது சிவத்தலமாக இருந்தாலும் இங்குள்ள மகாமண்டபத்தில் கருடாழ்வார் திருமேனி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.