Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: நல்லாண்டவர் என்ற மாமுண்டி
  தல விருட்சம்: காட்டு மின்னை மரம்
  ஊர்: மணப்பாறை
  மாவட்டம்: திருச்சி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை வருடப்பிறப்பு, ஆடி வெள்ளி, ஆவணி உறியடித்திருவிழா, புரட்டாசி சனி, விஜயதசமியில் அம்பு போடுதல், கார்த்திகை தீபம், தைப்பொங்கல், மகா சிவராத்திரி பங்குனி உத்திர திருவிழா ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்கள் ஆகும். ஸ்ரீராமநவமி, ஆடி முதல் வெள்ளி பால்குடம், இரண்டாம், மூன்றாம் வெள்ளி சுவாமி வீதியுலா, நான்காம் வெள்ளி ஸ்ரீநல்லாண்டவர் குதிரை வாகனப் புறப்பாடு, பெருந்திருவிழா, கோகுலாஷ்டமி, மஹாளய அமாவாசை, திருக்கார்த்திகை உற்ஸவம் ஆகியவை விசேஷ நாட்கள்.  
     
 தல சிறப்பு:
     
  இத்தலத்தில் சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை. லாட சன்னாசி என்பவர் வட தேசத்து சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கூடாது என்பதற்காக இவரை இத்தலத்திலேயே தங்கி அருளாசி வழங்கும்படி நல்லாண்டவர் வேண்டினார். அவரது விருப்பப்படி லாடம் பூட்டப்பட்ட நிலையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இவருக்கு இரண்டாவது பூஜை. மூன்றாவது பூஜையையே நல்லாண்டவர் ஏற்றுக்கொள்கிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை தாலுகா - 621 306 திருச்சி மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4332 - 267 586, 98658 55061 
    
 பொது தகவல்:
     
  பெரிய சுற்றுப்பிரகாரத்துடன் அமைந்த இத்தலத்தில் அனுமதி விநாயகர், மதுரைவீரன், பாரிகாரர், ஏழு கருப்பண்ணசாமி, ஒங்கார விநாயகர், பேச்சியம்மன், பட்டத்து யானை, நல்லாண்டவர் யானை, தெப்பக்குளத்து முருகன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

நல்லாண்டவர்க்கு ராஜகோபலன், இலக்கையன், நல்லைய்யா, நல்லேந்திரன் ஆகிய திருநாமங்களும் உண்டு. காலில் விலங்கு பூட்டப்பட்டு, கையில் கமண்டலமும் காலில் ஆணியால் செய்த செருப்பையும் அணிந்திருக்கும் பிரம்மச்சரிய கடவுளான லாட சன்யாசி, சகல நோய்களையும் தீர்க்கும் வைத்தியராகத் திகழ்கிறார். சித்தனான இவர், யானை மலைக்குச் செல்லும் வழியில், இக்கோயிலில் உள்ள ஏழு கருப்பு பேச்சியாத்தாள் முதலிய தெய்வங்களின் ஆற்றலைக் கண்டு வியந்து, தனது சக்தியால் அத்தெய்வங்களின் ஆற்றலை ஒரு கலயத்துக்குள் திரட்டிச் செல்ல முயல, முத்துக்கருப்பர் இதை முறியடிக்கிறார். பின்னர் தாம் செய்த தவறை உணர்ந்த சித்தர், லாட சன்னியாசி என இங்கேயே முத்துக்கருப்பனின் அருகில் அமர்ந்து விடுகிறார்.

சிறிய ராஜகோபுரம். மதுரை நோக்கிச் செல்லும் வழியில் தனது துணைவியரான வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் இருவரோடும் களைப்பாறிய இடத்தில் மதுரை வீரனுக்கு சிறிய கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. ஒரே கல்லில் ஏழு கருப்பு தெய்வங்களின் வடிவங்கள் செதுக்கப்பெற்று வழிபாடு நடந்து வருகிறது. இந்த ஏழு கருப்பரின் ஏவலராய் கம்பீரத் தோற்றத்தில் மகாமூனீஸ்வரர் இருவர் எழுப்பப் பெற்றுள்ளனர். நான்கு கரங்களுடன் துவார பாலகர்கள் காவல் தெய்வங்களாக உள்ளனர். மகாமண்டபத்தின் இடதுபுறம் கருடாழ்வார், முன் மண்டபத்தின் வலது புறம் ஆஞ்சநேயர் மற்றும் பேச்சியம்மன், ஓங்கார விநாயகர், தெப்பக் குளக்கரை முருகன் உள்ளிட்ட தெய்வங்கள் காண்போரை வியக்க வைக்கிறது.
 
     
 
பிரார்த்தனை
    
  குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், உடன்பிறந்தவர்களுக்கு தொந்தரவு, கணவன் மனைவி பிரச்னை, விஷ ஜந்துக்களால் தொந்தரவு, பெண்களுக்கு மனது ரீதியாக ஏற்படும் எந்த பிரச்னையாக இருந்தாலும் இங்கு வந்து நல்லாண்டவரிடம் முறையிட்டால் அண்ணனாக இருந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.

ஒரு வாரத்திலேயே தீர்த்து வைப்பார். ஏழு கருப்பண்ண சாமியை வேண்டினால் அதிர்ஷ்டம் கைகூடும்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறிய உடன் நல்லாண்டவருக்கு வேஷ்டி, துண்டு மற்றும் பரிவட்டம் சாத்தி, அர்ச்சனை செய்கிறார்கள். 
    
 தலபெருமை:
     
  நல்லாண்டவரின் வாகனமாக யானையும், காவல் தெய்வமாக புளிகருப்பண சுவாமியும், வாகனமாக குதிரையும் உள்ளது.  
     
  தல வரலாறு:
     
  மாயமானை ராமர், "பூண்டிய' (சாய்த்த) இடம் தான் மான்பூண்டி தலமாக விளங்குகிறது. இப்பெயர் மருவி மாமுண்டி ஆண்டவர் திருத்தலமாக விளங்குகிறது என தல வரலாறு சொன்னாலும், மான்பூண்டி வள்ளல் எனும் மாவீரர் ஒருவரின் வரலாறோடும் இத்திருக்கோயில் வரலாறு ஒப்பிடப்படுகிறது.

மந்திர ஆற்றலும், வலிமை படைத்த வீரராகவும் விளங்கியவர் மாவீரர் மாமுண்டியரசர். இவர் கருணை உள்ளத்துடன் இப்பகுதியின் தலைவராக நீதி ஆட்சி செய்ததுடன், கள்வர் கூட்டத்திலிருந்தும் மிருகங்களிடமிருந்தும் இப்பகுதி மக்களை காத்து வந்தார். ஒரு முறை இத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு வடபகுதியில் உள்ள குளத்தில், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிமார்களும் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கயவர் கூட்டத்தை சேர்ந்த பலர் இவர்களை துன்புறுத்தினர். இந்த கயவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றும்படி கதறினர். இவர்களின் கதறலைக்கேட்ட மாமுண்டியரசர் உடனே குதிரை மீது வந்து இவர்களை காப்பாற்றினார்.

""சரியான நேரத்தில் வந்து எங்களது அண்ணன் போல் காப்பாற்றினீர்கள். எனவே உங்களை நல்லண்ணன் என அழைப்பார்கள்.'' என நன்றிப்பெருக்குடன் வணங்கினர். அன்றிலிருந்து நல்லண்ணன், நல்லாண்டவர், நல்லையா, மாமுண்டி என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார்.

துள்ளிக் குதித்து ஓடிய அந்த அழகிய, தங்க மாயமானைக் கண்டு மயங்கித்தான் போனாள் சீதை. அண்ணல் ராமனிடம் அதைப் பிடித்துத் தரக் கேட்க, மானைத் தூரத்திய ராமன், ஓர் இடத்தில் அதை அம்பிட்டு சாய்த்தான். மானை சாய்த்த இடமே மான்பூண்டித்தலம் ஆனதாம். பூண்டி என்ற சொல்லுக்கு சாய்த்த என்பது பொருள். மாமுண்டிச் சீமை என்று பழங்காலத்தில் மக்கள் இந்த இடத்தை அழைத்தனர். மாமுண்டி ஆறு ஓடி வரும் இங்கே, ஆற்றுக் கரையின் இரு மருங்கும் மணம் மிக்க மலர்களைத் தாங்கிய சோலை. மணப்பாறை என்று ஊரின் பெயரே இதனை ஒட்டி வந்தது தானாம். இப்பகுதியின் தலைவனாக விளங்கிய மாவீரன் மாமுண்டி, நீதிநெறியோடு ஆட்சி புரிந்ததோடு, ஆன்மிக வழியிலும் சிறந்து விளங்கினான். பில்லிப் பிணி அகற்றுவதில் சிறந்த சித்தனாகத் திகழ்ந்தான். இத்தகு சிறப்பு வாய்ந்த மாமுண்டிச் சித்தன் உறையும் திருத்தலமே இம்மாமுண்டி நல்லாண்டவர் திருக்கோயில், கோயில் சன்னிதி எழும்பும் முன்னரே, பொந்துப்புளி கருப்பண்ணசுவாமி இங்கே இருந்துள்ளார். இவர் மாமுண்டி ஆண்டவரின் இதயம் நிறைந்த இறைவன். மாதவம்பட்டியில் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய புளியமரப் பொந்துகள் அதிகம் இருந்தன. இதனால் பயந்த மக்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, எனக்குக் கோயில் கட்டி வணங்கினால் உங்கள் அச்சத்தைப் போக்குவேன் என ஆசரீரி ஒலிக்க, மக்கள் அங்கே கோயில் எழுப்பி வழிபட்டனர். பக்தி இலக்கியங்கள் இறைவனை, ஆண்டவன் எனும் பொதுச்சொல்லால் போற்றி மகிழ்கின்றன. சைவ-வைணவ சிறப்புக்களைத் தாங்கிய திருத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. திருநீறும், துளசி தீர்த்தமும் திருவடியும் இங்கே பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

வடமேற்கில் உள்ள இளத்தில் நீராகிக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஆடையை குறும்புக் கள்வர் திருடிச் சென்றனர். கண் கலங்கி நின்ற அவர்களை தைரியப்படுத்தும் விதத்தில், அவர்களின் ஆடைகளை ஒருவர் கரையின் ஓரத்தில் வைத்துச் சென்றார். இதனால் மனம் மகிழ்ந்த எழுவரும், அவரை அண்ணா என்று அழைத்தனர். இதுவே, பிற்காலத்தில் நல்லண்ணா, நல்லாண்டவர் என வழங்கப்பட்டதாம்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை. லாட சன்னாசி என்பவர் வட தேசத்து சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கூடாது என்பதற்காக இவரை இத்தலத்திலேயே தங்கி அருளாசி வழங்கும்படி நல்லாண்டவர் வேண்டினார். அவரது விருப்பப்படி லாடம் பூட்டப்பட்ட நிலையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இவருக்கு இரண்டாவது பூஜை. மூன்றாவது பூஜையையே நல்லாண்டவர் ஏற்றுக்கொள்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar