சித்திரை விசு, வைகாசி விசாகம், ஆனி உத்திரத்தில் நடராஜர் அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், பொங்கல், சிவராத்திரி, பங்குனி உத்திரம். அமாவாசையும், புதன்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களிலும் மண் பூஜை செய்யப்படுகிறது.
தல சிறப்பு:
பூமிநாத சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். சிவன் கோயிலில் பொதுவாக பைரவர் தெற்கு நோக்கியே நிற்பார். ஆனால், இங்கு மேற்கு முகமாக உள்ளார். நவக்கிரகங்களும் திசை மாறாமல், சூரியனைப் பார்த்தவாறு நிற்கின்றன. முருகன் கருவறையில் அசுர மயிலோடும், உற்சவர் தேவ மயிலோடும் அருள்பாலிக்கின்றனர். பங்குனி 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் சிவலிங்கம் மீது சூரிய கதிர்கள் விழுகின்றன. இங்கு தெட்சிணாமூர்த்தி ஞானத்தை அருள்பவராக வீற்றிருக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்
மண்ணச்சநல்லூர்
திருச்சி மாவட்டம்.
போன்:
+91 93447-69294
பொது தகவல்:
பிரகாரத்தைச் சுற்றிலும் பைரவர், தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகன், நவகிரகங்கள் முதலான தெய்வங்கள் உள்ளன.
பிரார்த்தனை
புதிதாக வீடு கட்டுபவர்கள், நிலம் வாங்குபவர்கள் இங்குள்ள பூமிநாதரையும், திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க அறம் வளர்த்த நாயகி அம்மனையும் வேண்டிக்கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
வாஸ்து பரிகார பூஜை: நிலம் வாங்கும் முன்னும், வீடு கட்டுவதற்கு முன்னும், வீடு கட்டும் போது தடை ஏற்பட்டாலும் நிலத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து பிடிமண் (ஒரு கைப்பிடி மண்) எடுத்து மஞ்சள் துணியில் கட்டி வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்து வரவேண்டும். வாஸ்து நாள் அன்று இதை கோயிலுக்கு கொண்டு வந்து தங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜித்த மண்ணுடன் கருவறையை வலம் வந்து, முகப்பு மண்டபத்தில் கட்டிவிட வேண்டும். கட்டுமானப் பணிகள் துவங்கியவுடன், மீண்டும் கோயிலுக்கு வந்து, மண்டபத்தில் கட்டிய மண் முடிச்சை அவிழ்த்து கோயில் வளாகத்திலுள்ள வில்வமரத்தடியில் கொட்டிவிட வேண்டும். இதனால், பிரச்னைகள் அனைத்தும் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. பூஜைக்கு கொண்டு வரும் மண்ணை, அர்ச்சகர் பாணத்தின் மேல் வைத்து தருகிறார். இதை வைப்பதற்கு ஏற்ப பாணத்தின் மேல் குழி போன்ற அமைப்பு இயற்கையிலேயே அமைந்து உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் வன்னி மரம் உள்ளது. புது கட்டடம் கட்டுபவர்கள், இந்த மரத்தடியிலிருந்து மண்எடுத்து பிரகாரம் வலம்வந்து, மனையின் வடகிழக்கு மூலையில் போடுவதன் மூலமும் பணிகள் தங்குதடையின்றி நடப்பதாக நம்பிக்கையுள்ளது. இங்குள்ள முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கட்டடப்பணிகளில் உள்ள தடைகளை அவர் வேல் கொண்டு விலக்குவார் என்கின்றனர் பக்தர்கள்.
அம்மனுக்கு வஸ்திரம்: அம்பாள் அறம்வளர்த்த நாயகிக்கு வஸ்திரம் சாத்தி வழிப்பட்டால் திருமணத் தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. பயஉணர்வு விலகுகிறது. மனதில் தர்மசிந்தனை பிறக்கிறது. மனம் பலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வதாகவும் நம்பிக்கையுள்ளது. இந்த அம்பிகை இன்றும் அறத்தை வளர்த்து அருள் செய்வதாக ஐதீகம். பூமிநாத சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். சிவன் கோயிலில் பொதுவாக பைரவர் தெற்கு நோக்கியே நிற்பார். ஆனால், இங்கு மேற்கு முகமாக உள்ளார். நவக்கிரகங்களும் திசை மாறாமல், சூரியனைப் பார்த்தவாறு நிற்கின்றன. முருகன் கருவறையில் அசுர மயிலோடும், உற்சவர் தேவ மயிலோடும் அருள்பாலிக்கின்றனர். பங்குனி 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் சிவலிங்கம் மீது சூரிய கதிர்கள் விழுகின்றன. இங்கு தெட்சிணாமூர்த்தி ஞானத்தை அருள்பவராக வீற்றிருக்கிறார்.
தல வரலாறு:
அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின் உதவியை நாடினர். சிவபெருமானும் தேவர்களுக்கு உதவிட முன்வந்தார். கோபக்கனல் கொண்டு உக்கிரத்துடன் எழுந்தார். அந்தகாசுரனை சூலத்தால் கொன்று அழித்தார். அப்போது சிவபெருமானின் நெற்றியிலிருந்து, பூமியில் விழுந்த வியர்வைத் துளியில் இருந்து பூதம் ஒன்று தோன்றியது. அது தன் பசியைத் தணித்துக் கொள்ள யுத்த பூமியில் வீழ்ந்து கிடந்த உடல்களைத் தின்றது. பசி தணியாததால் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தது. சிவபெருமான் பூதம் முன் தோன்றி, வேண்டிய வரம் கேள் எனக் கூறினார். மூன்று உலகங்களையும் எரித்து அழிக்கும் திறன் வேண்டும், என கேட்டது. சிவபெருமானும், சில காரணங்களால் அந்த வரத்தை அளித்தார். பூதம் முதலில் பூமியை விழுங்க முற்பட்டது. தேவர்கள் அதனை தடுத்து, பூமியில் குப்புறத் தள்ளி, பூதத்தை அழுத்திப்பிடித்து எழ முடியாதபடி செய்தனர். கவிழ்ந்த தலையுடன் பூமியில் குப்புறப்படுத்த நிலையில் உள்ள பூதம், தேவர்களிடம் எனக்கு பசிக்கிறது! நீங்கள் அழுத்திப் பிடித்துள்ளதால் என்னால் உணவு தேடிபோக முடியாது. நீங்களே உணவளியுங்கள், என்றது. பூதமே! பூலோகமக்கள் வீடு, கட்டடம் கட்டும் முன், மனைப் பகுதியில் செய்யும் பூஜையில் வழங்கும் பொருள்களும், விதிமுறையின்றி செய்யப்படும் யாகங்களில் வழங்கப்படும் பொருள்களும் உனக்கு உணவாகட்டும். பிரம்மன் முதலான 45 தேவர்களின் சக்தி உன்னை அழுத்திப் பிடித்திருக்கும். குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஒன்றரை நாழிகை (36 நிமிடம்) நேரம் எழ அனுமதி தரப்படும். உனக்கு வாஸ்துபுருஷன் என்று பெயரிடுகிறோம். நீ எழும் நேரத்தில் மக்கள் மனை பூஜை செய்வர். அப்போது உனக்கு உணவும் அளிப்பர். அதற்கு நன்றிக்கடனாக, அவர்கள் எழுப்பும் வீடு, கட்டடங்களை நல்ல முறையில் எவ்வித குற்றம் குறையும் இல்லாமலும், தடையில்லாமலும் முடித்து தர வேண்டும், என்றனர். பூதமும் சம்மதித்தது. அச்சத்தைத் தரும் பூதத்தின் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், மண்ணைப் பாதுகாக்கும் தேவதையாக விளங்கியதால், இந்த பூதம் பிறந்த இடத்துக்கு மண்ணச்சநல்லூர் என்று பெயர் தோன்றியது. வாஸ்து பூதத்தை உருவாக்கிய சிவனுக்கு இங்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு பூமிநாதர் என்று பெயர் ஏற்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பூமிநாத சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். சிவன் கோயிலில் பொதுவாக பைரவர் தெற்கு நோக்கியே நிற்பார். ஆனால், இங்கு மேற்கு முகமாக உள்ளார். நவக்கிரகங்களும் திசை மாறாமல், சூரியனைப் பார்த்தவாறு நிற்கின்றன. முருகன் கருவறையில் அசுர மயிலோடும், உற்சவர் தேவ மயிலோடும் அருள்பாலிக்கின்றனர். இங்கு தெட்சிணாமூர்த்தி ஞானத்தை அருள்பவராக வீற்றிருக்கிறார். விஞ்ஞானம் அடிப்படையில்:பங்குனி 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் சிவலிங்கம் மீது சூரிய கதிர்கள் விழுகின்றன.