சித்திரை பிரமோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, சுதர்சன ஜெயந்தி, ராம நவமி
தல சிறப்பு:
தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியில் இருந்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில்
மேற்கு சைதாப்பேட்டை
சென்னை
பொது தகவல்:
இங்கு ஆண்டாள், கோதண்டராமர், அனுமன், சேனைமுதலி, நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள பெருமாளை வேண்டிச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
விஜய நகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. ஆதியில் இந்தக் கோயிலில் சீதாதேவி-லட்சுமணர் சகிதமாக ராமர் அருள்பாலித்து வந்தார். அனுமன் சன்னிதி மட்டும் இல்லாமல் இருந்தது. கோயிலில் இருந்து சுமார் அரை கி.மீ தொலைவில் உள்ள அனுமனை வணங்கி வந்தனர் பக்தர்கள். பிறகு ஆலயத்தில் அனுமனுக்கும் சன்னதி அமைக்கப்பட்டது.
வருடந்தோறும் தமிழ் வருடப் பிறப்பு அன்று பிரம்மோத்ஸவ விழா துவங்கி, பத்து நாட்கள் சிறப்புற நடைபெறுகிறது. தினமும் பெருமாள் திருவீதியுலா, சிறப்பு ஆராதனைகள் என அமர்க்களப்படுகிறது ஆலயம். சித்திரை நட்சத்திரத்தில் கொடியேற்றப்பட்டு, திருவோணம் நட்சத்திரத்தில் விழா நிறைவுறும். புரட்டாசியில் நவராத்திரி விழாவும் விமரிசையாக நடைபெறும்.
தல வரலாறு:
சுமார் 700 வருடங்களுக்கு முன்பு, கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற பொழுது ஓரிடத்தில் பள்ளம் தோண்ட, அதில் இருந்து தாயாரின் விக்கிரகத் திருமேனி மற்றும் பெருமாளின் பஞ்சலோக விக்கிரகம் ஆகியவை கிடைத்தன. ஆகவே, அந்த விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள். தேசாய் பிரிவில், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் திருவேங்கடவன் குடிகொண்டிருக்கும் திருப்பதிக்கும் நரசிம்மர் அருளும் சோளிங்கருக்கும் அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவர். எனவே, இங்கே பிரதிஷ்டை செய்த பெருமாளுக்கு, பிரசன்ன வேங்கட நரசிங்க பெருமாள் எனும் திருநாமத்தைச் சூட்டினர்.
சக்கரத்தாழ்வாரை வணங்கிச் செல்ல தினமும் ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். சக்கரத்தாழ்வாரின் திருமேனி முன்னே இருக்க... பின்னே அதே விக்கிரகத்தில் நரசிம்மர் காட்சி தருகிறார். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சக்கரதாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி, பிரகார வலம் வந்து வேண்டிக் கொண்டால், நினைத்ததெல்லாம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்! மேலும், பிரசன்ன வேங்கடேச பெருமாள் எனும் திருநாமத்துடன் திகழும் பெருமாளைத் தரிசனம் செய்தால், திருப்பதி மற்றும் சோளிங்கருக்குச் சென்று தரிசித்த பலன் கிட்டும் என பக்தர்கள் கூறுகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியில் இருந்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.