Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: வரதராஜப்பெருமாள்
  அம்மன்/தாயார்: புஷ்பவல்லி
  ஊர்: பூந்தமல்லி
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடியில் திருநட்சத்திர விழா  
     
 தல சிறப்பு:
     
  வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பூந்தமல்லி, சென்னை.  
   
போன்:
   
  +91 44 - 2627 2066 
    
 பொது தகவல்:
     
 

ராமானுஜரின் குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலமான இந்தக் கோயிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதிகளும் உண்டு. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடப்பது சிறப்பு.



 
     
 
பிரார்த்தனை
    
 

ஜோதிடரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளோர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள பெருமாளை வேண்டுகின்றனர்.



 
    
நேர்த்திக்கடன்:
    
  வரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  சூரியத்தலம்: வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது. ஜோதிடரீதியாக சூரியதசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளோர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

மல்லிகையில் தாயார்: இங்குள்ள மகாலட்சுமி தாயார் மல்லிகை மலரில் அவதரித்தாள். இவளை புஷ்பவல்லி என்று அழைக்கிறார்கள். இவள் பூவில் இருந்தவள் என்பதால் இவ்வூருக்கு பூவிருந்தவல்லி எனப் பெயர் இருந்தது. இப்போது அது மருவி பூந்தமல்லி ஆகிவிட்டது. பக்தர்கள் புஷ்பவல்லிக்கு மல்லிகை மாலை அணிவித்து வழிபடுவர். வைகாசி பிரம்மோற்ஸவத்தின்போது இவளுக்கு புஷ்பயாகம் நடக்கும். இவ்விழாவின்போது சுவாமி பள்ளியறையில் சயனக்கோலத்தில் எழுந்தருளுவார். பங்குனி உத்திரத்தன்று வரதராஜர், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், புஷ்பவல்லி தாயார்களுடன் சேர்ந்து காட்சி தருவார்.

மூன்று கருடசேவை: திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள் முதலில் ஸ்ரீரங்கம் சென்றார். அவருக்கு காட்சி தந்த சுவாமி, தான் காவிரிக்கரையில் இருப்பதால் குளிர்ச்சியாக இருப்பதாகவும், எனவே விசிறத் தேவையில்லை என்றும் சொன்னார். பின் அவர் திருப்பதி சென்றார். வெங்கடேசர் அவரிடம் தான் மலை மீதிருப்பதால் தனக்கு குளிர் அதிகம் என்றார். அடுத்து அவர் காஞ்சிபுரம் வந்தார். காஞ்சி வரதராஜர், பிரம்மா நடத்திய யாக குண்டத்தில் இருந்து தோன்றியதால் உக்கிரமாக இருந்தார். அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, திருக்கச்சிநம்பிகள் அவருக்கு விசிறி சேவை செய்தார். இந்தக் கோயிலில் திருப்பதி வெங்கடேசர்,  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதிகளும் உண்டு. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடத்தப்படுகிறது. பங்குனியில் வரும் ஒரு ஞாயிறன்று மூவரும் திருக்கச்சிநம்பிக்கு கருடசேவை காட்சி தருவர்.

குரு தரிசனம்: திருக்கச்சிநம்பிகள் கையில் விசிறியுடன் காட்சியளிக்கிறார். இவர் ராமானுஜரின் குரு ஆவார். ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதூரில் அவரது திருநட்சத்திர விழா நடக்கும்போது, இங்கிருந்து மாலை, பரிவட்டம், பட்டு கொண்டு செல்வர். மாசியில் திருக்கச்சிநம்பியின் அவதார விழா நடக்கும்போது, காஞ்சி வரதராஜர் கோயிலில் இருந்து மாலை, பரிவட்டம், பட்டு இங்கு வரும். அன்று வரதராஜர் இவரது சன்னதிமுன் எழுந்தருளுவார். அப்போது நம்பி இயற்றிய தேவராஜ அஷ்டகம் பாடி விசேஷ பூஜை செய்வர். வருடத்தில் இந்நாளில் மட்டும் மூலவர் நம்பிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். ஆனி மிருகசீரிஷத்தன்று 108 கலச பூஜை செய்து, வரதராஜர், புஷ்பவல்லி, ஆண்டாள் மற்றும் திருக்கச்சிநம்பிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும். பிரகாரத்தில்உள்ள திருக்கச்சிநம்பியின் குரு ஆளவந்தாருக்கு, ஆடியில் திருநட்சத்திர விழா நடக்கும்.
 
     
  தல வரலாறு:
     
 

1009ம் ஆண்டில் இங்கு வசித்த வீரராகவர்- கமலாயர் தம்பதியின் மகனாக அவதரித்தவர் திருக்கச்சி நம்பி. இவர் தினமும் காஞ்சிபுரம் சென்று, வரதராஜரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நந்தவனம் அமைத்து, அங்கு பூத்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கி சுவாமிக்கு அணிவித்து வந்தார். மேலும், சுவாமிக்கு ஆலவட்ட சேவையும் (விசிறுதல்) செய்வார். வயதான காலத்தில் தள்ளாடியபடியே காஞ்சிபுரம் கிளம்பினார். தன் பக்தனின் சிரமம் கண்ட வரதராஜர், பூந்தமல்லிக்கே வந்து அவருக்கு காட்சி தந்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.



 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar