மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு இருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
நெற்குன்றம், கோயம்பேடு பூந்தமல்லி செல்லும் வழியில், சென்னை.
போன்:
+91 99628 11792
பொது தகவல்:
இங்கு சந்தானகோபாலன், விநாயகர், வரத ஆஞ்சநேயர், விஷ்ணுதுர்கை, விஷ்வக்சேனர், சனிபகவான் முதலான தெய்வங்கள் உள்ளன.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள சந்தான கோபாலரை வேண்டிச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இந்தக் கரி வரதர் சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் வடிவமைக்கப் பெற்றவர். காஞ்சி வரதரை ஒத்தவர். மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு. இவருக்கு விசேஷமான தைலக்காப்பு மற்றும் திருமஞ்சனமும் உண்டு. வைகானஸ முறைப்படி மற்ற விசேஷங்களும் உண்டு. மூலவருக்கும் உத்ஸவருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. உத்ஸவர் தன் கையில் கதை வைத்திருக்கிறார். இவர் சத்யநாராயணரின் அம்சம்! அதனால், பவுர்ணமி நாட்களில் இந்தக் கரி வரதருக்கு விசேஷ பூஜை உண்டாம் ! தாயாருக்கு தனிச் சன்னதி கிடையாது. வரத ஆஞ்சநேயர் என்ற அனுமன் சன்னதியும் உண்டு. இவரும் மகா வரப்பிரசாதி ! சனிபகவானின் பார்வை பக்தர்கள் மேல் நேரடியாகப் படக்கூடாது என்பதற்காக அவர் கால் ஒன்று ஊனமானதாகவும், அதனால் சற்றே தலை சாய்த்து சனிபகவான் இருப்பதாகவும், இந்த தத்துவத்தை உணர்த்த அனுமனும் இங்கு சற்றே தலைசாய்த்து முழங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் இருக்கிறார். உத்ஸவருடன் சந்தான கோபாலனும் உள்ளார். பிள்ளைவரம் வேண்டுவோர், இவரைப் பிரார்த்தனை செய்தால், அவர்கள் வீட்டில் குழந்தைச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
கரி என்றால் யானை என்று பொருள் வருமே ! ஏன் இந்தப் பெருமாள், தன் பெயருடன் ஆனைமுகத்தான் பெயரையும் இணைத்துக்கொண்டுள்ளார்? கஜேந்திர மோட்சக் கதை நினைவுள்ளதா? கடிகொள் பூம்பொழிலாய் காமமுறு பொய்கையாய் தாமரை மலர்களுடன் அந்தத் தடாகம் விளங்க, அதை வேழம் (யானை) பார்த்து நித்யம் ஒரு மலரை பக்தியுடன் மாலோனுக்குச் சமர்ப்பிக்க, அந்தக் கரியின் விதிப்படி ஒரு நாள் முதலை ஒன்று அதன் காலைப் பிடிக்க, நெடிய போராட்டத்துக்குப் பின் தோல்வியடைந்த யானை ஆதிமூலமே என அழைக்க, சரணாகதி என்று வந்த முந்தைய பக்தர்கள் பிரகலாதன் மற்றும் பாஞ்சாலியை விரைந்து வந்து காத்ததைப் போல, இந்தக் கரியையும் காப்பாற்றி, முதலை முகத்தில் கரி பூசி, இருவருக்குமே மோட்சம் தருகிறார் பரந்தாமன். இந்தச் சம்பவம் மதுரவாயிலில் நிகழ்ந்ததென்று ஒரு கருத்தும், நெற்குன்றத்தில் நடந்ததாக இன்னொரு கருத்தும் நிலவுகிறது. ஸ்ரீமத் பாகவதமோ, பாற்கடலின் உள்ளே திரிகூட பர்வதம் என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ஒரு தடாகத்தில், இந்த கஜேந்திர மோட்சம் நடந்ததாக விவரிக்கின்றது. கபிஸ்தலம் போன்ற தலங்களும் உதாரணமாகச் சொல்லப்படுகின்றன. கரி மோட்சம் எங்குதான் நடந்தது? ஒரு காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பாரத நாடு, இன்று சுருங்கி சிறிய தீபகற்பம் போல் இருப்பதும் (சரித்திர ஆராய்ச்சியாளர் கூற்று), அறுபதுகளில் நாம் கண்ட தனுஷ்கோடி பிறகு காணாமல் போனதும் உண்மைதானே ! எனவே, இந்த ஆராய்ச்சியைத் தவிர்த்துவிடுவோம். கண் இமைகள் மூடிய நிலையில் பக்தர்தம் பரிபாலனத்துக்காக (லோகசேமம் வஹாம்யஹம்) எப்போதும் யோசனையில் இருப்பதுபோல ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் காட்சி தருகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:மூலவர் கரி வரதர் சுமார் ஐந்தடி உயரம். நான்கு திருக்கரங்கள். அபய ஹஸ்தங்கள் உண்டு. தொப்புளுக்குக் கீழே சிம்ம முகம். இடது மார்பில் ஸ்ரீதேவி வசிப்பதற்கான வடு இருப்பது சிறப்பு.
இருப்பிடம் : சென்னை பாரிமுனை அல்லது கோயம்பேட்டிலிருந்து, பூந்தமல்லி செல்லும் பேருந்தில் நெற்குன்றம் ரேஷன் கடை ஸ்டாப்பில் இறங்கி இடதுபுறம் 50 அடி நடந்தால், ஏரிக்கரைத் தெருவின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
சென்னை
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி : சென்னை:
தாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827 லீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343 சோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101 தி பார்க் போன்: +91-44-4214 4000 கன்னிமாரா போன்: +91-44-5500 0000 ரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525 அசோகா போன்: +91-44-2855 3413 குரு போன்: +91-44-2855 4060 காஞ்சி போன்: +91-44-2827 1100 ஷெரிமனி போன்: +91-44-2860 4401, 2860 4403 அபிராமி போன்: +91-44-2819 4547, 2819 2784 கிங்ஸ் போன்: +91-44-2819 1471 சன் பார்க் போன்: +91-44-4263 2060, 4264 2060.