பங்குனி உத்திரம், சித்திரை வருடபிறப்பு, திருக்கார்த்திகை, ஆடி மற்றும் தை கிருத்திகை.
தல சிறப்பு:
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் செங்குந்தர் சமூகத்தவரால் அமைக்கப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
மேற்கு சைதாப்பேட்டை, சென்னை.
பொது தகவல்:
இங்கு காசி விஸ்வநாதர், பைரவர், செவ்வாய் ஆகியோர் தனிச்சன்னிதியில் அருள்புரிகின்றனர்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வீடு,நிலப் பிரச்சனைகள் நீங்க, சகோதர பகை நீங்க, திருமணத் தடைகள் நீங்க வழிபட்டு செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் உப்பு மிளகு காணிக்கை செலுத்தியும், வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தும், அங்காரகனுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சார்த்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் செங்குந்தர் சமூகத்தவரால் அமைக்கப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள். அன்று தொட்டு இன்று வரை அவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருவதால், இந்தப் பகுதிக்கு செங்குந்தர் தோட்டம் என்று பெயர் வந்ததாம். துவக்கத்தில் முருகப்பெருமான் சன்னதியுடன் மட்டுமே திகழ்ந்த ஆலயம். பிற்காலத்தில் பெரிய ஆலயமாக விளங்குகிறது.
தல வரலாறு:
சுமார் நூறு வருடங்களுக்கு முன், ஒருநாள் நள்ளிரவில் கோயிலுக்குள் திருடன் ஒருவன் நுழைந்துவிட்டான். முருகப்பெருமானின் நகைகளைத் திருடும் நோக்கில், சுவாமியின் திருமேனியில் கை வைத்தானோ இல்லையோ.... அவனது பார்வை பறிபோனது. அந்தத் திருடன் கதறினான். அதற்குள் விஷயம் அறிந்து பொதுமக்களும் பக்தர்களும் அங்கே கூடிவிட்டார்கள். திருடனை என்ன செய்யலாம் என யோசித்தபோது முருகனே அவனைத் தண்டித்து விட்டார். நாம் ஒன்றும் செய்யவேண்டாம் என்று எல்லோரும் ஏகமனதாகத் தீர்மானித்து அவனை விட்டுவிட்டார்கள். அதன் பிறகு இங்குள்ள முருகனின் மகிமை இன்னும் அதிகமாகப் பரவியது என பக்தர்கள் பரவசத்துடன் கூறுகிறார்கள்!