சித்திரையில் ராமானுஜர் விழா 10 நாள், வைகாசியில் பிரம்மோற்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி, மாசிமகம், பங்குனி உத்திரம், ராமநவமி.
தல சிறப்பு:
தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலதுபுறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். நவக்கிரகங்களுக்கு தனிச்சன்னதி உள்ளது. இச்சன்னதியில் ஒரு தாமரையின் மீதுள்ள பீடத்தின் மீது அனைத்து கிரகங்களும் இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை,
சென்னை -600 019.
போன்:
+91- 99401 73559.
பொது தகவல்:
விமானம்: திரிதளம். தினமும் காலையில் சுவாமி சன்னதி முன்பு கோமாதா பூஜை நடக்கிறது. ராமர், ஆண்டாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். வைகாசியில் தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது. அப்போது சக்கரத்தாழ்வார் தீர்த்த நீராடுகிறார்.
இத்தலத்திற்கு செல்பவர்கள் இங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமியையும் தரிசித்து திரும்பலாம்.வடக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி கோயில், சிவனருள் பெற்று முக்தியடைந்த பட்டினத்தார் கோயிலும் இவ்வூரில் பார்க்க வேண்டிய தலங்களாகும்.
பிரார்த்தனை
கல்யாண வரதராஜரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமி, தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
தலபெருமை:
பவளவண்ணப்பெருமாள்: இங்குள்ள உற்சவர் பவளவண்ணப்பெருமாள் பிரசித்தி பெற்றவர். இவர் இடது கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார். பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் உற்சவர் பவளவண்ணர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தாயார் சன்னதி முன்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அப்போது பவளவண்ணருக்கும்,பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று முழுதும் பெருமாள், தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கும். மறுநாள் காலையில் இவர் மீண்டும் மூலஸ்தானம் திரும்புகிறார்.திருக்கல்யாணத் தின்போது திருமணமா காதவர்கள் சுவாமிக்கு மட்டைத்தேங்காய் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். பின்பு இந்த தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜையறையில் வைத்து வணங்குகிறார்கள். இவ்வாறு செய்வதால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. திருமண வரம் அருளும் பெருமாள் என்பதால் இவருக்கு, "கல்யாண வரதராஜப்பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
கர்ப்ப உற்சவம்: ராமநவமியை ஒட்டி இங்கு 9 நாட்கள் விழா நடக்கிறது. பெரும்பாலான கோயில்களில் இவ்விழா, நவமியில் துவங்கி 9 நாட்கள் வரையில் நடக்கும். ராமர் பிறந்த பின்பு கொண்டாடப்படும் விழா என்பதால் இதனை, "ஜனன உற்சவம்' என்பர்.ஆனால் இத்தலத்தில், ராமர் பிறந்த தினத்திற்கு முன்பாக விழா துவங்கி, நவமியன்று விழா முடிகிறது. இதனை ராமர் பிறக்கும் முன்பு கர்ப்பத்தில் இருக்கும்போது எடுக்கப்படும் விழாவாக கருதுவதால், "கர்ப்ப உற்சவம்' என்றே அழைக்கப் படுகிறது.நவமியன்று, ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. முற்காலத்தில் இங்கு "கர்ப்ப உற்சவம்' "ஜனன உற்சவம்' என மொத்தம் 18 நாட்கள் விழா நடந்தது. தற்போது கர்ப்ப உற்சவம் மட்டும் 9 நாட்கள் நடக்கிறது.
தல வரலாறு:
முற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கோலட்துரை என்பவர் இப்பகுதியை நிர்வகித்து வந்தார். அவரிடம் விஜயராகவாச்சாரியார் என்னும் பெருமாள் பக்தர் முக்கிய பொறுப்பில் பணியாற்றினார். தினமும் காஞ்சிபுரத்திலுள்ள பவளவண் ணப்பெருமாளை தரிசிப்பது இவரது வழக்கம். பவளவண்ணரை வணங்காமல் எந்த வேலையையும் செய்ய மாட்டார். இவ்வாறு விஜயராகவர் தொடர்ந்து காஞ்சிபுரம் சென்றுவரவே, அவருக்காக கோலட்துரை இங்கு ஒரு பெருமாள் கட்டித் தந்தார். விஜயராகவர் இந்த பெருமாளை வணங்கி வந்தார். ஆனாலும், அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. மீண்டும் அவர் காஞ்சிபுரம் சென்றார். பவளவண்ணரை தரிசித்து இருப்பிடம் திரும்பினார். கோலட்துரை விசாரித்தபோது, விஜயராகவர் பவளவண்ணர் கோயிலின் உற்சவர் அழகில் மயங்கி தினமும் காஞ்சிபுரம் செல்வதை அறிந்தார். எனவே, அத்தலத்திலுள்ள உற்சவரை இங்கு கொண்டு வந்தார். விஜயராகவர் சுவாமியை வணங்கினார். சுவாமி அவருக்கு காட்சி தந்து, "எனக்கு திருமேனியில் எந்த வித்தியாசமும் கிடையாது. என்னை நினைக்கும் பக்தர்களின் உள்ளங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்,'' என்றார். உண்மை உணர்ந்த விஜயராகவாச்சாரியார் தன் வாழ்நாள் முழுதும் இத்தல பெருமாளுக்கு சேவை செய்தார். இவ்வாறு பக்தருக்காக பெருமாள் காட்சி தந்த தலம் இது. இங்கு சுவாமி வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:தாயார் பெருந்தேவி சுவாமிக்கு வலதுபுறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். நவக்கிரகங்களுக்கு தனிச்சன்னதி உள்ளது. இச்சன்னதியில் ஒரு தாமரையின் மீதுள்ள பீடத்தின் மீது அனைத்து கிரகங்களும் இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இருப்பிடம் : சென்னை எக்மோர் இருந்து 12 கி.மீ., சென்ட்ரலில் இருந்து 7 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் திருவொற்றியூர் இருக்கிறது. எலக்ட்ரிக் ட்ரெயினில் பீச் ஸ்டேஷன் சென்று அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். இங்குள்ள காலடிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்து செல்லலாம். நேரடி பஸ் வசதியும் உண்டு.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
சென்ட்ரல்
அருகிலுள்ள விமான நிலையம் :
மீனம்பாக்கம்
தங்கும் வசதி : சென்னை
தாஜ் கோரமண்டல் +91445500 2827 லீ ராயல் மெரிடியன் +91442231 4343 சோழா ஷெரிட்டன் +91442811 0101 தி பார்க் +91444214 4000 கன்னிமாரா +91445500 0000 ரெய்ன் ட்ரீ +91444225 2525 அசோகா +91442855 3413 குரு +91442855 4060 காஞ்சி +91442827 1100 ஷெரிமனி +91442860 4401 அபிராமி +91442819 4547 கிங்ஸ் +91442819 1471