சபரிமலைக்கு சென்ற பிறகு பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆவலில் சிலர் பம்பை நதிக்கரையிலேயே இருமுடி கட்டி மலை ஏறுகிறார்கள். இவர்களால் பதினெட்டாம்படியில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் விரதமிருந்து வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். முறையாக விரதமிருந்து குருசாமி அல்லது கோயில் அர்ச்சகர் மூலம் மாலை அணிந்து தான், கன்னி சுவாமிகள் மலைக்கு செல்ல வேண்டும். பம்பைக்கு சென்ற பிறகு மாலையணிந்து மலை ஏறுவது பாவச்செயல்.